நகெட் சிறப்பம்சங்கள்



கூகுள் வெளியீடான ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் அடுத்த பதிப்பான 7.0-விற்கு நுகெட் ( Nougat ) என்று பெயரிடப்பட்டுள்ளது. 


இப்பெயரை தமிழில் நகெட் என்றும், நவ்கட் என்றும், நுகெட் என்றும் பலவிதமாக உச்சரிக்கின்றனர். சர்க்கரை, தேன், பருப்புகள், முட்டை ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் ஐரோப்பிய மிட்டாயின்  இது பெயர்.  

பிரெஞ்சு மொழியில் நுகெட் என்றே உச்சரிக்கப்படுகிறது.ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெல்லோ பதிப்பு சென்ற ஆண்டு இறுதியில் வெளியானது. 
தொடர்ந்து அடுத்த பதிப்பிற்கான சோதனைப் பதிப்பு மார்ச் 2016ல் வெளியானது. 
தற்போது சோதனையில் இருக்கும் இப்பதிப்பிற்கான பதிப்பு எண், பெயர் ஆகியவை சில வாரங்களுக்கு முன்புதான் முறையாக அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. 

இப்புதிய பதிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
 இந்த நகெட்  இயங்கு தளத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஆண்ட்ராய்ட் இணையதளத்தில் தற்போது தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரே சமயத்தில் இரண்டு திரைகளைத் திறந்து பணியாற்றும் வசதியை இந்த நகெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கு தரவுள்ளது. 
ஒரு ஸ்மார்ட் போனில்  இரு வேறு அப்ளிகேஷன் திரைகளில் ஒரே சமயத்தில் பணியாற்றும் வசதி இப்பதிப்பில் வழங்கப்படவுள்ளது. 

இதன் மூலம் வீடியோ அல்லது போட்டோக்களை ஒரு அப்ளிகேஷனில் பார்த்துக் கொண்டே திரையில் மற்றொரு அப்ளிகேஷனை இயக்கி அதிலும் பணியாற்றிக் கொண்டிருக்க முடியும். 
திரையை இரண்டாகப் பிரித்து இருவேறு ஆப்ஸ்களில் பணியாற்றுவது அலைபேசியாளர்களுக்கு ஒரு புதிய இனிய அனுபவம். 

ஆனால் இந்த வசதி ஏற்கனவே ஐஓஎஸ், விண்டோஸ் இயங்குதளங்களில் இருக்கிறது.ஆனால்  அதிக அளவு உபயோகத்தில் உள்ள  ஆண்ட்ராய்டிற்கு தற்போதுதான் அறிமுகம்  ஆகிறது.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் வைரஸ் தாக்குதல் இருந்தால் அதனை கண்டறிய வசதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் தாக்குதல் இருந்தால் போனை ரீபூட் செய்து பாதுகாப்புடன் பயன்படுத்தும் வகையில் லிமிடெட் யூஸ் மோட் என்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. 
இது விண்டோஸ் கணினிகளில் சேஃப் மோட் என்ற பெயரில் உள்ள வசதியைப் போன்றது.இதே போன்று, குறிப்பிட்ட ஒரு எண்ணிலிருந்து நமக்கு வரும் அழைப்புகளை பிளாக் செய்யும் வசதியை மேம்படுத்தி போனில் உள்ள அனைத்து ஆப்ஸ்களிலும் செயல்படும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் வாட்ஸ்அப், வைபர் போன்ற பிற அப்ளிகேஷன்களிலும் பிளாக் செய்யப்பட்ட எண்ணிலிருந்து அழைப்புகள் வந்தால் தடுக்கப்படும்.

தற்போதிருக்கும் கூகுள் கேமரா ஆப்சில் வீடியோவை தற்காலிகமாக நிறுத்திவைத்து படம் எடுக்கும் ஞயரளந வசதி இல்லை. இவ்வசதி புதிய பதிப்பில் இணைக்கப்படுகிறது. 

அத்துடன், முன்பக்க கேமராவில் படம் எடுக்கும்போது அதனை அதே நிலையில் மாற்றி பின்புற கேமராவை இயக்கி படத்தை தொடர்ச்சியாக எடுக்கும் வசதியும் கொண்டுவரப்படுகிறது. 
இதன் மூலம் முன்புறம், பின்புறம் கேமராவைத் திருப்பாமல் மாற்றி மாற்றி கேமராக்களை இயக்கிப் படம் எடுக்கலாம். 
இந்த வசதியுள்ள கூகுள் கேமரா 4.1 ஆப்ஸ் பிளே ஸ்டோரில் கிடைத்தாலும், கேமராவை மாற்றிக் கொள்ளும் வசதி அடுத்த ஆண்ட்ராய்ட் 7.0 பதிப்பில்தான் செயல்படும்.

தடையின்றி வீடியோ பார்க்கலாம்பிக்சர் இன் பிக்சர் எனப்படும் புதிய வசதி மூலம் நேரலை அல்லது யூடியூப் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேறு அப்ளிகேஷன்களைத் திறந்து பணியாற்ற வேண்டியிருந்தால் வீடியோவை ஒரு முனையில் சிறிய விண்டோவில் ஓடவிட்டு, வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஸ்மார்ட்போன்களில் உள்ள முக்கியப் பிரச்சனை பேட்டரி அதிகமாக தீர்வதுதான். இதற்கு இப்பதிப்பில் சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

போன் பயன்படுத்தாதபோது செயல்பாட்டிலிருக்கும் வீடியோ தொடர்பான ஆப்ஸ்களை தானாகவே நிறுத்திவிடவும், மீண்டும் ஸ்கிரீனை இயக்கும்போது இயங்கும்படியாகவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் வீடியோ மற்றும் போட்டோக்களை பார்க்கும்போது ஏற்படும் டேட்டா இழப்பை சரிசெய்ய போனின் திரைக்கேற்ற விதத்தில் வீடியோ தரத்தைக் குறைத்திடும் வசதி தரப்பட்டுள்ளது. 
இதன் மூலம் சிறிய அளவு டேட்டாவினைக் கொண்டோ படங்களைப் பார்ப்பது எளிதாகும்.

குறுஞ்செய்தி, மின்னஞ்சல், சமூக வலைத்தள உரையாடல்கள், புதிய பதிவுகள், வாட்ஸ்ஆப் செய்திகள் எனப் பலவற்றையும் அப்ளிகேஷன்களைத் திறக்காமல் காட்டும் நோட்டிபிகேஷன்ஸ் வசதி சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 

தகவல்களை தனித்தனியே குரூப்பாக பிரித்து எளிதாக வரிசைப்படுத்திக் காட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல் என்ன என்பதை ஒரு வரியில் படிக்கலாம். 

அப்ளிகேஷனைத் திறக்கவேண்டிய அவசியம் இல்லை.மேலும், இப்பதிப்பில் ஜாவா 8 பதிப்பு மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது இன்னும் புதிய ஆப்ஸ்கள் உருவாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது நீங்கள் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி விட்டிர்கள்.

=======================================================================================
இன்று,
ஜூலை-27.
நாவலர் சோமசுந்தர பாரதியார்
  • தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)
  • பிரெட்ரிக் பாண்டிங் குழுவினரால்  இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)
  • 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
  • பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
  • முன்னாள்இந்திய குடியரசுத்தலைவர்  அப்துல் கலாம் இறந்த தினம்(2015)
அப்துல் கலாம் .
1931: தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவில் அப்துல் கலாம் பிறந்தார்.
1954: திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் பெற்றார்.
1960: சென்னை எம்.ஐ.டி., கல்லுாரியில் 'ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' பட்டம் பெற்றார்.
1960: டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.
1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.
1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் ரோகிணி செயற்கைக்கோளை,'எஸ்.எல்.வி.,- 3' ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவினர். இதன் மூலம்உலகின் பார்வையை இந்தியா மீது திருப்பினார்.
1980-90: ஒருங்கிணைந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தின் கீழ், அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
1981: பத்ம பூஷன் விருது பெற்றார்.
1990: பத்ம விபூஷன் விருது பெற்றார்.
1992 - 99: டி.ஆர்.டி.ஓ., அமைப்பின் செயலராகவும், பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.
1997: நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது பெற்றார்.
1998: பொக்ரான் அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது.
1999: அப்துல் கலாம் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் 'அக்னி சிறகுகள்'ஆங்கிலத்தில் வெளியானது.
1999 - 2001 : பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.
2002: நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
2007: ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.
2007: திருவனந்தபுரத்தில் இஸ்ரோவால், தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல் வேந்தராக பொறுப்பேற்றார்.
2007-15 : ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின், பல்வேறு பல்கலைக்கழங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.
2015: மேகாலயாவில் மறைந்தார்.
=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?