அம்மாவின் ஆணைக்கிணங்க....



"அம்மாவின் ஆணைக்கிணங்க "என்ற வார்த்தை மட்டுமின்றி உள்ளாடசி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இப்போதைக்கு தேர்தல் நடப்பது போல் தெரியவில்லை என்று ஒரு மாயை உருவாக்கி தமிழகம் முழுக்க நடக்க விட்டு விட்டு அதிமுக மட்டும் வட்டம்,ஊராட்சி,ஒன்றியம் என்று அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் ஆட்களை தேர்வு செய்து முடித்தவுடன் அதுவரை காத்திருந்த மாநில தேர்தல் ஆணையம் "நாளைமுதல் வேட்பு மனுத்தாக்கல் இப்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுல்" என்கிறது.
நாம் நம்பித்தான் ஆகவேண்டும் தேர்தல் ஆணையம் சுயாட்சி அமைப்பு என்று.
ஆனால் மாநில தேர்தல் ஆணையம் முன்பிருந்தே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் அது இல்லை மறைவு காய் தான்.
ஆனால் இரட்டை இலை வந்த பின்னர் அந்த இலை மறைவில்தான் ஆணையமே.அக் காயின் மேல் இருப்பதே இரட்டை இலைதான்.

ஒரு முதல்வர் உடல்நல சிகிசைக்காக மருத்துவமனையில் இருக்கையில் இப்படி அவசர தேர்தல் அறிவிப்பு இதுவரை எங்காவது வெளியாகி  இருக்கலாம்.
ஆனால் ஜெயலலிதா ஆடசியில் ..?

ஒரு கழிப்பறை திறப்பு முதல் செம்பரம்பாக்கம் ஏரி திறப்புவரை அவர் நல்ல உடல் நிலையில் ஓய்வில் இருந்தாலும் கூட காத்திருக்கும் அதிகார மையங்கள் இப்படி ஒரு ஒரு அப்பலோ சிகிச்சை காலத்தில் ஒரு முக்கியமான தேர்தல் அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் ஜெயலலிதா அனுமதியின்றியா வந்திருக்கும்.
அப்பலோ வில் அவர் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தரா என்ன?


நோயுடன் சிகிக்சை பெரும் முதல்வர் உடல் நிலை குறித்து அரசின் தலைமைசெயலாளர்தான் பத்திரிக்கை செய்தி வெளியிட வேண்டும்.அதுதான் மரபு.இதுவரை.
ஆனால் இங்கு மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள்.

காய்சசல் குணமாகி விட்டது .நல்ல உடல் நிலை என்கிறார்கள்.ஆனால் மருத்துவமனை வசம் தொடர்கிறது...
அம்மா உணவங்கள் மேயர் இல்லாமலேயே திறக்கப்படுகிறது,முதல்வர் பெயரில் தினம் ஒரு அரசு அறிவிப்பு வருகிறது.

மாநில தேர்தல் ஆணையர் தேர்தல் நடைமுறை அமுலுக்கு 25 ம் தேதிமுதல் நடைமுறை என்கிறார்.
ஆனால் 26 ம் தேதி கல்வித்துறையில் பதவி உயர்வுகள்,இடமாற்றங்கள் அறிவிப்பு வருகிறது.
அக்கல்வித்துறை கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ன?

மரபுகள் மட்டுமே ஜெயலலிதா ஆடசியில் மீறப்படவில்லை.

சட்ட,திட்டங்களே கண்டுகொள்ளப் படுவதில்லை.
ஜெயலலிதாவின் ஆணைக்காக காத்திருப்பது அதிகாரிகள்,அமைச்சர்கள் ,மற்றும் அவசர நடவடிக்கை கோப்புகள்.
தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அவகாசமில்லாமல் உள்ளாடசி தேர்தல் அறிவிப்புகள்.
இதற்கு அந்த ஆணையரின் மனசாட்சி தான் உறுத்த வேண்டும்.காலில் விழுவது அடிமைகளுக்கும்,அமைசர்களுக்கும் மட்டும்தான் உரிமை என்ற எண்ணத்தை  இது போன்ற அதிகாரிகள் தகர்க்கிறார்கள்.

ஓர் முதல்வர் அரசு சார்பற்ற தனியார் மருத்துவமனையில் சிகிசை பெறலாமா?என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இதுதான் இந்த ஜெயலலிதா ஆட்சியில் முறைப்படி நடந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் நடைபாதை ஓரம் கிழிந்த பாயில் கிடந்து சிகிச்சை பெற அவர் என்ன கக்கன் அய்யாவா?

அமைச்சராக இருந்தும் கிழிந்த பாயில் கிடந்து சிகிச்சை பெற்ற கக்கன் அய்யாவுக்கு இன்றைய  நத்தம் விசுவநாதன் ,அன்புநாதன் போன்றோர் நிரம்பிய அரசியல்வாதிகள் மத்தியில் என்ன பெயர் வைத்திருப்பார்கள்?

முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்க வசிக்கும் போயசு தோட்டம்,பின் அந்த ஓய்வின் அலுப்புத் தீர ஓய்வெடுக்கும் கொடநாடு போன்ற அரண்மனைகளில் மருத்துவம் சார்ந்த எல்லா (டயாலிஸ் )மருத்துவ கருவிகளும்,மருந்துகளும் ,மருத்துவர்களும் உண்டாம்.
இதுவரை பலமுறை அவர் நோய்வாய்ப்பட்டாலும் எல்லா சிகிசைகளும் அங்கேயேதான்.வெளியே அவர் மருத்துவமனைக்கு வந்ததாக இதுவரை ஒரு செய்தி கூட வெளியானாதில்லை.
ஆனால் சாதாரண ஒரு நாள் காய்சசல்,நீரிழப்புக்கு அப்பலோ .
கரணம் என்ன?
இதுவரை இரண்டு உண்மைகளை  உள்ளடக்கிய  செய்திகள்தாம் கட்சிக்காரர்களிடம்.

1.உள்ளாடசி தேர்தலில் அனுதாப வாக்குகளை கொஞ்சமாவது பெற்றுத்தந்தது தோல்விகளை தவிர்க்கலாம்.
சட்டமன்றத் தேர்தலில் தெரிந்த எதிர்ப்பலையை தேர்தல் ஆணைய ,மோடி ஒத்துழைப்புடன் சரி கட்டி தப்பியாயிற்று.அதன் பின் ஆடசி அவலம் வாக்குகளை மேலும் சரித்து விட்டது.அதை சரி செய்ய அம்மாவின் உடல் நலம் தான் நிர்வாகம் முடங்க காரணம் எனலாம்.

2.உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாக காலம் நெருங்கி விட்டது.ஒரு நீதிபதி தீர்ப்பை எழுதி உரையிட்டு கொடுத்து விட்டார்.மற்றவர் தீர்ப்பை எழுதிக்கொண்டேயிருக்கிறார்.(குமாரசாமி போல் அல்லாமல்  தப்பிவிக்க வைக்க நல்ல குறிப்புகள் தேடவேண்டாமா?)

இவர்தான் திமுக தரப்பை வாதிட வரவேண்டாம் .இதுவரை வாதிட்டாதே போதும்.என்றவர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் அது தவறா ?என்ற அதிரடி வினாவை கேட்ட நீதியரசர்.
இருந்தாலும் தீர்ப்பு எதிராகி விட்டால் மேல்சிகிசைக்காக அமெரிக்கா, மேலை நாடு செல்லலாம் .அதன் மூலம் பரப்பன அக்கரகாரம் போன்றவற்றில் இருந்து மீளலாம்.

பின்னர் நான்கு நீதியரசர்களை கொண்டு விசாரிக்க வைக்கலாம் என்ற எண்ணம்.
அப்படி நடக்குமா என்று ஐயமா? எதுவும் நடக்கலாம் இந்தியா ஒரு ஜனநாயக நாடு.

[இந்த தட்டச்சு சரியில்லை.நீதியரசர் என்று தட்டி விட்டு பார்த்தால் நிதியரசர் என்று வரு கிறது.
எத்தனை முறைதான் மாற்றம் செய்ய.?
அதனால் இனி நீதியரசர் என்ற வார்த்தை விட்டு விடலாம் ஜட்ஜ் யை உபயோகிக்கலாம் என்றிருக்கிறேன்.
நீதிபதி என்றாலும் நிதிபதி என்றே நேர்மாறாக வருகிறதே.அதனால் இனி தமிழ் வேண்டாம் ஜட்ஜெ போதும் என்றிருக்கிறேன்.]
===========================================================================================
ன்று,
செப்டம்பர்-27.


  • உலக சுற்றுலா தினம்
  • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  • நாகேஷ் பிறந்த தினம்(1933)
"நாகேஷ்"
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில், கொழிஞ்சிவாடி என்ற ஊரில், கிருஷ்ணா ராவ் -- ருக்மணி தம்பதிக்கு மகனாக பிறந்தார். 

இயற்பெயர், நாகேசுவரன் என்றாலும், அவரின் நண்பர்கள், குண்டப்பா அல்லது குண்டுராவ் என்று அழைப்பர்.
கல்லுாரிப் படிப்பு முடிந்ததும், ரயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார். 

நடிப்பின் மேல் கொண்ட காதலால், நாடகங்களில் நடிக்க துவங்கினார்.

 1959ல் வெளிவந்த, தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம், திரையுலகிற்குள் நுழைந்தார். 
சிறு சிறு வேடங்களில் நடித்தவர், நகைச்சுவை கதாபாத்திரத்திற்குள் புகுந்தார். 

அதன்பின், அவர் இல்லாத படங்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம்.

சர்வர் சுந்தரம், நீர்குமிழி உள்ளிட்ட படங்களில், கதாநாயகனாகவும் நடித்து, வெற்றி கண்டார். 
1,000 படங்களுக்கும் மேல் நடித்து புகழ் பெற்றவர்.

கமல்ஹாசனுடன் நடித்த "அபூர்வ சகோதரர்கள்,நம்மவர்,மகளிர் மட்டும் "போன்றவை இவரின் திறமையை உலகம் முழுக்க கொண்டு சென்றது.இவரை நகைசுசுவை நடைகள் மட்டுமல்ல சிறந்த பன்முக நடிகர்  நாகேஷ் என்பதை காட்டியது.

"நம்மவர்" சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதை தந்தது,

"அபூர்வ சகோதரர்கள்" நகைசுசுவை  மிக்க கொடூர வில்லனாக புதிய பரிமாணம் காட்டியது.

"மகளிர் மட்டும்" படத்தில் பிணமாக நடித்தே கைத்தட்டல்களை அள்ளினார்.

2009 ஜன., 31ல் இறந்தார்.
============================================================================================
கொள்ளி  வைக்க 11 கோடிகள்.
 மும்பையில் காலமான, சமணத் துறவியின் சிதையை தீயிட்டு எரிப்பதற்கான வாய்ப்பு, 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
புகழ் பெற்ற சமணத் துறவிகளின் சிதையை எரிப்பதற்கும், இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை பெறுவதற்கும், ஏலம் விடப்படுவது வழக்கம். 
மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், சமீபத்தில், 97, வயதான சமணத் துறவி, பிரேம்சுர்ஜி சுவாஜி, காலமானார். 
அவரது சிதையை எரிப்பதற்கான வாய்ப்பை வழங்க, ஏலம் விடப்பட்டது. 
மூன்று மணி நேரம் நடந்த இந்த ஏலத்தின் இறுதியில், 11 கோடி ரூபாய்க்கு, கூட்டாக ஏலம் கேட்ட ஐந்து பேருக்கு, துறவியின் சிதையை எரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

துறவியின் பாடையை துாக்கிச் செல்லும் வாய்ப்பு, நான்கு பேருக்கு, தலா, 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 
இறுதிச் சடங்கின் போது பயன்படுத்தப்பட்ட, புனித நீர் நிரப்பப்பட்ட, நான்கு சிறு வெள்ளிக் குடங்களை வைத்துக் கொள்ளும் உரிமை, தலா, 21 லட்சம் ரூபாய்க்கு, நால்வருக்கு கிடைத்தது. 
துறவியின் உடல், அமர்ந்த நிலையில் பாடையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஏலத்தில் வென்ற ஐந்து பேர், துறவியின் சிதைக்கு தீ மூட்டினர். 
இந்த ஏலத்தில் பெறப்படும் பணம், சமண மதம் சார்ந்த நிகழ்சிகள்,விழா செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.
"தேர்தல் ஆணையர்கிட்ட  உள்ளாடசி தேர்தலுக்கு தயாராயிட்டோம் தேதி அறிவிக்கலாம்னு சொல்லு."





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?