இதுவரை காவிரி பிரச்னை..

மோடியின் பாஜக அரசியல் விளையாட்டு...

நதிகளுக்கு என்று உருவான நடுவர்மன்றத் தீர்ப்புகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பாகும். 

1976-ஆம் ஆண்டு கர்நாடகா,மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கிடையில் கிருஷ்ணா நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு நர்மதா குறித்து ஒரு நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டது. குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருந்தன. 1980-ஆம் ஆண்டு கோதாவரி நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டது. 
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ஒடிசாஆகிய ஐந்து மாநிலங்கள் இதில் தொடர்புடையவை ஆகும். அநேகமாக மேற்கூறிய நடுவர் மன்றத் தீர்ப்புகள் வெளியாகி அமலுக்கு வந்துவிட்டன.
800 கி.மீ, நீளம் உள்ள காவிரி நதி குறித்தபிரச்சனைகளுக்குத் தீர்வு காண 2-6-1990-ல் காவிரி நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டது. 25-6-2007-ல் இது தன் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. பெருத்த சட்டப் போராட்டங்களின் ஊடே 19-2-2013-ல் இந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளிவந்தது. 

தனது தீர்ப்பை அமலாக்கும் வழியையும் காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்டது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று முறைக்குழுவை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் இதனைச் செய்யாவிட்டால் உத்தரவு காகிதத்தாளில்தான் உறங்கும் என்றும் குறிப்பிட்டது.மத்திய அரசு இதனை செய்யத் தவறியது. 

பூதாகரப்படுத்தப்படுவது போல் இது பெரிய பிரச்சனை அல்ல. இயல்பாகவே பூகோள அமைப்பிலேயே கர்நாடகா காவிரியை மட்டும்நம்பி ஜீவிக்கவில்லை. 
கிருஷ்ணா நதிதான் கர்நாடகத்தில் பெரும் பாசன நதியாகும். அதன்படுகைப் பிரதேசம் கர்நாடகத்தில் 1,16,000 மைல்விஸ்தீரணம் ஆகும். காவிரி படுகைப் பாசனம்வெறும் 33 ஆயிரம் சதுர மைல்தான். கர்நாடகத்தில், காவிரி போலவே சாராவதி, சக்கரா, நேத்திராவதி, வராகி, மகதாயி, பேதி, அக்னாகினி, பாராபோல் போன்ற 13 ஆறுகள் பாய்கின்றன. வெள்ளி அருவிகளாய் பாயும் இவற்றின் உபரி நீர் 2ஆயிரம் டி.எம்.சி. ஒவ்வொருஆண்டும் அரபிக்கடல் உப்பில் சங்கமிக்கின்றன. 

தமிழகத்திலோ ஒட்டு மொத்த விவசாயத்தில் காவிரிப் பாசனமே சரி பாதியை நெருங்குகிறது. காவிரி தமிழகத்தின் ஜீவ அப்பமாக திரவ வடிவில் உள்ளது.கர்நாடக பூகோள அமைப்பைப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி ஜெயின் பின்வருமாறு கூறினார். ‘கீழ் மாநிலங்களுக்கு தண்ணீரை வழங்கும் இடத்தில் கர்நாடகத்தை கடவுள் வைத்துள்ளார்‘. 

வாக்கு வங்கி மீது கண் வைக்காமல் பொது நலன் காக்கும் அரசாக இருந்தால்அன்பாலும் அறத்தாலும் கூட இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
இந்திய வரலாற்றில் அண்டை மாநிலங்கள்தேன் சிந்துதே வானம் என தண்ணீரை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டது உண்டு. 1958-ல்கேரளாவும் தமிழகமும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட உடன்பாடு கண்டன. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கேரள முதல்வராகவும் காமராஜர் தமிழக முதல்வராகவும் இருந்தனர். தமிழகம் 30.5 டி.எம்.சியும், கேரளா 19.55 டி.எம்.சி.தண்ணீரும் பெற்றன.

கர்நாடகத்தை தொடர்ச்சியாக ஆள்பவை காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சிகள்தாம். அவர்களிடம் இந்த அணுகுமுறை இல்லை. அவர்களோ, தென் இந்தியாவில் வாக்கு வங்கிஅரசியல் நடத்துவது கர்நாடகத்தில் மட்டும் தான். காங்கிரஸ், பாரதீய ஜனதாவின் கர்நாடகமுன்னாள் முதல்வர்கள் கிருஷ்ணா, ஜெகதீஷ் ஷெட்டர் இருவருமே காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் படி ஏறியவர்கள். 

காவிரிப் பிரச்சனையை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் பிரயத்தனம் செய்தாலும்; வகுப்புவாத அரசியல் நடத்தும் நரேந்திரமோடி காவிரி பிரச்சனையில் புது நெருக்கடியை உருவாக்கினார்.நடப்பு பாசன ஆண்டிலும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடகம் மாமூல் போலவே தண்ணீர் திறக்கவில்லை. 

ஜூன் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை கர்நாடகம் வழங்கவேண்டிய தண்ணீர் 50.057 டி.எம்.சி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழகம்,உச்ச நீதிமன்றத்தை 22-8-2016-ல் அணுகியது. உச்சநீதிமன்றம் பரந்த நோக்குடன் வாழுங்கள், வாழவிடுங்கள் என்று கர்நாடகத்திடம் கூறியது. நல்லெண்ணத்தின் அடிப்படையிலாவது கர்நாடகம் தண்ணீர் தரலாம் என்று கூறியது. 
கர்நாடகம் செவிமடுக்கவில்லை.



செப்டம்பர் 5, 6, 12, 20, 27, 30 மற்றும் அக்டோபர் 4, 5, 6ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்தீபக் மிஸ்ரா, உதய் லலித் ஆகியோரின் அமர்வுதண்ணீர் வழங்குமாறு வெவ்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. 
உச்சநீதிமன்றம் இதனைக் கூறியதும் கர்நாடகம் ஒரே விதமாக எதிர்வினை புரிந்தது. தீர்ப்பு வந்ததும் உடனே கர்நாடக அரசு அமைச்சரவைக் கூட்டத்தையும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தையும் நடத்தும். உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு அங்கீகாரம் பெற கர்நாடக சட்ட மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தும். உச்சநீதிமன்ற உத்தரவு குப்பைக்குப் போகும். எனினும் உச்சநீதிமன்றமும் சளைக்கவில்லை. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வென்று ஒரு யுக்தியை கையாண்டது. 

20-9-2016-ல் ஒரு உத்தரவு போட்டது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. கர்நாடக அரசின் தரப்பில் இதற்கு எதிர்ப்பு இல்லை.தண்ணீர் பங்கீடு குறித்து காவிரி மேற்பார்வைக்குழுவிடம் தமிழகம் முறையிட வேண்டும்என்பதுதான் கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலிநாரிமனின் வாதமாகும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகிஅப்போது ஒப்புக்கொண்டார். 30-9-2016-ல்மத்திய அரசு இதனை ஏற்றிருந்தது. அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பதிவு செய்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு நதி நீர் பங்கீட்டில் உள்ள உண்மை நிலையையும் அதற்கான முகாந்திரங்களையும் வாரியம் எடுத்துக் கொள்ளும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது. மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் தமிழக தலைமைச் செயலாளருக்கு 30-9-2016-ல் ஒரு கடிதம் அனுப்பினார். 

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழக அரசு தன் பிரதிநிதியைக் கூறவேண்டும் என்று அக்கடிதம் கோரியது. இக்கடிதத்துடன் ஒரு இணைப்பும் இருந்தது. 
மத்தியநீர்பாசனத்துறை அமைச்சகச் செயலாளருக்கு அட்டர்னி ஜெனரல் கடிதம் அனுப்பி இருந்தார்.உச்சநீதிமன்ற உத்தரவின் சுருக்கத்தைக் கூறி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மத்தியஅரசு சார்பில் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற சட்ட ஆலோசனையை முகுல் ரோத்தகி வழங்கி இருந்தார்.



உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக மத்திய நீர் வளத்துறை செயலாளர்சசி சேகர் குறிப்பிட்டார். 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆவணம் 5-வது தொகுப்பில் 8-வது அத்தியாயத்தில் வாரியம் எவ்வாறுஅமைக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. காவிரி இறுதித் தீர்ப்பை செயல்படுத்த பக்ரா-பியாஸ் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என இந்த அத்தியாயத்தின் 14-வது பத்தி கூறுகிறது. 
இதைவலியுறுத்தும் ஷரத்துக்கள் 16-வது பகுதியில் உள்ளன.எனினும் கர்நாடகம் அமைச்சரவைக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் என்ற அஸ்திரங்களை பயன்படுத்தியது. குடிநீருக்கே தண்ணீர் இல்லை. தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என தீர்மானம் நிறைவேற்றியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் 30-9-2016 அன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் தம் கவலையை தெரிவித்தது.

‘கூட்டாட்சி என்ற தத்துவத்திற்கு மதிப்பில்லையா‘ எனக் கேட்டது.கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலிநாரிமன் உச்சநீதிமன்ற உத்தரவுமதிக்கப்படவேண்ண்டும் என்ற ஆதங்கத்தை வெளியிட்டார்.


கர்நாடகத்துக்குஆதரவாக இந்நிலையில் அவர் வாதிடவில்லை. 
மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தின் பார்வையை ஆமோதித்தது. காவிரிமேலாண்மை வாரியம் குறித்த இறுதிமுடிவை நீதிமன்றத்திற்கு விடுவதாகக் கூறியது. எதுவாகஇருந்தாலும் நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என அட்டர்னிஜெனரல் முகுல் ரோத்தகி கூறினார். 

காவிரிமேலாண்மை வாரியப் பணிகள் குறித்து உச்சநீதிமன்றம் அவரை வினவியது பணிகள்துவங்கி விட்டதாகவும் நான்கு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று முகுல்ரோத்தகி கூறினார். இந்திய அரசியல் சாசனம்பிரிவு 114-ன் படி மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டவையே என்று உச்ச நீதிமனறம் கூறியது. 

தமிழகத்துக்கு தண்ணீர்தர கர்நாடகத்துக்கு இறுதி வாய்ப்பு தரப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியது. காவிரி மேலாண்மை வாரியம் நான்கு நாட்களில் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் 4-10-2016 மாலைநான்கு மணிக்குள் தமது பிரதிநிதிகள் பெயரைத் தர வேண்டும் என்று கூறியது. 

இதன் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் உண்மை நிலவரம் அறிந்து 6-10-2016-க்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்தாக வேண்டும் என்றும் கூறியது.இந்த உத்தரவின்படி தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்கள் தமது பிரதிநிதிகள் பெயரையும் கொடுத்தன. 

கர்நாடக அரசும், மத்திய அரசும் நெறி பிறழ்ந்தன. உச்சநீதிமன்ற உத்தரவை முன்னதாக ஏற்றிருந்த மத்திய அரசு, அமல்படுத்த 24 மணி நேரம் இருக்கும் போது தலைகீழாக குட்டிக்கரணம் அடித்தது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சு கொதிக்கும் துரோகத்தை மோடி அரசு செய்தது.



‘இந்த வழக்கு விசாரணையில் எங்களை (மத்திய அரசானது) ஏன் ஒரு தரப்பினராகச் சேர்க்கவில்லை?‘ என மோடி அரசு கேட்டது. 

பெற்ற பிள்ளையை மத்திய அரசே ஏன் பிறந்தாய் என்று சங்கில் விஷம் புகட்டலாமா?17 ஆண்டுகள் 568 வாய்தாக்கள் காவிரிநடுவர் மன்ற விசாரணை நடந்தது. விசாரணையை நடத்தியவர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். சாட்சிகளின் வாக்குமூலம் மட்டும் 10 ஆயிரம் பக்கங்களாகும். 

தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், பிரசுரங்கள் 50 ஆயிரம் பக்கங்கள் ஆகும். ‘நடுவர் மன்றத் தீர்ப்புக்கு இந்த பிரச்சனையை விடுவதில் ஏற்பட்ட தாமதம் இந்தப் பிரச்சனைக்கு பரிகாரம் காண்பதை மேலும் கடினமாக்கி விட்டது. நகத்தால் கிள்ளாததை கோடாரி கொண்டு தான் வெட்டவேண்டும்‘. என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஏற்கனவே கூறியுள்ளார். 


மோடி அரசின் வாதத்தை ஏற்றால் ஒரு புதிய நடுவர் மன்றம், புது தரப்பினர், புதிய விசாரணை என்றுமீண்டும் முதலிலிருந்து தொடங்குவது தான். 
இவ்வளவிற்கும் காவிரி பிரச்சனையில் நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்று நமது நாட்டின்சட்டமும் உச்சநீதிமன்றமும் கூறுகிறது. 

மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவாச் சட்டம்,1956 பிரிவு 9(3), காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைஉச்ச நீதிமன்றத்திற்கு சமமானதாக வரையறுக்கிறது. காவிரி குறித்த தாவாவில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மூலம் ஒருமனதான முடிவுக்கு வர முடியவில்லை என்றாலோ கருத்து ஒற்றுமை எட்ட முடியவில்லை என்றாலோ காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமரே இறுதி முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் முன்பே கூறி உள்ளது .

பிறகு நரேந்திர மோடி எந்த பூதக்கண்ணாடி மூலம் ஞான திருஷ்டி பெற்றார்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெறும் நிபுணர்களின் பரிந்துரைதான் என்றால் நர்மதா,கிருஷ்ணா, கோதாவரி நதி பிரச்சனைகளில் நடுவர்மன்றத் தீர்ப்பு எவ்வாறு அமல்படுத்தப்பட்டது? 

சரி நாடாளுமன்றம் மூலம்தான் மேலாண்மை வாரியம் அமைக்கலாம் என்றால் உடனே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தலாமே? 

அல்லது ஒரு அவசரச்சட்டத்தை நிறைவேற்றி பின்னர் நாடாளுமன்ற இசைவு பெறலாமே? 

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மோடி அப்படித்தானே சட்டமாக்கினார்! 

200 ஆண்டுகளாக கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் கர்நாடக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா,ஆனந்த குமார் ஓரணியில் புஜபலம் காட்டுகிறார்கள். கர்நாடகம் மத்திய அரசின் ஆதரவைப் பயன்படுத்துகிறது. 

இந்தியாவில் தானும்ஒரு மாநிலம்தான் என்ற சுயநினைவு கர்நாடகத்திற்கு எப்போதும் உண்டு.


அதனால்தான் பிரதமர் மோடி தலைமையில் மகதாயி நதிபிரச்சனை கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா முயற்சி எடுக்கிறார். 

கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மராட்டியம் முதலிய மாநிலங்கள் 21-10-2016-ல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆகிய நதிகளின் தீர்ப்பாய விசாரணையில் கர்நாடகா பங்கேற்றது. எனினும் காவிரி பிரச்சனையில் சட்டத்தை மீறும்படி மத்திய அரசு அதற்குதுணிச்சல் கொடுக்கிறது. 


காவிரி பிரச்சனையில் இந்திய அரசியல் சாசனத்தை மீறுவது மத்திய அரசுதான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஜல்தி செலமேஸ்வர், பி.லோகுர் அடங்கிய அமர்வு முன்பு குறிப்பிட்டது. 
காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு தந்திருந்தாலும் தற்காலிகப் பிரச்சனைகள் சிலவற்றுக்குத் தீர்வு காண கர்நாடகம் கோரிய அடிப்படையில் உச்சநீதிமன்றம் தற்காலிக மேற்பார்வைக் குழு அமைத்துள்ளது. இது 22-05-2013-ல் அமைக்கப்பட்டது. 

2013 ஜூன்-1,ஜூன்-12, ஜூன்- 15, 2015 செப்டம்பர்- 29, 2016செப்டம்பர்- 12, செப்டம்பர்- 19 என ஏழு கூட்டங்கள் நடத்தி உள்ளது. ஒரு முடிவுக்கும் கர்நாடகம் கட்டுப்படவில்லை. 
16-7-2013-ல் கர்நாடகம் இந்த அமைப்பே ஒரு டம்மி அமைப்பு எனக் கூறியது.அதே சமயம் 1973-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை கர்நாடகம் காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் ஐந்து அணைகளை கட்டி 70 டி.எம்.சி.யை தந்திரமாக தடுத்துவைத்துள்ளது. 

மேகதாயி அணை கட்ட கனவு காண்கிறது. ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஜூன் வரை காவிரி தண்ணீரை எந்தமாநிலமும் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறுகிறது. 
கர்நாடகா தம் பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்பது காவிரி நடுவர் மன்றஇடைக்காலத் தீர்ப்பாகும்.


இப்போது உச்சநீதிமன்றத்திலேயே 18 லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்துள்ளதாக கர்நாடகம் ஒத்துக்கொள்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்பு எந்த மாநிலமும் அணைகள், வாய்க்கால்கள் கிளை நதிகள் இவற்றின் மூலம் பயன்படுத்தும் குடிநீரின் அளவு 20சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்என்று கூறுகிறது. 

எனில் 30சதவீதம் குடிநீர் பெயரில்கர்நாடகம் எடுத்துக் கொள்கிறது. 19 சதவீதம்பெங்களூருக்கு மட்டும் போகிறது. 
கர்நாடக காவிரி எல்லையில் மட்டும் 61 தொழிற்சாலைகள் இப்பகுதிக்குள் உள்ளன. 
அவர்களும் காவிரி நீரைபுதிதாகப் பயன்படுத்துகின்றனர். 

கர்நாடகத்தில் சுமார் ஒரு கோடி பேர் இந்தக் குடிநீரைப்பயன்படுத்துகிறார்கள் என்றால் தமிழகத்தில் ஐந்து கோடி மக்களின் அன்ன ஆகாரம், பொன்னி நதிதான்.



காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் தாவாச் சட்டம் இவ்வளவையும் கர்நாடகம் மீறுகிறது. கோடுகளைத் தாண்ட மத்திய அரசு குனிந்து தோள் தருகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகம் முடங்கி விட்டது. 

மக்கள் நலம் காக்க வேண்டிய ஒரு அரசின் பணிகளை உச்ச நீதிமன்றம் செய்கிறது. 
அபூர்வமாக இத்தகு நிகழ்வுகள் நடக்கின்றன. 

மத்திய அரசும் கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தை எள்ளி நகையாடுகின்றனர். காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் போக்கால் எங்களுக்கு ரத்தக் கொதிப்பு எகிறுகிறது என்று 3-9-2012-ல் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. 

கூட்டாட்சி அமைப்புக்கு மாரடைப்பை உருவாக்கும் வகையில் நரேந்திர மோடி அரசும் கர்நாடக அரசும் செயல்படுகின்றன.
=======================================================================================
ன்று,
அக்டோபர் -19.

  • நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
  • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
  • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)

========================================================================================
முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 
10 யோசனைகள்!



* தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள்.

* அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள்.


* நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள்.


* சுருண்டு படுக்காதீர்கள்.


* கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள்.


* தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.


* தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் உட்காரதீர்கள்.


* டூ வீலர் ஓட்டும் போது, குனிந்து ஓட்டாதீர்கள்.


* பளுவான பொருட்களை தூக்கும் போது, குனிந்து தூக்காதீர்கள்.


* இரண்டு வேளையும், தலா, 20 முறை, கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.


இவ்வாறு செய்து வந்தால், முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக இருக்கும்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?