இந்தியாவை துண்டாடும் மோடி அரசு..

காவிரி விவகாரத்தில் இதுவரை தமிழ் நாடு ,கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் பிரசினை தீர்க்க பிரதமர் மோடியோ,மத்திய நீர் பாசனத்துறை அமைசர் உமா பாரதியோ ஒன்றுமே மத்திய அரசு என்ற முறையில் செய்யவில்லை.
 பிரதமர் நரேந்திர மோடி தான் இந்திய பிரதமர் மாநிலங்கிடையிலான விவகாரங்களை தீர்க்கும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதையே மறந்து பாஜக தலைவராக தரம் தாழ்ந்த அரசியல்வாதியாக நடந்து கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி பிரசனையை முதலில் கையில் எடுத்தது பாஜகதான்.
அக்கடசியும்,அக்கடசி பொறுப்பில் நடந்த இந்து சாமியார்களு ம் நடத்திய தமிழ் நாட்டுக்கு எதிரான  ஊர்வலம்,கடையடைப்பு போராட்டங்கள் தான் கலவர விதைகளைத் தூவியது.
பாஜக காவிரி பிரசனையை கையில் எடுத்து ஆளும் காங்கிரசை நெருக்கடியில் வீழ்த்தி ஆட்சியை மீள பிடிக்கலாம் என்ற கணக்கில் இயங்கியது.
அதன் கருத்துக்கேற்ப பிரதமர் பொறுப்பில் உள்ள மோடியும் நடந்து கொண்டார்.
கோத்ரா நிகழ்வு மூலம் குஜராத்தில்  பாஜக ஆட்சியை தொடர்ந்து கொண்டுவந்தது மட்டுமின்றி இந்துத்துவா சக்திகள் ஆர்.எஸ்.எஸ்,பாஜகவின் நம்பிக்கை நடசத்திரமாகி பிரதர் நாற்காலியை கைப்பற்றியவராயிற்றே .
கர்நாடகா முதலவர் காவிரி பிரசனையை பற்றி பலமுறை கடிதங்கள் எழுதியதற்கு பதில் போடவில்லை.மாநில முதல்வர் என்ற முறையில் பிரதமரை சந்திக்க பல முறை நேரம் ஒதுக்க கேட்டும் முதல்வர் சித்தராமையாவை சந்திக்க மறுத்து விட்டார்.
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களோ அம்மா புகழ் மாலை பாடல் ,காஷமீர்  பாட்டு படிப்பதையும் தவிர காவிரியைப்பற்றி எங்கும் வாயை திறக்கவில்லை.

ஆனால் மத்திய அமைசர்களாக உள்ள கன்னடர்கள் வெளிப்படையாகவே தங்கள் மத்திய அமைசர் என்பதையும் மீறி தமிழகத்துக்கு தண்ணீர்  கொடுக்க கூடாது என்று பேசினர்.
 ஆனால்  நமது தமிழக பொன்னாரோ வாயை திறக்கவே இல்லை.
தனது வாயை பொத்திக்கொண்டு கொண்டு தமிழிசை  சும்மா இருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும்

தமிழக பாஜகவோ தண்ணீர் கேட்டு விவசாயிகள்,திமுக உட்பட்ட கட்சிகள்  நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என்று பகிரங்கமாகவே அறிவிக்கிறார் .
.

இப்போது  உட்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்துக்கொண்ட மத்திய அரசு  கர்நாடகாவை சேர்ந்த அமைசர் சத்திய கவுடே  மோடியை சந்தித்து பேசிய பின்னர் அப்படி வாரியம் அமைக்க முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது.

ஆக தொடர்ந்து காவிரி பிரசனையில் பாஜக மோடி அரசு கரநாடகாவுக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது.
காரணம் கர்நாடகாவில் ஆடசி அமைக்க வாய்ப்பு உள்ளது,முன்பு எட்டியரப்பா தலைமையில் பாஜக ஆடசி செய்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் ..?ஒரு சட்டமன்ற தொகுதி கிடைப்பதற்கு கூட  திமுக,அதிமுக தயவு தேவை.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பாஜக ஆடசி கனவில்தான்.
பாட்டு பாடி களைத்த அதிமுக எம்.பிக்கள் திடீர் ஞ்சானோதயமாக மோடியை சந்திக்க சென்று அவர் மறுப்பு தெரிவிக்க வாசலில் நின்று வாட்ச்மேனிடம் மனுவை கொடுத்து வந்துள்ளனர்.
அவர்கள் காவிரியை பற்றி  பாராளுமன்றத்தில் இதுவரை ஒன்றுமே பேசவில்லை.இதில் தம்பித்துரை துணை சபா வேறு.

வாயை திறப்பதே ஜெயலலிதா புகழ் பாடத்தான் என்ற நிலையை அதிமுக எம்பி.க்கள் மாற்றும் வரை
மத்திய அரசு தமிழகம் என்றாலே தரக்குறைவாகத்தான் நினைக்கும்.காரணம் நம் எம்பிக்கள் பாராளுமன்ற விபூஷகர்களா தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கூட்டாட்சியில் தமிழ் நாடு போன்ற மாநிலங்கள் இணைந்திருப்பதே மாநிலங்களுக்கிடையிலான பிரசனைகளை மத்திய அரசு தீர்க்கும்,தீர்க்க வேண்டும் என்ற திட்டமிட்டலில்தானே.

ஆனால் இதுவரை காவிரி பிரசனையில் பிரதமர் மோடியும்,மத்திய நீர்ப்பாசன அமைசசகம் வாயையும் ,கையையும் பொத்திக்கொண்டிருப்பது இந்தியா என்ற கூட்டாட்சி  நாட்டையே சிதறடித்து விடும்.
சிந்து,கங்கை ,பிரபுத்திரா நதி நீர்களை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் காட்டும் அக்கறையை,  தனது மாநிலங்கள் நதி நீரை பகிர்ந்து கொள்வதில் உண்டாகும் பிரசனைகளை தீர்ப்பதிலும் மத்திய அரசு காட்ட வேண்டும்.

வெளி நாடுகள் சுற்றுப்பயணம் போவதிலும் ,லடசக்கணக்கில் விதவிதமான ஆடைகளை அணிந்து செல்பி எடுபதிலும்  காட்டும் ஆர்வத்தை உள்நாட்டு பிரசனைகளிலும் பிரதமராக இருக்கும் மோடி காட்ட வேண்டும்.

அரசியல் கணக்கை பார்த்து ஒரு மாநிலத்துக்கு ஆதரவாகவே நடந்து கொள்வது பாதிக்கப்பட்ட மாநிலம் இந்திய கூட்டாட்சி தர்மத்தையே அவநம்பிக்கையாக்கி தனித் தீவாக தன்னை எண்ணிக் கொள்ளவைத்து விடும்,மாநில சுயாட்சி மீண்டும் எழும்.

அதுமட்டுமல்ல உரிமைகள் மறுக்கப்படுகையில் தமிழ் நாடு  மட்டுமல்ல எந்த மாநிலமாக இருந்தாலும் அதற்கு மற்றோரு வட மாநில போல் பிரிவினை எண்ணம் உண்டாகி விடும்.

அதை விட மிக கொடுமையான மறுபக்கம் இதை விரும்பாவிட்டாலும் காஷ்மீர் போல் தங்கள் தவிர்க்கப்பட்டு வருவதாக எண்ணத்தை அம்மாநில மக்களிடம் உண்டாக்கி விடும்.
காரணம் ஒன்றுக்கும் உதவாத,ஒரு சார்பான மத்திய அரசின் செயல்பாடுகள் இந்திய மக்கள் என்ற எண்ணத்தை மறந்து தமிழன்,மலையாளி,மராட்டி,குஜராத்தி,கன்னடர் ,தெலுங்கர் என்ற குறுகிய மனப்பான்மை உண்டாக்கி விடும்.
அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது.மத வெறியை தூண்டி குளிர் காய்ந்த பாஜக தற்போது இனவாரி வெறியை உருவாக்கி குளிர்காய நினைக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.ஆனால் இப்படி உருவாக்கப்படும் வெறி பாஜகவை அழித்து விடும் அபாயத்துடன் இந்தியாவையே சிதறடித்துவிடும் அபாயத்தையும் உள்ளடக்கியுள்ளது.
அப்படி நடக்காது என்று யாராலும் உத்திரவாதம் தர இயலா நிலையை தற்போதைய உலகமயமாக்கல்,தனியார்மயமாக்கல் தந்துள்ளது.
பாதுகாப்பையே தனியார் மயமாக்கினால் அதற்கு வாய்ப்பு அதிகம்தான்.
தன்னால் ஆட்சிக்கே வர முடியாது என்று தமிழ் நாட்டை  மோடியும்,பாஜகவும் உதாசீனப்படுத்துவது இந்தியாவுக்கே அபாயத்தை தந்து விடும்.

======================================================================================
ன்று,
அக்டோபர் -05.

  • சர்வதேச ஆசிரியர்கள் தினம்
  • இந்தோனேஷிய ராணுவ தினம்
  •  சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)

=======================================================================================
உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!
அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!
இந்தியா பூனை பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை
இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!
அமெரிக்கா பூனையல்லவா
பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக
உண்டு கொழு,கொழுவென இருந்தது!
கடைசி சுற்று....
இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம்
சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!
பார்வையாளர்களுக்கு வியப்பு!
சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது!
இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!
பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!
போட்டித்துவங்கியது!
அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!
சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி ஒரேஅடி!
அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் 
ஒரு பல்பு ப்பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!
கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.
பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்!
சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை!
.
சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!
போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!
மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின்அருகில் சென்று இவ்வளவு பலசாலியானஏன்னைநோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி? என்று கேட்டது அமெரிக்க பூனை!
அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாகசோமாலியா பூனை சொன்னது!
நான் பூனையே இல்லை, புலி பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!
பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!
பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!

======================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?