வறுமைக்கோடும் குறைந்தபட்ச ஊதியமும்...!

குறைந்தபட்ச ஊதியம் தீர்மானிப்பதற்கான அடிப்படைஅளவுகோல் என்னஎன்பது இந்தியாவில் வெகுகாலத்திற்குமுன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. 

இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் மட்டுமல்லாது, 1990களில் உச்சநீதிமன்றத்தாலும் சில முன்னேற்றங்கள் காணப்பட்டது. இப்படி செய்யப்பட்ட பல திருத்தங்களுக்குப் பின்னர் நமது நாட்டில் தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடிப்படை அளவு கோல் என்னவாக இருக்கிறது?

பேரா.பிரபாத் பட்நாயக்
அடிப்படை அளவுகோல்
குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடிப்படை அளவுகோலை தீர்மானிப்பதற்கு ஒரு அடிப்படை குடும்ப அலகாக கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று 4 பேர் கொண்ட குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும். இதில் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து ஒருநுகர்வு அலகாகக் கணக்கிடப்படுவர். 
எனவே,ஒரு அடிப்படை குடும்பம் என்பது 3 நுகர்வுஅலகுகளைக் கொண்டதாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு நுகர்வு அலகும் ஒரு நாளைக்கு 2700 கலோரிகளை தனித்தனியாக நுகர்வதாக வைத்துக் கொள்வோம். 

அதாவது ஒட்டு மொத்தமாக ஒருஅடிப்படை குடும்பத்தின் நுகர்வு அளவு 8100 கலோரிகள் ஆகும். அந்தக் குடும்பத்திற்கு ஒருவருடத்திற்குத் தேவையான துணியின் அளவு 72 கஜம் (360 முழம்) என வைத்துக் கொள்வோம். 

இவை இரண்டிற்கும் சேர்த்து ஆகும் செலவுரூ.எக்ஸ். இந்த ரூ.எக்ஸில் 10 சதவீதம் அந்தகுடும்பத்திற்கான வீட்டு வாடகை. 15 சதவீதம்அந்த குடும்பத்திற்கான இதர செலவுகளுக்கான தொகை. 1990களின் துவக்கத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதலின்படி, இந்த ரூ.எக்ஸில் 30 சதவீதம் அந்த குடும்பத்திற்கான கல்வி, ஆரோக்கியம் போன்ற இதர வகைகளுக்கான செலவுத் தொகையாகும். 

எனவே, ஒட்டுமொத்தத்தில், ஒரு அடிப்படை குடும்பத்தினை ஒரு வருடத்திற்கு பராமரிக்கத் தேவையான குறைந்தபட்ச ஆண்டு வருமானம் என்பது (ரூ. எக்ஸ் + ரூ. எக்ஸில் 55 சதவீதம் (அதாவது எக்ஸ் = 100 என்றால், இது 100+55=155 என்பதாக இருக்க வேண்டும். 
இதன்படி பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்படுகையில், அந்த ஆண்டு நிலவிவரும் விலைவாசிக்கேற்ப ஊதியம் மாறுபட வேண்டும். 

குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான இந்தக் கொள்கை தன்னிச்சையானதல்ல. ஆதாரங்களுடன் கூடியது. பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு மிகக் கவனமாக வரையறுக்கப்பட்டது.
கவனிக்கத் தவறும் ஒரு அம்சம்
ஒரு அடிப்படை குடும்பம் என்று சொல்லும்போது அந்த குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை செய்வதாக நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? 
அந்த குடும்பத்தின் இரண்டு பெரியவர்களுமே வேலைசெய்வதாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இங்கு நாம் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த குடும்பத்தின் மற்றொரு நபர் சம்பளத்திற்காக வேலை செய்யவில்லையே தவிர, அவர் சும்மாஇருக்கவில்லை. 

அவர் அந்த குடும்பத்தை பராமரிக்கத் தேவையான பிற வேலைகளை- அதாவது, சமையல், குழந்தைகளை பார்த்துக் கொள்வது, மற்றும் பிற வீட்டு வேலைகளை சம்பளமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. 

ஒரு வேளை, அந்தக் குடும்பத்தின் இரண்டு பெரியவர்களும் சம்பளத்திற்காக வேலைசெய்வதாக வைத்துக் கொள்வோமேயானால், வேறு யாராவது ஒருவரை அந்தக் குடும்பத்தின் சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளை செய்வதற்கென்று நியமிக்க வேண்டியதுவரும். அப்போதும் ஒருவரின் ஊதியம் என்பதுஇந்த செலவினங்களுக்கு ஆகும் செலவிற்காக அடிபட்டுப் போகும். 

இந்த இடத்தில் அந்தக் குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே சம்பளத்திற்கு வேலைக்கு போவதாகவும், அந்த சம்பளம் மட்டுமே அந்த குடும்பத்தை பராமரிக்கத் தேவையானதாக உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளும் கணிப்பு சரியானதுதான் என்பது நிரூபணமாகிறது. 

மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலில், ஒரு குடும்பத்தை பராமரிப்பதற்குத் தேவையான அடிப்படை (இலவச) சேவைகளை குடும்பத்திலுள்ள ஒருநபர்தான் செய்ய வேண்டியிருக்கிறது. 
அரசுஇயந்திரம் அத்தகைய சேவைகளை செய்வதில்லை. இந்த அடிப்படையில்தான், இந்தியதொழிலாளர் மாநாடு குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடிப்படை அலகினை தீர்மானித்துள்ளது.

ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்
இந்த அடிப்படையில், சமீபத்தில் மத்திய ஊதியக்குழு மத்திய அரசாங்கத்தின் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துள்ளது. 

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின்நிர்ணயிப்பின்படி, சிறப்புத் திறமைகள் தேவைப்படாத ஒரு ஊழியருக்கான குறைந்தபட்ச ஊதியம் என்பது மாதம் ரூ. 18000 ஆகும். நமது நாட்டில் ‘‘சம வேலைக்கு சம கூலி’’ என்பது சட்டப்படியாக உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். 

இதனை அடிப்படையாகக் கொண்டுதான் தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2-ம் தேதியன்று, சிறப்புத் திறமைகள் தேவைப்படாத தொழிலாளர்களுக்கான ஊதியத்தை ரூ.18000-ஆக நிர்ணயம் செய் என்ற கோரிக்கையினை முன்வைத்து போராட்டம் நடத்தின.

 ஒரு மாதத்திற்கு 26 வேலை நாட்கள் என்றுகணக்கிடுவோம். அப்படி எடுத்துக் கொண்டால்,ஒரு வேலை நாளுக்கான சம்பளம் என்பது ரூ. 692ஆகும். மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட இந்த ‘அதிகாரப்பூர்வமான’ சம்பளம் என்பது ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கொள்கையின் படி இந்தியாவில் எந்த இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கும் பொருத்தம் உடையதாகும். 

ஆனாலும், மோடிஅரசாங்கம் தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச ஊதியக் கோரிக்கையை ஏற்க மறுத்துவருகிறது. 
மத்திய ஊதியக்குழு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தின் ஒருபகுதியை மட்டுமே ‘குறைந்தபட்ச’ ஊதியமாகநிர்ணயம் செய்யப்போவதாகக் கூறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், அரசு தருவதாகக் கூறியுள்ள குறைந்தபட்ச ஊதியம் என்பது ஏதோ தொழிலாளர்களுக்கான மிகப்பெரிய சலுகை போன்று அது தமுக்கடித்துக் கொண்டதோடு, தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே தேவையில்லாமல் பிடிவாதமாக இந்த கோரிக்கையினை முன்னிறுத்தி வேலை நிறுத்தம் செய்கின்றன என்றும் குற்றம் சாட்டியது. 

தொழிற்சங்கங்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, இதற்குமுன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறிப்பிடத்தகுந்த அளவில் வேலை நிறுத்தத்தை செய்வதில் வெற்றி கண்டுள்ளனர் என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.
கணக்கீட்டு முறையே ஒரு ஏமாற்று வேலை தான்
குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்கம் செய்யும்போது அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பாக தொழிலாளர்களின் பல்வேறு பிரிவினரை அவர்களுக்குத் ‘தீங்கிழைக்கும்’ வகையில் வேறுபடுத்திப் பார்ப்பதை நாம் காணமுடிகிறது. 

அதிகாரப்பூர்வமான அங்கீகார முத்திரையுடன் கூடிய இந்த குறைந்தபட்ச ஊதிய கணக்கீட்டு முறைக்கும் - வறுமைக்கோட்டை நிர்ணயிப்பதற்கும் வெளிப்படையாகவே தொடர்பு உள்ளது. இந்திய நாட்டில் வறுமைக்கோடு என்பது, ஒரு தனி நபர், கிராமப்புற இந்தியாவில் நாளொன்றுக்கு 2200 கலோரி உணவும், நகர்ப்புற இந்தியாவில் 2100 கலோரி உணவும்உட்கொள்வதற்கு ஆகும் செலவு ஆகும்.
இந்த வறுமைக் கோடு, 1973-74ம் ஆண்டினை அடிப்படை ஆண்டாகக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விலைவாசிப் புள்ளியினைப் பயன்படுத்தி இந்த அடிப்படை ஆண்டிற்கான கணக்கீடு அடுத்து வரும் ஆண்டுகளுக்கு முன்னோக்கி கொண்டு வரப்படுகிறது. 

இதுவல்லாமல், இதற்கு மாற்றாக இன்னொரு முறையில் வறுமைக் கோட்டினை வரையறை செய்வதாகக் கொள்வோம். அதன்படி, ஐந்தாண்டு இடைவெளியில் ஒவ்வொரு அடுத்தடுத்த ஆண்டிற்கும் ஒரு புதிய கணக்கீடு, அடிப்படை ஆண்டில் செய்வது போல் செய்யப்படும். 

இதன் மூலம்ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு புதிய வறுமைக்கோடு தீர்மானிக்கப்படும். எல்லோரும் உணர்வது போல் நிச்சயம் இந்த முறையில் வறுமைக்கோட்டினை வரையறை செய்வதுஎன்பது தான் நியாயமானதாக, சரியானதாக இருக்கும். 
ஆனால், வழக்கமான முதலாவது முறையில் வறுமைக் கோட்டினை நிர்ணயம் செய்யும் போது, விலைவாசிப் புள்ளி நிர்ணயம் செய்வதில் உள்ள பலவீனங்களின் காரணமாக மிகவும் குறைவான மட்டத்திலேயே வறுமைக் கோட்டிற்கான வரையறை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்களை குறிப்பிடும் எண்ணிக்கை விகிதமும் குறைவாகவே வரையறுக்கப்படுகிறது. 

எனவே, அரசாங்கம் இந்தமுறை உண்மை நிலையை மறைக்கும் ஏமாற்றுவேலை என்று தெரிந்த பிறகும் மிகவும் சந்தோஷமாக இந்த முறையை ஏற்றுக் கொண்டது. உண்மையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழ்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்ற நிலையிலும் அரசாங்கம் இந்த கணக்கீட்டு முறையை வைத்துக் கொண்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருவதாக போலியாக - பொய்யாக தம்பட்டமடித்துக் கொள்கிறது. 

இந்த முறையில் கணக்கீடு செய்யப்படும் அதிகாரப்பூர்வமான - அரசாங்க வரையறையின் படியான வறுமைக்கோடு ‘சரியானது’ தான் என்ற நம்பகத்தன்மையை கொடுப்பதற்காக ஏராளமான கமிட்டிகள் அரசாங்கத்தால் நிறுவப்பட்டன. 
ஆனாலும், அதிகாரப்பூர்வமாக சித்தரிக்கப்பட்ட இந்த மாயை – அதாவது வறுமைக் கோட்டிற்குக் கீழ்உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற மாயத் தோற்றம் கலைந்து விடாமல்,அப்படியே மிகக் கவனமாக தொடரப்படுகிறது.

வறுமைக்கோட்டையும் விடக் குறைவானது குறைந்தபட்ச ஊதியம்...
நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச ஊதியம்நிர்ணயம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவுப் பொருளின் கலோரி அளவு வறுமைக் கோட்டிற்கானதையும் விடக் குறைவாகும். 

ஒரு குடும்பத்திற்கான ஒட்டு மொத்த கலோரி அளவு 8100 கலோரிகள் (2700 ஒ 3=8100) என்பது தரும் தனி நபர் ஒரு நாள் நுகர்வு விகிதம் என்பது (8100/4=2025) 2025 கலோரிகள் ஆகும். 
இது நிச்சயமாக வறுமைக் கோட்டினைவரையறை செய்யும் நகர்ப்புற 2100 மற்றும்கிராமப்புற 2200 கலோரிகளை விடக் குறைவாகும். 

நாம் ஒரு வேளை உணவு மற்றும்உணவுப் பொருள் அல்லாத பொருட்களுக்காகும் செலவினங்களின் இடையேயான விகிதத்தினை இரண்டு வரையறைகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டால், வறுமைக் கோடு என்பது குறைந்தபட்ச ஊதியத்தை தாண்டிச் செல்லும். 

அதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரு மாதத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18000-ஐயும் தாண்ட வேண்டும் என்பதுதான். ஆனால், நாம் வறுமைக் கோட்டிற்கான நிர்ணயத்தினை 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ரூ.18000 எனக் கொள்வோம். எனில் ஒரு நாளைக்கு அந்த குடும்பத்திற்கு ஆகும் செலவு ரூ.600, ஒரு தனி நபருக்கு ரூ. 150ஆகும். 
இது அரசாங்கம் நியமித்த ரங்கராஜன்கமிட்டி அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கான நிர்ணயத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.

சீனாவும் இந்தியாவும்
2012-ம் ஆண்டு சீன அரசாங்கம் அந்த நாட்டின் வறுமைக் கோட்டினை நிர்ணயம் செய்யும் போது வறுமைக் கோட்டிற்கான அடிமட்ட வரம்பை இரண்டு மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்தது. 
அப்படிச் செய்தால் தான்‘ஏழைகளுக்கு’ என்று சீன அரசாங்கம் அறிவிக்கும் பல்வேறு பயன்களும் கூடுதலாக மக்களை சென்றடையும் என்று அந்த அரசாங்கம் யோசித்தது. 

ஆனால், இந்தியாவில், எத்தனை கவனமாக கணக்கீடுகள் செய்யப்பட்ட போதும், மத்திய ஊதியக் குழுவின் கணக்கீடு உட்பட, வறுமைக்கோட்டு நிர்ணய வரையறையை இரண்டு மடங்காக்க வேண்டும் என்பது தான்வெளிப்படை. 

இப்படி செய்தால், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அரசாங்கம் சொன்னது ‘பொய்’ என்று நிரூபணம் ஆகலாம். 

ஆனாலும், அரசாங்கத்தின் ‘ஏழை’களுக்கான பல்வேறு திட்டங்கள் தற்போது பொய்யான கணக்கீட்டால் புறக்கணிக்கப்பட்டுள்ள எண்ணற்ற உழைக்கும் மக்களுக்கு சென்றடையும். 
                                                                                                                                  - பேரா.பிரபாத் பட்நாயக்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில் : ஆர்.எஸ்.செண்பகம்.
=====================================================================================================================================-
ன்று,
அக்டோபர்-07.

  • ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
  • ஜெர்மன், ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
  • இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
  • ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
=========================================================================================
ஜெயலலிதா சிறைக்குப் போனதற்கே கருப்புக்கொடியுடன் வலம் வந்த இந்த அதிமுக போலீசு இப்போ தீக்குளித்து விட்டாரா?உயிருடன் இருக்கிறாரா.டி.ஜி.பி சொல்லுவாரா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?