கார் டயருக்கும் கோவில்

தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டு களுக்கு முன் நடந்தவை மீண்டும் சுழற்சி முறையில் நடந்துள்ளது.
1984ல், தமிழக  முதல்வர், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு  இதே   அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசையில் இருந்தார்.
 மூன்று மாதங்கள் சிகிச்சை நடந்தது. 
அப்போது அரசு செயல்பாடுகள் முடங்கியது.
முக்கிய அரசு முடிவுகள் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
அப்போதும் திமுக தலைவர் கலைஞர் அரசுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய  குரல் எழுப்பினார் . 
'அரசின் செயல்பாடுகள் முழுமை யாக முடங்கியுள்ளன; மாநில நலன் கருதி, பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்' என ஆளுநர்  எஸ்.எல்.குரானாவுக்கு கோரிக்கை விடுத்தார் .
அதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த  ஆளுநர்  குரானா அப்போதைய  நிதியமைச்சர்  இருந்த நெடுஞ்செழியனை அழைத்து பேசினார். 
நெடுஞ்செழியன் அப்போதும் இரண்டாம் இடத்தில்தான் இருந்தார்.
அண்ணா மறைவின் போதும் இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியன்தான் தற்காலிக முதல்வர்.
'முதல்வர் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெறட்டும்.அதுவரை  ஆட்சி நிர்வாகம் செயல் இழந்து விடக் கூடாது. எனவே மாற்று ஏற்பாடுகளை செய்யுங்கள்' என உத்தர விட்டார்.
 'மூத்த அமைச்சர் என்ற வகையில், ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும்படி, என்னிடம், எம்.ஜி.ஆர்., கூறியுள்ளார்' என, கவர்னரிடம் நெடுஞ்செழியன் தெரிவித்தார். 
அதைஏற்று, 'முதல்வர் நலம் பெற்று திரும்பி வரும் வரை, அவரது பொறுப்புகளை, மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார்; அமைச்சரவை கூட்டங்களுக்கும், அவரே தலைமை வகிப்பார்' என்று, கவர்னர் குரானா அறிவித்தார்.

அதேநிலை இப்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., இடத்தில் ஜெயலலிதா வும், நெடுஞ்செழியன் இடத்தில், பன்னீர்செல்வமும் உள்ளனர். 

அன்று, எம்.ஜி.ஆர்., நலம் பெற்று, திரும்ப வந்ததும், நெடுஞ்செழியன் பொறுப்பை ஒப்படைத் தார்.பின் தனது வழக்கப்படி இரண்டாவதாக நிதி அமைச்சராக தொடர்ந்தார். 
அந்த வகையில் நெடுஞ்செழியன் முன்னாள் பன்னிர் செல்வம்தான்.
எம்.ஜி.ஆருக்கு நெடுஞ்செழியன் போல, ஜெயலலி தாவுக்கு பன்னீர்செல்வம்  இருக்கிறார். 
அதனால், இப்போது முதல்வர் இலாகாக்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.அறிவிக்கப்படாத முதல்வராக அவர் செயல்பட இருக்கி றார். முதல்வர் வசமிருந்த, உள்துறை, இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகிய துறைகளை, இனி பன்னீர்செல்வம் கவனிக்க வேண்டும். 
ஜெயலலிதாவை பொறுத்தவரை பொறுப்பில்லாத முதல்வர்தான்.
 பன்னீர்செல்வத்தை இந்த பொறுப்பில் வைக்காமல் தனக்கு கைக்குள் அடங்கிய எடப்பாடி அல்லது ஓ.எஸ் .மணியத்தை பொறுப்பில் வைக்க உடன் பிறவா சகோதரி செய்த முயற்சிகள் அனைத்தும் ஏற்கனவே இரு முறை இந்த டம்மி பதவி வகித்த  பன்னீர்செல்வம் தகுதியானவராக இருப்பார் என்று ஆளுநரும்,பாஜக மேலிடமும் கருதியதால் வீணானது.
மீண்டும் பழைய  பன்னீர்செல்வமாக  திரும்பி வந்து விட்டார்.ஆனால் இம்முறை வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கேற்பத்தான் ஆடுவார்.
அதை யாராலும் தடுக்க முடியாது.வேறு வழி ?
 பன்னீர்செல்வம் கார் டயரை கும்பிட்டாலும் கூட அதை நாம் கலாய்த்தாலும் கூட அது தற்போதைய முதல்வர்  பன்னீர்செல்வத்துக்கு  பலனை அள்ளி  கொடுக்கத்தான்  செய்துள்ளது .போகிற போக்கில் இருக்கிற சாமிகள் வரிசையில் கார் டயருக்கும் கோவில் வந்து விடும் அபாயம் உள்ளது.
================================================================================================

"தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியவரே..


மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றிவிட்டார்.!"

=====================================================================================
ன்று,
அக்டோபர்-13. 
  • சர்வதேச இயற்கை பேரிடர் தினம்
  • சர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)
  • துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)

======================================================================================
காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. 
அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." 
அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...
சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. 

எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....
அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது...
 இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது...
 "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." 
இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது.
இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?" 
அப்பொழுது சிங்கம் சொன்னது... 
"இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."
=====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?