ஜியோ வாங்கியவர்களின் " ஐயோ " குரல்,

தகவல் தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சி என்ற அறிவிப்போடு, களத்திற்கு வந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த இணைய வேகம் கொண்டது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ அமைப்பின், ஸ்பீட் வெப்சைட் மூலம் இது தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, புதிதாக ஜியோ சிம்மை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு இலவசமாக பேசிக் கொள்ளலாம்; மாணவர்களின் இணையப் பயன்பாட்டிற்கு 25 சதவிகிதம் மட்டுமே கட்டணம், 1 ஜிபி-க்கான 4ஜி டேட்டா வெறும் 50 ரூபாய் மட்டுமே; ரோமிங் கட்டணம் முற்றிலும் ரத்து என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

வெறும் 50 ரூபாய்க்கு 4ஜி டேட்டா வழங்கப்படுவது உலகிலேயே எங்கும் இல்லாதது என்று பெருமையடிக்கப்பட்டது.

ஆனால், ரிலையன்ஸ் ஜியோ-வின் சராசரி இணையதள வேகம் 6.2 Mbps என்ற அளவில் மட்டுமே இருப்பதும், இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது இணையதள வேகத்தில் 5-ஆவது இடத்தில்தான் இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. 

தில்லி வட்டத்தில் ஜியோ வேகம் 5.9 Mbps ஆகவும், கர்நாடக வட்டத்தில் 7.5 Mbps
என்ற அளவிலும் கிடைத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஜியோவுக்கு போதிய அளவு டேட்டா தர முடியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

மும்பை வட்டத்தில் 10.7 எனும் அளவிற்கு வேகம் கிடைத்தாலும், மும்பை வட்டத்தில் ஜியோ 2-வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

அதேபோல அப்லோடுவேகத்திலும், 2.6 Mbpsஎன்ற அளவில் ஜியோ பின்தங்கியே உள்ளது. 
இந்த பிரிவில் ஜியோ, இந்திய அளவில் 6-வது இடத்துக்குத்தான் வர முடிந்துள்ளது.

ஜியோவைவிட குறைந்த அப்லோடு வேகம் கொண்ட நெட்வொர்க் நிறுவனம் என்று பார்த்தால், அது முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனாக இருக்கிறது. அதன் அப்லோடு வேகம் 2.1 Mbps ஆகும்.

ஜியோவின் அப்லோடு வேகம் தில்லி மற்றும் மும்பையில் 2.3 Mbps மற்றும் 3 Mbps என்ற அளவிலும், கர்நாடகாவில் 2.6 Mbps என்ற அளவிலும் உள்ளது.


ஜியோ நெட்வொர்க்கின் வேகம் இருப்பதிலேயே மிகவும் குறைவானது என்ற உண்மை வெளிவந்திருக்கும் நிலையில், ஜியோ சிம்கார்டுக்கான இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே நிறுத்தப்பட உள்ளதாக வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.ஜியோ சிம் மூலமான இலவச சலுகைகள், டிசம்பர் 31-ஆம் தேதிவரை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியிருந்தது. 
ஆனால், டிசம்பர் 3-ஆம் தேதி வரை மட்டுமே இச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஜியோ நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

டிராய் விதிமுறைகளின்படி, எந்தவொரு நிறுவனமும் அறிமுகச் சலுகை என்ற பெயரில் 90 நாட்களுக்கு மேல் இலவச திட்டங்களை நீட்டிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டிராய் விதிமுறைகள் தெரிந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது. 
90 நாட்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்க முடியும் என்பது, ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்திற்குத் தெரியாமல் இருக்காது. இருந்தும் அது டிசம்பர் 31-ஆம் தேதி வரை சலுகைகள் வழங்கப்படும் என்று ஏன் அறிவித்தது? என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தனது இலவச சலுகை மூலம் கடந்த 2 மாதத்திற்குள் மட்டும் 1 கோடி புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டிராய் ஜியோ புகாரை அடுத்து பிற அலைபேசி நிறுவங்களுக்கு அபராதம் வித்தித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சிம்மிலிருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு வழங்காத தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு டிராய் மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளது. 
 ரிலையன்ஸ் நிறுவனம் வாய்ஸ் கால்ஸ் இலவசம், குறிப்பிட்ட காலத்துக்கு இன்டர்நெட் டேட்டா இலவசம் என்று இலவசங்களை அள்ளி விடுவதால் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல முன்னணி நிறுவனங்களுக்கு ஜியோ வருகை பலத்த அடியாக அமைந்தது. 

ஜியோ அறிவிப்புகள் மற்ற நிறுவனங்களை அழித்து விடும் என்று அவை டிராயிடம் முறையிட்டன. ஆனால் டிராய் ஜியோவுக்கு சாதகமாக முடிவை அறிவித்தது. 
இதனையடுத்து ஜியோ போட்டியை சமாளிக்க அந்த நிறுவனங்களும் கட்டண குறைப்பு ஆயுதத்தை கையில் எடுக்க தொடங்கின. 

இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்களின் அழைப்புகளுக்கு சந்தையில் உள்ள நிறுவனங்கள் சரிவர இணைப்பு வழங்கவில்லை. 

இதனால் ஜியோ நெட்வொர்க்கில் தினந்தோறும் 52 கோடி அழைப்புகள் பெயிலர் ஆகிறது என்று  பிரதமர் அலுவலகம், டிராய், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் ரிலையன்ஸ் ஜியோ புகார் அளித்தது.  டிராய் அந்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியது. 

அதன் அடிப்படையில், ஏர்டெல், ஐடியா, வோடா போன் ஆகிய நிறுவனங்களுக்கு மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது.

டிராய் அபராதம் விதிக்க பரிந்துரை செய்து இருப்பது தொடர்பாக அந்த  நிறுவனங்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

ஆனால்  `டிராயின் உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவு ள்ளது’ .
======================================================================================

ன்று,
அக்டோபர்-23.


  • ஹங்கேரி தேசிய தினம்

  • முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)

  • "புரட்சித்தலைவர்" லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)

  • ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)

  • முதல்   ஐபாட்  ஆப்பிள் நிறுவனம்  வெளியிடப்பட்டது(2001)

========================================================================================
இன்று மணவிழாக்களில், நாகரிக உணவு விடுதிகளில் சாப்பாட்டுடன் ஐஸ் கிரீம் தரும் பழக்கம் வளர்ந்துவிட்டது. சாப்பிட்ட பின்பு ஐஸ்கிரீம் உண்பது உணவைச் செரிக்க உதவுகிறது என்று தவறாகக் கருதி வருகிறார்கள்.
இது தவறானது.ஜீரணத்திற்கும் ஐஸ்கிரீமிற்கும் எந்த தொடர்பும் இல்லை.சாப்பிட்டவுடன் நீர் அருந்துவதே போதுமானது.சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்துத் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற தீவிர வறட்டு முடிவுடன் காத்துக் கிடப்பது அவசியமற்றது.
கம்மஞ்சோறும்,சோளச் சோறும் நன்கு நீர்விட்டுக் கலந்து அதாவது உணவையும் நீரையும் ஒன்றாய் கலந்துஉண்டு ஆரோக்கியமாய் வாழ்ந்த மக்களின் அனுபவம் உடலியல் அறிவியலுக்குப் புறம்பானதா?
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் பலரும் வெயிலில் அலைந்து விட்டோ அல்லது வெப்பத்தால் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தோ ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர். இதனால்... சைனஸ் பிரச்சனை, டான்சில் பிரச்சனை, குரல் பாதிப்பு போன்ற மூன்று பாதிப்புக்கள் வர நேரிடும்.
சிலர் ஐஸ் கிரீம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்று கருதியும் உண்கின்றனர்.ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஆரோக்கியமான எடை அதிகரிப்பிற்குப் பதில் ஸஐஸ்கிரீமிலுள்ள சர்க்கரைச் சத்தும், கொழுப்புப் பொருட்களும் கொழுப்பை அதிகரித்து குண்டாக்கிவிடும். 
இந்தக் கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதால் ரத்த நாளங்களின் குறுக்களவு குறைந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. 
விளைவுகளாக.., பலப்பல உடல்நல ஆபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடிவரும்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?