வயதைக் குறைக்கும்

ஆரோக்கியத்தைக் கூட்டும்,  

உணவுத் திட்டம் !



வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் வால்டர் லாங்கோ குழு, விரதத்தை ஒத்த பத்திய முறையைத் தொகுத்துள்ளனர்.
 அதன் படி, நான்கு நாட்களுக்கு குறைந்த கலோரி உணவை உட்கொண்டால் அடிவயிற்று பகுதியின் கொழுப்பையும் முதுகுத்தண்டு மற்றும் மரபுவழி அணுக்களையும் அதிகப்படுத்தியதாகக் கண்டுபிடித்தனர். 
இந்தப் பத்தியத்தை ‘விரைவு வளர்சிதைமாற்ற உணவு திட்டம்’ அல்லது சுருக்கமாக ‘எஃப்.எம்.டி’ (Fast Metabolism Diet - FMD ) என்று அழைக்கப்படுகிறது. 



முதல் கட்டமாக இந்தச் சோதனை நொதி வகை (yeast) உயிர்களில் நடத்தப்பட்டது. அடுத்தக் கட்டமாக எலிகளிலும் கடைசியாக மனிதர்களிடத்தும் நடத்தப்படுகிறது. இவ்வுணவு திட்டத்தால் அணு அளவில் ஏற்படும் உயிரியல் மாற்றங்களைக் காண நொதி வகை உயிரினங்கள் உதவின. குறைந்த நாட்களே வாழும் எலிகளோ, பத்தியத்தால் உண்டாகும் வாழ்நாள் பயன்களைப் பதிவு செய்ய உதவின. 
மனிதருக்கும் இது உகந்தது என்று முதல் கட்ட சோதனையில் தெரிய வந்தது.

நடுவயது முதல் மாதம் இரு முறை எஃப்.எம்.டி உணவு முறையைப் பின்பற்றியவர்களின் வாழ்நாள் அதிகரித்தது; 
புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு குறைந்தது; 
நோய்த் தடுப்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரித்தது; 
எலும்புகளின் தனிம அடர்த்தி(bone mineral density) குறைபாடு கட்டுக்குள் வந்தது; 
புரிதல் திறன் அதிகரித்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

முதற்கட்டமாக மனிதர்கள் மேல் நடத்தப்பட்டச் சோதனையில், 19 நபர்கள் பங்கு கொண்டனர். 
ஒரே மாதிரியான திட்ட உணவை மாதம் ஒரு முறை ஐந்து நாட்களுக்கு கொடுத்த போது சர்க்கரை வியாதி, இதய நோய்கள், முதுமைக் குறியீடுகள் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்தன; 
பக்க விளைவுகளும் இல்லை என்று லாங்கோ கூறுகிறார்.

கடுமையான விரதம் இருப்பது சிரமம். 
உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. 
ஆதலால் கடுமையான விரதத்தால் உண்டாகும் நன்மைகளை உடலில் விளைவிக்க இந்தப் புதிய உணவு அட்டவணையை வகுத்துள்ளோம்” என்று லாங்கோவும் யு.எஸ்.சி டேவிஸ் கல்லூரியின் முதுமையியல்(biogerontology) பேராசிரியர் எட்னா எம்.ஜோன்ஸ்ஸும் கூறினார்.

எஃப்.எம்.டி திட்ட உணவில் ஒருவர் உட்கொள்ளும் சராசரி கலோரி அளவு 34-54 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இந்த உணவில் குறிப்பிட்ட அளவில் புரதச் சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நுண்ணூட்டப் பொருள் ஆகியவை அடங்கி இருந்தன. 
இதனால் ஐ.ஜி.எஃப்-1 எனும் அகச்சுரப்பு நீர்(hormone) அளவு குறைந்தது. வளர்வதற்கும் முதிர்வடைதலுக்கும் இந்த சுரப்பி உதவுகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

எஃப்.எம்.டி திட்ட உணவு ஐ.ஜி.எஃப்.பி.பி எனும் அகச்சுரப்பி அளவையும் குறைக்கிறது. இதன் விளைவாக முதுமைக் குறியீடுகள் குறைந்தன. சர்க்கரை நோய், இதய நோய்களையும் குறைத்தன. 
குளூக்கோஸ், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சி எனும் புரதம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தியது. உணவு உட்கொள்ளாத போது புற்றுநோய் அணுக்களைப் பட்டினிப் போட்டு நோய்த்தடுப்பு அணுக்கள் மற்றும் பிற அணுக்களை வேதியல் மருந்தின் நச்சுத்தன்மையில் இருந்து காக்க முடியும் என்று லாங்கோ முன்பே ஒரு சோதனையில் காட்டியிருக்கிறார். “இந்த திட்டஉணவு முறையால் உடல் முதிர்வடைவதைத் தாமதப்படுத்தவும் முதுகு தண்டு அணுக்களை மீளாக்கவும் முடியும்.” என்று லாங்கோ கூறினார். 
===================================================================
ன்று,
டிசம்பர்-01.

  • உலக எய்ட்ஸ் தினம்
  • மியான்மர் தேசிய தினம்
  • நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)
  • இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
  • ====================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?