குரோம் தேடி மூலம் கணினி வேகம் குறைகிறதா?

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. 

இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. 
குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. 

அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.
இது ஒரு நல்ல ஏற்பாடு தான். 
ஆனால், நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட இந்த புரோகிராம்கள், சில வேளைகளில் நம் கம்ப்யூட்டர் இயக்கத்தில் தலைவலையையும் ஏற்படுத்துகின்றன. 

மிக அதிகமான எண்ணிக்கையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, நீங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், அவை நம் கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தைக் குறைக்கின்றன. 

குறிப்பாக, நாம் பழைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கினால், இந்த வேகக் குறைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. 
நம் இணையத் தேடலின் வேகமும் மிகவும் குறைவாகவே இருக்கும். 
இத்தகைய சூழ்நிலைகளில், நமக்குத் தேவையில்லாத, ஏதோ ஒரு காரணத்திற்காக, நாம் பதிந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்குவதே சிறந்த வழியாகும். 

எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்கும் முயற்சியில் இறங்கும் முன், எந்த புரோகிராம்கள், அதிக மெமரி இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன என்று அறிந்து, நீக்குவதில் அவற்றுக்கு முதல் இடம் தர வேண்டும். இதற்கு டாஸ்க் மேனேஜரைப் (Chrome Task Manager) பயன்படுத்தலாம். 


அதில் எந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்று கண்டறிந்து அதனை அன் இன்ஸ்டால் செய்திடலாம். கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.

குரோம் பிரவுசர் விண்டோவினைத் திறக்கவும். இதன் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கோடுகள் அடங்கிய சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். 


இது 'control and customize' என்று சொல்லப்படும். இதில் கிளிக் செய்து, குரோம் பிரவுசர் இயக்கத்தினை, நம் விருப்பப்படி நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். 

இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் 'tools' என்னும் லேபிள் மீது கிளிக் செய்திடவும். பின்னர், 'Task Manager” என்பதில் கிளிக் செய்திடவும்.

டாஸ்க் மேனேஜரைத் திறக்க Shift+Esc என்ற இரு கீகளை அழுத்தவும் செய்திடலாம்.

இப்போது டாஸ்க் மேனேஜர் விண்டோ உங்களுக்குக் கிடைத்திருக்கும். இங்கு நாம் திறந்திருக்கும் டேப்களுடன், உங்கள் பிரவுசருக்கென, நீங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். 


எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பெயர்களின் முன்னால், jigsaw puzzle கட்டங்கள் போன்ற சிறிய படம் இருப்பதைப் பார்க்கலாம். 

இங்கு எளிதாக, ஒவ்வொரு எக்ஸ்டன்ஷன் புரோகிராமும், எவ்வளவு மெமரி இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன என்று கண்டறியலாம். 'Memory tab' என்பதில் கிளிக் செய்தால், இந்த மெமரி இட அளவின் அடிப்படையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வரிசைப்படுத்தப்படும்.


 'Stats for nerds' என்பதில் கிளிக் செய்வதன் மூலம், மெமரி பயன்பாடு குறித்த கூடுதல் தகவல்களையும் பெறலாம். இந்த 'Stats for nerds' டாஸ்க் மானேஜர் விண்டோவின் இடது கீழ் மூலையில் தென்படும். 

இந்த தகவல்களைப் பார்க்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், எது அதிக மெமரி இடத்தைப் பயன்படுத்துகிறது என்று தெரியவரும். 

அது கட்டாயமாகத் தேவைப்படவில்லை எனில், அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.

இதன் பின்னர், மீண்டும் ரீஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரை இயக்கினால், பிரவுசரைப் பயன்படுத்தினால், அதன் இயக்கத்தில் வேகம் சற்று அதிகமாக இருப்பது தெரிய வரும்.

====================================================================================
ன்று,
ஜனவரி -11.
சாலை பாதுகாப்பு வாரம்
  • நீரிழிவுக்கு மருந்தாக மனிதனில் இன்சுலின் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது(1922)

  • இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறந்த தினம்(1932)

  • அல்பேனியா குடியரசு தினம்(1946)

  • இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்(1966)

  • விடுதலை பெற்ற இந்தியாவின்  இரண்டாவது பிரதமர், லால் பகதுார் சாஸ்திரி.
  • உ.பி., மாநிலம், முகல்சராய் என்ற ஊரில், சாரதா பிரசாத் - ராம்துலாரி தேவி தம்பதிக்கு, 1904, அக்., 2ல் பிறந்தார். மத்திய போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு, வணிக மற்றும் தொழில் துறை, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
  • மத்திய ரயில்வே மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பணிபுரிந்தார். அப்போது, அரியலுாரில் நடந்த ரயில் விபத்தில், 144 பேர் பலியாகினர். விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து, சாஸ்திரி விலகினார்.
  • நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால்நேரு, 1964ல் காலமானார். அவருக்கு அடுத்ததாக, லால் பகதுார் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • இவர் பதவியேற்று, இரண்டு ஆண்டுகளில், அப்போதைய சோவியத் ஒன்றியத்திலிருந்த, தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 
  • அங்கு, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், 1966, ஜன., 11ல்காலமானார்.
=====================================================================================
லால் பகதூர் சாஸ்திரி  1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில்ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.  அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார்ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்கு திரும்பிவிட்டார் . அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்கு திரும்பினார்.
மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை,
இவர் இந்தியாவில்பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில்வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார்[16]. இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.
====================================================================================================
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் மீண்டும் இடம் பெற்றதை 
மத்திய அரசின் பொங்கல் விடுமுறை அறிவிப்பு... திமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! ஸ்டாலின் - tamil news online website
 குறித்து ஸ்டாலின் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் உணர்வுடனும், பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்திருக்கும் பொங்கல் திருநாள் மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
பொங்கல் கொண்டாட தமிழக தமிழகம் தயாராக இருந்த சமயத்தில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய விடுமுறை என்ற பட்டியல் உள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிக முக்கியமானது. அது மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தினம் இது. மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு பொங்கல் தினத்தை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கவே பரிந்துரை செய்திருக்கணும்.
உள் நாக்கத்துடன் பொங்கலை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி அந்த குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தால், அதை மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதித்து அந்த பரிந்துரையை ரத்து செய்திருக்க வேண்டும். பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
இதை செய்யாமல் அந்த குழுவின் பரிந்துரையை அப்படியே மத்திய அரசு ஏற்றுக் கொண்டது தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதற்கு சமமானதாகும். அதனால் தான் திமுக சார்பில் அறிக்கைவிட்டு, சென்னையில் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என் அறிவிக்கப்பட்டது.
அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் கிளர்ந்தெழுத்த இந்த எதிர்ப்பை தொடர்ந்து பொங்கலை கட்டாய விடுமுறை பட்டியலில் மத்திய அரசு மீண்டும் சேர்த்திருப்பது திமுக போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். மத்திய அரசின் இந்த முடிவை தி.முக,வரவேற்கிறது.
=====================================================================================
மோடியின் திட்டம் மக்களை மெல்ல மெல்ல கொல்லும் பிற்போக்கு தனமான திட்டம் - மு.க.ஸ்டாலின் !
வெங்காயநாயுடு எதிரிலேயே பாஜக அரசை கிழிந்தெறிந்த ஸ்டாலின்.!
இந்தியா டுடே மாநாடில் மோடி திட்டத்தை புகழ்ந்து தள்ளினார்கள்  வெங்கய, சந்திரபாபு நாயுடுகள் . கூடிருந்த பாஜக பினாமி விஐபிகளுக்கு ஒரே குஷி.!
அடுத்ததாக மேடை ஏறிய திமுக தலைவர்  ஸ்டாலின் சமூகநீதி கருத்துகளை தெளிவாக விளக்கி மோடியின் பண மோசடி  திட்டத்தை கிழித்தெறிந்தார்.!
மத்திய அரசின் லாபத்திற்காக புகழ்பாடிய மன்றத்தில் மோடி அரசை கண்டித்து ஸ்டாலின் பேசியது நிச்சயம் இந்திய தற்கால  வரலாறு பேசும்.
அதிமுகவின் "மினி"யம்மா சசிகலாவை எந்த தகுதியில் முதல்வர் பன்னீ ர்செல்வத்தை விட்டு விட்டு இந்த மாநாட்டை துவக்கி வைக்க இந்தியாடுடே குழுமம் அழைத்ததோ தெரியவில்லை.
மேடையேறிய "மினி"யம்மா சசிகலா "இந்தியா டுடே தமிழில் வெளிவரும் சிறப்பான நாளிதழ் அது மென்மேலும் வளர வாழ்த்தி"தனது தகுதியை நிலை நாட்டிக்கொண்டார்.
இந்தியாடுடே தமிழில் வார இதழாக வெளி வந்தது.தற்போது தமிழ் இதழ் நிறுத்தப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்த சின்ன உண்மையை மோடி ஆதரவு இந்தியாடுடே குழுமம் "மினி"யம்மா சசிகலாவிடம் சொல்லியே மேடையேற்றிருக்கலாம்.
=======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?