துல்லியமான தாக்குதல் துவங்கிவிட்டது

"பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால்ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான வலியை பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். 
அதன்படி 2016 டிசம்பர் 30 வரையிலான 50 நாட்களில் இதன் தாக்கம் குறித்து பல்வேறு ஆய்வுகளும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதற்குப் பிறகும் 10 நாட்களாக கடந்துவிட்டன. ஆக மொத்தம் முழுமையாக இரண் மாதங்கள். குறுகிய கால வலியை பொறுத்துக் கொண்டால், நீண்ட கால பயனை அடைய முடியும் என்ற பிரதமரின் கூற்றுக்கு மாறாக அனைத்துத் துறைகளிலும் நீண்ட காலத் தாக்குதல்கள் துவங்கியுள்ளன.வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்தி மீதானபாதகமான தாக்கத்தால் நாட்டின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெருமளவில் வேலையிழந்துவிட்டனர். அமைப்பு சார் மற்றும் அமைப்பு சாரா ஆகிய இரு துறைகளிலும் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சுய தொழில் மற்றும் சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களும் பாதிப்பிலிருந்து மீளமுடியவில்லை. ஒரு நபர் மற்றும் இரு நபர் சார்ந்த, நிறுவனமாக்கப்படாத சுய தொழில்களை மேற்கொண்டும் மக்களும் கடந்த அறுபது நாட்களில் பெரும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது போன்றே நாட்டின் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் விவசாயத் துறை சாராத துறைகளாக உள்ளன. இந்நிறுவனங்கள் முற்றிலும் அழிவின் விளிம்புக்குச் சென்று விட்டன. நம்நாட்டில் 92 சதவீத மக்கள் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கும் சமூக பாதுகாப்புக்கும் வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கான உரிமைகளோ அங்கீகாரமோஇல்லாமல் நவீன தாராளமயக் கொள்கையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அவர்களை மேலும் முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கான கருவியாக பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயரும் வாழ்வாதாரங்கள்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்முதன்மையான தாக்குதலுக்குள்ளாகியிருப்பது முறைசார துறைகளே. ‘முறைசாராதொழிலாளர்களும் சிறிய தொழில் நிறுவனங்களும் அவர்களின் வாழ்வாதாரங்களுமே கூட இடம் பெயரத் துவங்கிவிட்டன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே அதன்தாக்கம் வெளிவரத் துவங்கியது. அதன்படி தினக்கூலி தொழிலாளர்கள் மிக பெருமளவிலான தாக்குதலுக்குள்ளாகினர்.

கடந்த நவம்பர்14க்கு முன்னதாகவே அதாவது முதல் 6 நாட்களிலேயே பணமதிப்பு நீக்கத்தால் கட்டுமான பணியாளர்கள் வேலையிழந்தனர். கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டன. ஏனென்றால் பணமதிப்பு நீக்கப்பட்ட பழையநோட்டுக்களை மட்டுமே கொண்டு கூலிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. மதிப்பு நீக்கப்பட்டரூபாய் நோட்டுக்களை பெறமுடியாத நிலையில் கட்டுமானத் தொழில் முடங்கியது.

இதுபோன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பாதகமான தாக்கங்கள் குறித்து தொடர்கட்டுரைகளும் ஆதாரங்களும் வெளிவரத் துவங்கின. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியில் உள்ள வாரணாசி நகரில்புகழ்பெற்ற பட்டு உற்பத்தித் தொழில் கடும்தாக்குதலுக்குள்ளானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவிற்கு தாராளமாக நிதியளித்த குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்வாஸ்த்ரா உத்யோக் சிங். பட்டு நெசவுத் தொழில் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் தனது தொழில் வணிகம் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக" கூறினார். நெசவுத் தொழிலை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ஏனென்றால் அவர்களுக்கு கூலியைக் கொடுப்பதற்கு புதிய ரூபாய் நோட்டுக்களோ, மதிப்புமிக்க ரூபாய்நோட்டுக்களோ இல்லாததால் நெசவாளர்களுக்கு கூலிகொடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு கூலி ரூ. 300ம் விசைத்தறி நெசவுப் பணியில் ஈடுபடும் ஒருதொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500ம் கூலிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், தற்போதுஇரண்டு தறிகளின் இயக்கமும் நின்று விட்டன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நெசவுத் தொழிற்கூடங்கள் முற்றிலும் முடங்கிவிட்டன.

மற்றுமொரு உதாரணம், ஆக்ராவில் இயங்கிவரும் தோல் உற்பத்தி தொழிற்சாலைகள் முழுவதும் "ரொக்கப் பரிவர்த்தனையை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. பணமதிப்பு நீக்கத்தால் தோல் பொருட்கள் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் 60 சதவீதமும்,ஆக்ராவில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் உற்பத்தி மற்றும் வணிகம் 75 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது என அசோசெம் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கான்பூர் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து, உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருட்களான விலங்கின் தோல்கள் வருகையே முற்றிலும் நின்று விட்டன.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கசாப்பு கடைக்காரர்களுக்கு பணம் கொடுக்கமுடியவில்லை; பணத்தைப் பெறாமல் விற்பனைசெய்யவும் கசாப்புக்கடைக்காரர்கள் விரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது. இத்துறையில் 75 சதவீதமான தொழிலாளர்கள் கூலி பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு குறைந்தது 9 மாத காலம்முதல் 12 மாதகாலமாகும் எனவும் தோல்தொழில் துறையை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்ற நிலையே சிறு அளவிலான கண்ணாடி தொழிற்சாலைகளிலும் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய் பணம் இருந்தால்தான் உற்பத்தி நடைபெறும் என்று பெரோஷாபாத்தில் உள்ள கண்ணாடி சார்ந்த தொழில் முனைவோர் கூறுகின்றனர். பெரோஷாபாத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் கண்ணாடி வளையல் உற்பத்தித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இந்த தொழிற்சாலைகளில் 100சதவீத உற்பத்தியும் நின்றுவிட்டது. ஏனென்றால் இதற்கான மூலப்பொருட்கள் அளிக்கும்நிறுவனங்களுக்கும் சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கும் கூட கொடுப்பதற்கு புதிய ரூபாய்நோட்டுகள் இல்லை. இதனால் மிக கடுமையான நிலைக்கு இத்துறை தள்ளப்பட்டது. உற்பத்தி முழுமையாக முடங்கியது. நவம்பர் மாதத்தில் துவங்கிய இந்த பாதிப்பு மிகவும் தீவிரமானதன் பின்னணியில் பெரும் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.கொள்முதல் மேலாண்மை குறியீடு (பிஎம்ஐ)மருந்து துறையில் கடந்த 2016 அக்டோபரில் 54.5 சதவீதமாக இருந்த உற்பத்தி நவம்பர் 2016இறுதியில் 46.7 சதவீதமாக சரிந்துள்ளது.

‘துல்லியமான வீழ்ச்சி’ ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற சூழ்நிலையே நாட்டின் விவசாயத் துறையிலும் நிகழ்ந்துள்ளது. தில்லியில் உள்ள ஆசாத்பூர் காய்கறிச் சந்தையில், தினந்தோறும் பெருமளவிலான வணிகம் நடைபெறும். ஆனால் கடந்த இரண்டரை மாதகாலத்தில் 50 முதல் 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. பெருமளவிலான மொத்த வணிகர்கள் மற்றும் தரகு முகவர்கள், வணிக ஒப்பந்தங்கள் என அனைத்து பக்கங்களிலும் மிக பெருமளவிற்கான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாதாரிசந்தைக்கு வரும் பருத்தியின் வருகை 80 சதவீதம் குறைந்துவிட்டது.

மற்ற விவசாயம் சார்ந்தஉற்பத்தி பொருட்கள் ஏறக்குறைய 75 சதவீதம் குறைந்துள்ளன. சில விவசாயிகள் உற்பத்தி பொருட்களை கட்டாயமாக விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாய உற்பத்தி சந்தைக்குழு பழைய நோட்டுகளை வாங்குவதற்கு அனுமதி தராததாலும் விவசாய உற்பத்தி பொருட்கள் தேங்கியதாலும் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்.
ஆதாயமடைந்ததுகார்ப்பரேட் நிறுவனங்களே.

பொதுவாக வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்தி வீழ்ச்சி என்பது ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சிறிய உற்பத்தியாளர்கள் மற்றும் அதோடு இணைந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நாசப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட துறைகள் இதன்மூலம் லாபமடைந்திருக்கின்றன. குறிப்பாக "இ" காமர்ஸ் சேவைத் துறை மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனை நடவடிக்கையை மேற்கொண்ட நிறுவனங்கள் பெரும் லாபமடைந்திருக்கின்றன.

ஒருபுறம் பெரும் கோடீஸ்வரர்களின் பல்லாயிரக்கணக்கான கோடி கறுப்புப்பணம் மதிப்புமிக்க பணமாக மாற்றப்பட்டுள்ளது; மறுபுறம் மிக கவனமாக கட்டமைக்கப்பட்ட சிலடிஜிட்டல் நிறுவனங்கள் இவை. அனைத்தும் மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் நாடு கடந்த மூலதனத்தை கொண்டுள்ளன.மோடி அறிவிப்பால் ஏற்பட்டுள்ள சூழலை மிகுந்த ஆர்வத்தோடு பயன்படுத்திக் கொண்டு பெருலாபமடைந்த நிறுவனமான பேடிஎம், சீன நாட்டின் பெரு நிறுவனமான அலிபாபா குழுமத்தின் ஒரு கிளை மூலமாக இயக்கப்படும் நிதிநிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த2 மாதங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 70லட்சம்பரிவர்த்தனைகள் என்ற விகிதத்தில் வர்த்தகம் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது வழக்கமான காலங்களை விட 250 சதவீதம் அதிகமாகும். மொபிங்லிக் என்பது மற்றொரு டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமாகும். இது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். ட்ரீலைன் ஆசியா போன்ற நிறுவனங்கள் ரூ.155 கோடிக்கு தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதன் மூலம் பலனடைந்துள்ளன. ஸ்நாப்டீல் என்ற அமெரிக்க நிறுவனம் போன்றவை ஒவ்வொரு நாளும் பரிவர்த்தனை நடவடிக்கைகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. 
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அதிவேக வளர்ச்சி என்று கூறுவது, இந்தியபொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும் ஊடுருவி சர்வதேச நிதி மூலதனத்தின் பெருக்கத்திற்கே உதவி புரிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
                                                                                                                                       -அர்ச்சனா பிரசாத்
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தமிழில் : ஜோ.ராஜ்மோகன்.
நன்றி:தீக்கதிர்.
======================================================================================
ன்று,
ஜனவரி -12.



  • இந்திய தேசிய இளைஞர் தினம்

  •  விவேகானந்தர் பிறந்த தினம்(1863)

  • முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது(1908)

  • நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது(1970)
=======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?