சின்னம்மா வருக,சீரழிந்த ஆட்சியை தொடர்க !


கருகிய பயிர்களைக் கண்டு, அன்றாடம் விவசாயிகள் தற் கொலையாலும் மாரடைப்பாலும் செத்து மடிகிறார்கள். 
ஊடகங்களுக்கு விவசாயிகளின் சாவுச்செய்தியைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற விவசாயிகளின் சாவுச் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. 
இது வரலாறு காணாத கொடுமையாகும். ஆனால், ஆட்சியாளர்கள் இதுபற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை, தமிழகத்தில்ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா?

கடந்த டிசம்பர் 28ம்தேதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் இணைந்து தமிழகமெங்கும் காத்திருப்புப் போராட்டம்நடத்தின. 
உணவு அமைச்சர் காமராஜ், திருவாரூரில் எங்களைச் சந்தித்து, டிசம்பர் 30 அன்று சென்னைக் கோட்டையில் உங் களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறோம், ஒரு நல்ல முடிவு எடுப்போம், போராட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் போராட்டத்தை ஒத்திவைத்தனர்..
அதேபோல், டிசம்பர்-30 அன்றுகோட்டையில் நடந்த பேச்சுவார்த்தையில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலாரூ.10 லட்சம், விவசாயப் பாதிப்பால்ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், வேலையின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் என நிவாரணம் அளித்திட வேண்டும்.
 தாமதமாகும் பட்சத்தில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஏதேனும் ஒரு தொகையை முதலில் அளியுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவியுங்கள். 
பதற்றம் வேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதலாவது தெரிவித்து, அறிக்கைவிடுங்கள் என்று அமைச்சர்களை போராட்டக்குழுவினர்  கேட்டுக் கொண்டனர் .
முதலமைச்சரிடம் கலந்து பேசி ஆவன செய்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.
ஆனால், இதுவரை அரசு எதுவுமே செய்யவில்லை. 
தமிழ்நாட்டில் ஒரு  ஆட்சி இருக்கிறதா ?அது இயங்குகிறதா?? என்பது பெரிய கேள்விக்குறி.
அதிமுக கட்சியினர்  அமைசர்கள், தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் தான் அவர்களின் கவனமும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. 
இன்னும் இரண்டொரு நாளில் இதுபற்றி இந்த அரசு ஏதும் நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து பேசி, மிக விரைவில் கடையடைப்பு, பந்த் போன்ற போராட் டத்தை அறிவிப்போம் என்று விவசாயிகள் சங்கத்தினர் தறிவித்தனர்.விவசாயிகள் கோரிக்கைகள்  நிறைவேறாவிட்டால்  விவசாயிகள் தற்கொலை பெருகுவது மட்டுமின்றி தமிழக மக்கள் உணவுப் பஞ்சத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களும் சாவை எதிர் நோக்கும் நிலை உண்டாகும்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும்,மக்கள் இன்னமும் ஒட்டு மொத்தமாக திமுகவுக்கு வாக்களிக்க தயங்கவும் காரணமே 1971களில் உண்டான பஞ்சமும், உணவுத்தட்டுப்பாடும் தான்.
 நாற்றமடிக்கும் தாய்லந்து   அரிசி ,மக்காசோளம் ,கப்பை கிழங்கு,ஆகியவைகள் வேறு வழியின்றி வாங்கி திண்ற அவதியாலும் தான்.

இதனிடையே, தமிழகத்தில் திங்களன்றும் ஒரே நாளில் 5க்கும்மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்த செய்தி வந்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், செல்லம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு (45). விவசாயியான இவர் தனது நிலத்தில் 2 ஏக்கருக்கு கரும்பு மற்றும் பயிர் விளைவித்திருந்தார். இந்நிலையில், சாகுபடி நேரத்தில் தண்ணீர் இல்லாததால் கரும்புஉள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் காய்ந்து கருகின. மனம்உடைந்த அவர் திங்களன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆழங் காத் தான் பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தமிழன்( 62). இவர்,தனது விளை நிலத்திற்கு சென்று கருகிய பயிரை பார்வையிட்ட தும், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற விவசாயிகள் செந்தமிழனை உடனடியாக மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அவரைபரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.


நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருக்குவளைக்கு அருகிலுள்ள கீழ நாட்டிருப்பு என்னும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம்(50). இவர், கோயில் நிலத்தில் மூன்று ஏக்கரில் குத்தகைக்கு நேரடி நெல் விதைப்புச் செய்திருந்தார். உழவும் தனது வாழ்வும் பொய்த்துவிட்டன என்று சோகத்தால், அழுதழுது, மனம் தாங்க முடியாமல், ஞாயிற்றுக்கிழமை, மாலை சுமார் 5.30 மணியளவில், விவசாயி பன்னீர்செல்வம், தனது வீட்டிலேயே தூக்குப் போட்டு மரணத்தைத் தழுவினார்.

கீழ்வேளூர் ஒன்றியம், வெண்மணிக்கு அருகிலுள்ள மேலக்காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தம்புசாமி(57). இவர் 2 ஏக்கர் நிலத்தில் சம்பா நேரடி நெல் விதைப்புச் செய்திருந்தார். கருகிய பயிர்களைக் கண்டு ஆறாத் துயரில் புலம்பிக் கொண்டிருந்த தம்புசாமி, திங்கட்கிழமை காலை, மாரடைப்பு ஏற்பட்டுத் தனது வயலிலேயே சுருண்டு விழுந்து மாண்டு போனார்.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள வாகைக்குளம் விவசாயி அழகர்சாமி(60) தனக்கு சொந்தமான 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். ஏக்கருக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் செலவு செய்திருந்த நிலையில் தொடர்ந்து மழை இல்லாததால் பயிர்கள் வாடின. இதைக் கண்ட விவசாயி அழகர்சாமி மன வேதனையுடன் வீட்டிற்கு சென்றுள்ளர். வீட்டு வாசலுக்கு சென்றவுடன் மயங்கிய நிலையில் கீழே விழுந்து மரணமடைந்தார்.
அதிமுக அமைசர்களுக்கு சசிகலாவை முதல்வராக்குவதை தவிர வேறு ஆட்சி,நிர்வாகம் செய்யம் எண்ணத்தையே கைவிட்டு    விட்டார்கள்.
தமிழத்திலோ வறட்சி கோரத்தாண்டவம் ஆடுகிறது .விவசாயிகள் 102 பேர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
மாரடைப்பால் மரணித்தவர்கள்,கணக்கில் வராத விவசாயிகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது .
ஆனால் அதிமுக அமைசர்களோ" சின்னம்மா வருக,சீரழிந்த ஆட்சி தருக" என்று முழுநேர வேலை செய்கிறார்கள்.
மிச்சம் இருக்கும் மூன்றரை  ஆண்டில் கொள்ளையடிப்பதை   தவிர வேறு எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை .வரும் தேர்தலில் அவர்கள் வீட்டு  நாய் கூட (வாக்குரிமை இருந்தால் )அதிமுக அமைசர்களுக்கு வாக்களிக்காது.

=====================================================================================
ன்று,
ஜனவரி-03.
  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது(1958)
  • ஆப்பிள் கணினி நிறுவனம் அமைக்கப்பட்டது(1977)
  • ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கட்டபொம்மன் பிறந்த தினம்(1740)
  • முதல் எலக்ட்ரானிக் கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது(1957)
  • அலாஸ்கா, அமெரிக்காவின் 49வது மாநிலமானது(1959

======================================================================================

 சில ஆண்டுகள் கழித்து அதிமுக தலைமைசெயலகத்தில் ..........................................................

வட்ட செயலாளர்  : "அண்ணே ஜெயலலிதான்னா யாருணே" ????

மாவட்ட செயலாளர்  :  "அட இது கூட தெரியாதா.. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி தங்கதாரகை                                                    சின்னம்மா  இருக்காங்கல்ல.. அவங்களோட  முன்னாள் தோழி.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?