இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தத்தளிக்கும் பல்கலைகள்

படம்
ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலாவைத் தொடர்ந்து நாட்டின் முதன்மை பல்கலைக் கழகமான ஜவஹர்லால் நேரு மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருதலித் ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன்தற்கொலை செய்து கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நமது கல்விமுறையில் பேணி வளர்க்கப்பட்டு வந்த மதச்சார்பற்ற கருத்தோட்டம், உலகளாவிய பார்வை, கருத்துரிமை, கல்வி வளாக ஜனநாயகம், மாணவர் ஒற்றுமை, உள்ளிட்டவைகள் நசுக்கப்பட்டு வருவதும், மேலும், கல்வி வளாகங்களில் இன்றும் தொடரும் சாதிய பாகுபாடும் இதுபோன்ற மரணங்களுக்கு முக்கியக் காரணம். கல்வியின் அவசியத்தை உணர்ந்த உலகின்பல நாடுகள் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டுவந்து, கல்வியின் தரத்தையும், உயர் கல்வி நிலையங்களையும் மேம்படுத்தி வருகின்றன. மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா உயர் கல்வி துறையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருக்கின்றன. 2000-ம் ஆண்டில் 1400 பல்கலைக்கழங்கள் இருந்த சீனாவில் இன்று 2553 ஆக உயர்ந்துள்ளது. உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 2002-ல் 11.02 மில்லியனிலிருந்து 2014-ல் 23.91 ம

ஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை

படம்
சந்தைப்படுத்தல் உங்களது நிறுவனப் பொருட்களை சந்தைப்படுத்த திட்டம் ( மார்க்கெடிங் ப்ளானை) வகுக்க முக்கியமாக அடிப்படையான  கு   பத்து றிப்புகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.   அந்த     பத்து  குறிப்புகளிலும்  உங்களின் சந்தைப்படுத்தலில் இருக்கவேண்டியவை  மூன்று முக்கியம்.  அவைகளை கொண்டே நாம் சந்தைப்படுத்தல் பற்றிய  பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம்.  அந்த முதல் மூன்று விபரங்கள்: 1,நம் பொருட்களுக்கான சரியான தளத்தை தேர்ந்தெடுத்தல்  2, வாடிக்கையாளரை அடையாளம் காணல்  3, சரியான உள்ளடக்கத்தை உருவாக்கல் .  அதன் பின்னர் இந்த மூன்றை முன்கொண்டு பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம். 1. நீங்கள்  சந்தைப்படுத்தலில் இறங்கையில்  கடுமையான பாதையை தேர்ந்தெடுக்காதீர். அதை முடிந்தவரை தவிருங்கள். எளிதான தெளிவான, நிலையான பாதையை தேர்வு செய்து, உங்கள் சந்தைப்படுத்தல் (மார்க்கெடிங்)களத்தை வடிவமையுங்கள்.  உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், வாடிக்கையாளரை அடையாளம் காணுங்கள், பட்ஜெட்டை தயார் செய்யுங்கள், அதற்கான செயல் உத்தியை வடிவமைத்து வேலையை துவக்குங்கள். 2. உங்களின்  சந்தைப்படுத்தல்  பிரச்சாரம் சரிய

தண்ணீர் தினம்..

படம்
 இன்று உலக தண்ணீர் தினம் . தண்ணீரின் அருமை இன்று மக்கள் அனைவரும் உணர்ப்பித்து கொண்டுள்ளனர். அதை அவர்கள் கலிக்குடங்களுடன் ஆளாய் பார்ப்பதிலும்.குடமொன்றுக்கு 10 ரூபாய் வரை கொடுத்து வாங்குவதிலும் தெரிகிறது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பது அறிந்ததே. பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்புதான்.70 சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது.அதற்கு மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.  1992ல் பிரேசில்நாட்டின் 'ரியோ டி ஜெனிரோ'நகரில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கியநாடுகள் பேரவைக் கூட்டத் தொடர் நடந்தது. அதில், வைக்கப்பட்ட 21ம் நுாற்றாண்டின் செயல் திட்டப்படி 1993 முதல் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 22ம் நாள் 'உலக நீர் நாள்' எனக் கடை

பணக்கட்டுகள் கன்ட்டெயினர்....!

படம்
செ ன்னைத் துறைமுகத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணக்கட்டுகள் கன்ட்டெயினர் லாரிகள் மூலம் கடத்தப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலையடுத்து,வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் சென்னைத் துறைமுகத்தில் பரபரப்பு நிலவியது.  இதனிடையே, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய, கன்ட்டெயினர் லாரியில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கடத்தப்பட்டது என்றும், அது சென்னைத் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் தகவல் கசிந்துள்ளது.   வரும்   ஏப்ரல் 12-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல்  நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்குச் சேகரிப்பு, பிரசார திட்டங்கள் என்று களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.  அ.தி.மு.கவில்  இரட்டை இலை எந்த அணிக்குச் செல்லும் என்ற பரபரப்பு விவாதம் நடந்து வரும் நிலையில் தி.மு.க. மிக லாகவமாக வாக்குச் சேகரிப்பில் வேகம் கூட்டியுள்ளது. பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாக