எப்படி நடந்தது ?

ஜெயலலிதா  மாபெரும் தவறு அவரின் மரணத்தை மர்மமாக மட்டுமல்ல,பரிதாபமாகவும் வைத்து விட்டது.
எந்தவித சொந்தமுமில்லாத ஒரு கொள்ளைக்கும்பலை தன மாளிகையிலேயே வைத்து வளர்த்ததும்,அவர்கள் கொள்ளைக்கு துணை போனதும் ஜெயாவின் உயிருக்கே ஆபத்தாகி விட்டது.

இடையில் வீட்டை விட்டு சசிகலா கொள்ளைக்கும்பலை  துரத்திய ஜெயலலிதா அத்துடன் அவர்களை விட்டிருந்தாலே போதுமானதாக்கியிருக்கும்.
ஆனால் சசிகலாவை மீண்டும் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஜெயலலிதா தன்னுடன் வைத்துக்கொண்டது அவர் இதுவரை செய்த தவறுகளில் மாபெரும் உயிர் வாங்கிய தவறு.

மீண்டும் சசிகலாவை சேர்க்கும் படி தூண்டிய சக்தி என்ன வென்றுதான் தெரியவில்லை.

ஏதோ ஒரு வகையில் சசிகலா குடும்பத்தாரிடம் ஜெயலலிதா வசமாக மாட்டிக்கொண்டு பிளாக் மெயில் செய்யப்பட்டதாகவே உணர முடிகிறது.

ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட லஞ்ச,ஊழல் குற்றசாட்டுகள் அதற்கு அவர் பெற்ற சிறை வாசங்கள் அனைத்துக்கும் தானும் ,சசிகலாவும் செய்த  செயல்களும்,சசிகலா தொடர்பும்தான் காரணம் என்று ஜெயலலிதா உணராமலா இருந்திருப்பார்?

பெரும் புத்திசாலி என்று அவர் துதிபாடிகள்,ஊடகங்கள் மூலம் கொண்டாடப்படும் ஜெயலலிதா அதை உணராமல் இருக்க முடியாது.

இருந்தும் சசிகலாவை அவர் இணைக்க ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.இருந்தது.
அதுதான் இன்று ஜெயலலிதா  உயிரை பறித்துள்ளது.

ஆனால் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் யார்,என்பது அநேகமாக தமிழக மக்கள் அனைவரும் அறிந்திருந்தாலும் கூட எப்படி நடந்தது என்பதுதான் இன்றைய கோடிகளுக்கான கேள்வி.

தமிழக சுகாதார துறை மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களும், மர்மங்களும் அதிகரித்துள்ளன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, தமிழக அரசின் சுகாதார துறை, அப்பல்லோ மருத்துவமனை, டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சார்பில், சமீபத்தில், அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்த அறிக்கைகளால், மேலும் சந்தேகங்கள், மர்மங்கள் அதிகரித்துள்ளன.


* அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, சுயநினைவு குறைந்து, மயங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில், அவருக்கு என்ன நடந்தது; உடன் இருந்தவர்கள் யார்; உடனடியாக செய்த முதலுதவி என்ன; யாருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது; எவ்வளவு நேரமாக, அவர் பாதிக்கப்பட்டிருந்தார்

* போயஸ் கார்டன் இல்லத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகள் என்ன; முதல்வர் என்ற முறையில், அரசு மருத்துவ மனை டாக்டர்கள், அங்கு பணியில் இருந்தனரா? 

* ஜெயலலிதாவுக்கு வழக்கமாக சிகிச்சை அளித்த டாக்டர்கள், அங்கு இருந்தனரா; ஜெயலலிதா உடல்நிலை மோசமான தகவல், கவர்னர் அலுவலகம், தலைமை செயலர், உள்துறை செயலர், சுகாதார துறை செயலர் போன்றோருக்கு, உடனடியாக சொல்லப்பட்டதா? 

* ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போது, அவருக்கு, 48 சதவீதம் அளவுக்கே சுவாசம் இருந்ததாக, அப்பல்லோ அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அளவுக்கு மோசமாகும் வரை, அவரை வீட்டில் வைத்திருந்தது ஏன்?


* முதல்வரின் உடல்நலம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளிக்கப் பட்டதா; மத்திய உள்துறை, இதுகுறித்து நேரடி விசாரணை நடத்தியதா; முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்ட விபரம், அவரது உறவினர்கள், உடன் இருந்த ஊழியர்கள், ரத்த உறவிலான குடும்பத்தின ருக்கு தெரியப்படுத்தப் பட்டதா; அவர்கள் சுதந்திர மாக, ஜெயலலிதாவின் உடல்நலம் அறிய அனுமதிக்கப்பட்டனரா?

* ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட, 'இசட் பிளஸ்' பாதுகாவலர்களுக்கு, எப்போது தகவல் தெரிவிக்கப் பட்டது; அவர்கள் யாரிடம், இதுகுறித்து தகவல் அளித்தனர்; அதன் நகலை அரசு பெற்றதா?


* ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும் முன், செரிமான பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், கொஞ்சம் கூட கவனிக்கப்படாத சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பி பிரச்னை, கடும் வலியுடன் கூடிய குடல் நோய், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, தொடர் இருமல் போன்ற பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் 

* அந்த நோய்கள், அவருக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளன என, மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது. இதை, அவருடன் இருந்து கவனிக்காமல் விட்டது யார்; நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு, அவருடைய உடல்நிலை மிக மோசமாக மாற என்ன காரணம்?


* லண்டனில் இருந்து வந்த ரிச்சட் பீலே, அமெரிக்க டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உட்பட, 13 பேர், மருத்துவ அறிவுரை வழங்கியதாக மட்டும், மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, அரசும், மருத்துவமனையும் வழங்கப்பட்ட தகவல்களில், பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. அதன் முரண்பாடு களுக்கு என்ன பதில்?

* எய்ம்ஸ் அறிக்கையின்படி, சிகிச்சையில் சில ,நேரங்களில், அவர் லேசாக சுய நினைவுக்கு வந்துள்ளார். ஆனால், 'அவர், டிஸ்சார்ஜ் ஆவதுஅவருடைய விருப்பத்தை பொறுத்தது' என, ஊடகங்களில் தகவல் தெரிவித்தது எப்படி; அந்த தகவல் வரும்போது, அதை அரசும், அ.தி.மு.க.,வும் மறுக்காதது ஏன்?

* எய்ம்ஸ் டாக்டர்கள், தலைமை செயலர், அமைச்சர்களுடன் அவ்வப்போது, உடல்நிலை விபரத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், முறைப்படி, முதல்வரின் உடல் நலம் குறித்து, அரசின் செய்திக்குறிப்பு வராதது ஏன்?

* ஜெயலலிதா சிகிச்சை குறித்து, சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். 

ஆனால், அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு, அவர்கள் சிகிச்சையே அளிக்காமல், சிகிச்சை குறித்து தகவல் வெளியிட்டது எப்படி?

* சிகிச்சை அளித்த போதும், மருத்துவ மனையில் ஜெயலலிதாவை சேர்க்கும் போதும், மூத்த அமைச்சரான பன்னீர் செல்வத் துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா; அந்த விபரங்கள், அறிக்கையில் இல்லை. 
ஆனால், இறப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நாளில் தான், பன்னீர் செல்வத்துக்கு, தகவல் அளிக்கப்பட்டு உள்ளதை, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் 

* அவர், முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன் தான், அந்த தகவலை தெரிந்து கொண்டாரா?
இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், இன்னும் விரிவான பதில் கிடைக்கவில்லை.

======================================================================================
மோடி சுனாமி என்றெல்லாம் ஒன்றும் இல்லை.
ஏற்கனவே பாஜக ஆண்ட மாநிலம் மீண்டும் அப்பா,மகன் தகராறு நாற்றத்தால் உபி யில் ஆடசி.
மேலோட்டமாகப்பார்த்தால் இதுவரை ஆண்ட கட்சிகளை நான்கு மாநில மக்களும் மாற்றியுள்ளனர்.
அப்படி ஆடசி இழந்தது மோடியின் பாஜகவும்தான்.
உபி வெற்றியை மட்டுமே பாஜகவின விட  ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி காட்டுகின்றனர்.

========================================================================================
ன்று,
மார்ச் -12.
  • உலக சிறுநீரக தினம்
  • மொரீசியஸ் தேசிய தினம்
  • சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)
  • ஆஸ்திரேலியாவின்  தலைநகர் கான்பரா என அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது(1913)
  • நியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)

=========================================================================================

ஆண்டு தோறும்
  • உலக சிறுநீரக தினம்
 மார்ச் மாதத்தில்  'உலக சிறுநீரக தினம்' அனுஷ்டிக்கப்படுகிறது.  'சிறுவரும் சிறுநீரக நோயும் 'ஆரம்பத்தில் கவனமாக செயற்படுவதன் மூலம் அனைவரையும் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாப்போம்' (Act Early to Prevent It) எனும் தொனிப்பொருளில் உலகளவிய ரீதியில் உலக சிறுநீரக தினம் நினைவுகூறப்படுகிறது.

சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

kidney66 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2006ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக சிறுநீரக தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாடுகளின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 88 ஆக அதிகரித்தது.

இலங்கையில் சிறுநீரக நோய் பெரும் சுகாதார பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது. அதிகமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மட்டுமன்றி தற்போது வடமாகாணத்திலும் சிறுநோயக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இலங்கையில் முதன்முதலாக 1991ஆம் ஆண்டு அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக நோயாளி அடையாளங்காணப்பட்டார்.

Farmersஇந்நோய்க்கு அதிகளவில் விவசாயிகளே பலியாகி வருகின்றனர். எனினும் கணிசமான அளவு பெண்களும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களுக்கமைய வடமத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் உள்ள 15-70 வயதானவர்களிடையே 15 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1991ஆம் ஆண்டே நாட்பட்ட சிறுநீரக நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடக்கம் இன்றுவரை வடமத்திய மாகாணத்தின்அநுராதபுர மாவட்டத்தில் மட்டும் சுமார் 22,000 க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் மாதந்தோறும் சுமார் 1,100 சிறுநீரக நோயளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் வருடாந்தம் சுமார் 300 பேர் வரையில் மரணிக்கின்றனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீடுகளிலும் இறப்பதனால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிறுநீரக நோயானது குறுகிய கால  தீவிர சிறுநீரக பாதிப்பு மற்றும் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு என்று இரு வகைப்படும். குறுகிய கால சிறுநீரக பாதிப்பானது ஆரம்பக்கட்டத்தில் அடையாளங்காணப்படுமிடத்து, சிகிச்சை வழங்கி குணப்படுத்தலாம். இந்நோய் பாம்பு விஷம் போன்றவை சிறுநீரில் கலத்தல், நீரிழப்பு மற்றும் சிறுநீரக தடங்கல் ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இந்நோய் நீடிக்கும் பட்சத்தில் நாட்பட்ட சிறுநீரக நோயாக மாறுகிறது. இதில் முதற்கட்டம் அடையாளங்காணப்பட முடிகின்ற அதேவேளை இரண்டாம் கட்டம் அடையாளங்காண முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் இரத்த அழுத்தமும் நீரிழிவுமே சிறுநீரக நோய்க்கான பிரதான காரணிகளாக அமைகின்றன. இலங்கையில் இத்தனை வேகமாக நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம் இதுவரையில் உறுதியாக கூற முடியாதுள்ள அதேவேளை, அசுத்தமான நீர், இரசாயனப் பொருட்கள் நீரில் கலக்கின்றமை, போஷாக்கின்மை என்பனவே காரணமாக அமைகின்றன என்று நம்பப்படுகிறது.

சிறுநீரக பாதிப்பை ஐந்து கட்டங்களாக ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். இதில் முதல் மூன்று கட்டங்களில் சிறுநீரக நோய்க்கான எவ்விதமான அறிக்குறிகளும் காணப்படுவதில்லை. கடைசி இரு கட்டங்கள் அடையாளங்காணக்கூடியனவாகவும் ஆபத்தானவையாகவும் பார்க்கப்படுகின்றன. அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் அதிகளவு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 4 வீதமானவர்கள் குறைந்த வருமானமுடைய 30-60 வயதுக்குட்பட்ட ஏழை விவசாயிகளாவர்.

இலங்கையில் சிறுநீரக நோயை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்குவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளார். அதனடிப்படையில் வட மத்திய மாகாணத்தில் விசேட மருத்துவமனை ஆரம்பித்தமை, சிறுநீரக நோயாளர்களுக்கு நிதியுதவி வழங்கியமை, அரச மருத்துவமனைகளில் விசேட சிறுநீரக சிகிச்கை பிரிவுகள் ஆரம்பித்தமை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி அமைத்தமை போன்றவற்றை குறிப்பிடலாம்.

இது தவிர மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கவும் நாட்டில் மீண்டும் சேதனப்பசளை பாவனையை மேம்படுத்தல், நச்சு கலந்த உணவல்லாத இலங்கை திட்டம் என்பனவும் இந்நோய்க்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுகாதார அமைச்சும் சிறுநீரக நோயை தடுத்தல், அடையாளங்காணல், குணப்படுத்தல், கட்டுப்படுத்தல் போன்றவற்றுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க, ஒவ்வொரு மனிதனும் தன் உடல் குறித்து அக்கறை காட்டுவது அத்தியவசியமானது. எனவே சிறுநீரக நோய்த் தொடர்பிலும் நாம் கவனமாக இருத்தல் அவசியம்.

waterசிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு தினமும் 8-10 கோப்பை தூய நீர் அருந்த வேண்டும். இதுவே வெயிலில் நின்று பணியாற்றும் போது குடிநீரை அதிகமாக பருக வேண்டும். கொதித்த நீர், வடிகட்டிய நீர் போன்றவற்றை பயன்படுத்துவது நன்மை பயக்கும். இயற்கையான பானங்களும் பருகுவதற்கு ஏற்றவை.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாதுகாப்பாக கையுறை, காலுறை, முகமூடி என்பவற்றை பயன்படுத்துவது நச்சு உடலில் கலப்பதை தவிர்க்கும். எது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் அதி வேகமாக பரவி வரும் சிறுநீரக நோயை தடுப்பதற்கு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவிகளை நாடியுள்ளது. இதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும். எட்டப்படவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

ஆர்த்தி பாக்கியநாதன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?