தியாகி தினகரனின் பின்புலம்.

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்தே, தமிழக அரசியல் களம் பரபரப்பாக சூடுபிடித்தது.

ஜெ. மறைவுக்குப் பின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றது, அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக வி..கே சசிகலா தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டது, முதல்வராக சசிகலா பதவியேற்க ஏதுவாக அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக அவரைத் தேர்ந்தெடுத்தது, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கும் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டது என அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளால் தமிழகம் களேபாரமானது.
இதற்கிடையே தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா பெற்றதாகவும், தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறி, ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தார், அ.தி.மு.க பிளவு பட்டது,
சசிகலா சிறை செல்லும் முன்பாக தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியேற்க வழிவகுத்ததுடன், கட்சியை வழிநடத்த தனது அக்கா மகன் டி.டி.வி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.
சசிகலா மீது தமிழக மக்களும், அ.தி.மு.க-வில் ஒருதரப்பினரும் கொண்டிருந்த வெறுப்பு, தினகரனின் திடீர் நியமனத்தால் மேலும் அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதா இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டார். அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்ததால், அ.தி.மு.க அம்மா அணி என்று தினகரன் அணிக்கும், அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியாக ஓ.பன்னீர்செல்வம் அணியும் செயல்பட்டு வருகிறது.
இரு அணிகளுமே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரிய நிலையில், தேர்தல் ஆணையமோ அந்தச் சின்னத்தை முடக்கி வைத்தது. இரு அணிகளுக்கும் ஆர்.கே.நகர் தேர்தலின்போது சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தினகரன் அணி சார்பில் பெருமளவு பணம் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது,, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தலுக்காக சுமார் 89 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.
இதுபோன்ற நிலையில், தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை, அ.தி.மு.க அம்மா அணிக்குப் பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பேசியதாகவும், இதற்கு முன்பணமாக 10 கோடி ரூபாய் சுகேஷ் சந்திர சேகருக்கு ஹவாலா மூலம் வழங்கப்பட்டதாகவும் தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். டெல்லியில் விடுதியில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை காவல்துறையினர் கைது செய்த பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தினகரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது.

டெல்லி காவல்துறையின் முன்னியில் கடந்த 22-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் பல மணி நேரம் டி.டி.வி தினகரனிடம் டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 4 நாட்களாக மொத்தம் 37 மணி நேரம் விசாரணைக்குப் பின்னர், சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் தொலைபேசியில் பேசிய உரையாடலின் அடிப்படையில் அவரைக் கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிலேயே டி.டி.வி.தினகரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே தினகரன் கைதாகலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
தினகரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டிருந்தோம். ஆங்கிலத்திலும், தமிழிலும் கேட்கப்பட்டிருந்த அந்தக் கேள்விகளுக்கு தினகரன் ஆம், இல்லை என்பது போன்று பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதே கேள்விகளை சுகேஷிடமும் காவல்துறையினர் கொடுத்து பதில் வாங்கியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே தினகரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினகரன் லஞ்சபேரம் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் மூலமாகவே சுகேஷ் சந்திராவுக்கு பணம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
தியாகி தினகரனின் பின்புலம்.
திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - வனிதாமணி தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த தினகரன், கடந்த 3 மாதகாலமாக அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக வலம் வந்தார். இப்போது இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூத்த மகன்தான் டிடிவி தினகரன். ஊர் பெயரை தன்னுடன் சேர்த்து டிடிவி தினகரன் என்று அழைக்கச் சொன்னார். சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவை அதாவது தனது சொந்த மாமன் மகளையே திருமணம் செய்தார். தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரு இளைய சகோதரர்கள். இவர்களில் சுதாகரன்தான் 1990களில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டவர்.
போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். அதிமுக பொருளாளராக பதவி வகித்த தினகரன், 1999ம் ஆண்டு பெரியகுளம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும் ராஜ்யசபா உறுப்பினராகி மீண்டும் டெல்லி சென்றார்

1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.
தினகரனின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா குடும்பத்தோடு தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்த தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்தார். ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் சென்ற போது உடன் இருந்தவர் தினகரன்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை சென்ற நாளில் அதாவது பிப்ரவரி 15ஆம் தேதியன்று தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
துணைப் பொதுச்செயலாளராக கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஆட்சியில் அமரவேண்டும் என்ற கனவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார். ஆனால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதிமுக இணைப்பு முயற்சியில் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறினார்கள். அதே நேரத்தில் அதிமுகவை விட்டு வெளியேறி விட்டதாக தானாக அறிவித்தார் தினகரன். டுவிட்டரிலும் நன்றி சொன்னார்

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் டிடிவி தினகரன். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார். 
திருத்துறைப்பூண்டியில் பிறந்த டிடிவி தினகரன், தமிழகத்தையே தனது பணம்,அதிரடிகளால் அதிரவைத்து தற்போது ஓய்வெடுக்க  திகார் சிறையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
==========================================================================================
ன்று,
ஏப்ரல்-26.
  • அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்
  • தான்சானியா தேசிய தினம்
  • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை இறந்த தினம்(1897)
  • கணித மேதை சீனிவாச ராமானுஜன் இறந்த தினம்(1920)





===========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?