ஆபத்தில் உலகக் கணினிகள்.


நமது கணினிகளில் நமக்கு தெரியாமல் நுழைந்து, அவற்றின் செயல்பாடுகளை முடக்கும், 'மால்வேர்' எனப்படும்   கணினி வைரஸ்.  'அவஸ்ட்' என்ற, கம்ப்யூட்டர் வைரஸ்களை தடுத்து அழிக்கும், மென்பொருள் நிறுவனம், இதை கண்டறிந்தது. 

அந்த வைரஸ் தற்போது காட்டுத் தீ போல், உலகம் முழுவதும் உள்ள ஏராளமான நிறுவனங்களின்  கணினிகளுக்கு பரவி அவற்றை முடக்கி போடுவதாக எச்சரிக்கை பரவியுள்ளது.

வைரஸ் கண்டறியப் பட்ட சில மணி நேரங்களில், உலகம் முழுவதும், 75 ஆயிரம் கம்ப்யூட்டர்களில், இணைய தாக்குதல் நடந்துள்ளது.

கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்கக் கூடிய, மென்பொருள் வைரஸ் தாக்குதல்கள், ஸ்வீடன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ஊடகங்கள், முதலில் செய்தி வெளியிட்டன.

இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, உக்ரைன், சீனா, இத்தாலி, எகிப்து உள்ளிட்ட, 99 நாடுகளில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஸ்பெயினில், தொலை தொடர்பு நிறுவனம் உட்பட, பல நிறுவனங் கள், இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன.மிக மோசமான தாக்குதல், பிரிட்டனில், பெரிய மருத் துவமனைகளில் உள்ள, பிரதான, 'சர்வர்' கம்ப்யூட் டர்களை பதம் பார்த்துள்ளன. 


இதனால், அந்த மருத்துவமனைகளில் கம்ப்யூட்டர் களை இயக்க முடியாமல், நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உள் துறை அமைச்சகம், பிரான்சின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான, ரெனால்ட் ஆகியவையும், வைரஸ் தாக்குதலுக்கு தப்பவில்லை.

இந்த வைரஸ் தாக்கப்பட்ட கம்ப்யூட்டரில், 'உங்கள் கம்ப்யூட்டரை, வைரஸ் தாக்குதலில் இருந்து விடுவிக்க வேண்டுமானால், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'பிட்காயின்' கரன்சியாக செலுத்துங்கள்; சில காலத்துக்கு பின், நீங்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கப்படலாம்' என்ற, எச்சரிக்கை வாசகம் தோன்றுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், அந்த தொகையை செலுத்தினாலும் 
 கணினி முடக் கம் சரியாகி விடும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

இந்த மால்வேர் அமெரிக்காவின் என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்பு ஏஜன்சியால் மற்ற நாடுகள் கணினியை முடக்க கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் தான் இது.அமெரிக்கா தான் பாதுகாப்பா வைத்திடுப்பதாக கூறிய இந்த வைரஸ் எப்படி உலகம் முழுக்க பரவியது என்ற ரகசியம் சி.ஐ.ஏ.க்கு மட்டுமே தெரியும்.

அமெரிக்கா யாருக்கோ ஏவிய இந்த மால்வேர் வைரஸ் தொழில் நுட்ப தவறால்  இப்படி பல நாடுகளுக்கும் பரவி இருக்கலாம் என்று உலக நாடுகளால் சந்தேகிக்கப்படுகிறது.

உலகம் முழுக்க ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்காத இந்த மால்வேர் அமெரிக்க கணினிகளை மட்டும் விட்டு வைத்திருப்பது இந்த சந்தேகத்தை அதிகரிக்க வைக்கிறது.ஆனால் அமெரிக்கா தனது நாட்டில் ஒரு மருத்துவமனையை இந்த வைரஸ் தாக்கியதாகவும் அதில் இருந்து பிட்காயின்களை கொடுத்து மீண்டதாகவும் கதை சொல்லியிருக்கிறது.
அதாவது அவர்கள் கேட்கும் பிட்காயினை கொடுத்து மீண்டு கொள்ளுங்கள் என்பதுதான் அர்த்தம்.

இந்தியாவில் ஆந்திர மாநில காவல்  துறையைச் சேர்ந்த, 102 கம்ப்யூட்டர்கள், இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. 

விண்டோஸ் இயங்குமுறை கணினிகளையே இந்த மால்வேர் அதிகம் பதித்துள்ளதாம்.லினக்ஸ் இயங்குமுறை கணினிகள் ஓரளவு பதிப்பில் இருந்து தப்பியுள்ளன.

இந்தியாவிலும்,ரஷ்யாவிலும்,பழைய, 'விண் டோஸ் எக்ஸ்பி' இயங்குதளம் மூலம் ஏராளமான 
கணினிகள் செயல்படுகின்றன. இதனால் இந்த  கணினிகள்   இந்த வைரசால் எளிதில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலகம் முழுவதும்  கணினி வைரஸ் தாக்குதல்களால், முன்னணி நிறுவனங்கள் திண்டாடி வரும் நிலையில், 'ஜி - 7' எனப்படும், வளர்ந்த நாடுகளின் நிதியமைச்சர்கள், இணைய பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, இத்தாலியின் பாரி நகரில், ஜி - 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, இத்தாலியின் நிதியமைச்சர் பியர் கார்லோ படோன், ''முன்னணி நிறுவனங்களின் 
கணினிகளை செயலிழக்கச் செய்யும் வகையில் நடந்து வரும் இணைய தாக்குதல் சம்பவம் துரதி ருஷ்டவசமானது. 

இத்தகைய தாக்குதல்களை தடுப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது,'' என்றார்.
பிரிட்டனின், என்.எச்.எஸ்., எனப்படும், தேசிய சுகாதார சேவை அமைப்பு, லண்டன் முதல் ஸ்காட்லாந்து வரை, 45 இடங்களில் மருத்துவ மனைகளை நடத்தி வருகிறது. 

இவற்றின் கம்ப்யூட்டர்களை, வைரஸ் தாக்கியுள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர் பான விஷயங்கள், அறுவை சிகிச்சை அளிப்ப தற்கான கால அட்டவணைகள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. 
இதனால், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை யடுத்து, மருத்துவமனை கணினிகளை செயல்பட வைக்கும் முயற்சிகளில், பிரிட்டனின் முன்னணி  கணினி பாதுகாப்பு மைய நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த வைரஸை தனது மென்பொருளால் ஆரம்பித்து வைத்துள்ள அமெரிக்காவிடம் இதற்கு மாற்று மென்பொருள் இல்லாமலா இருக்கும்.அதைத்தவிர இந்த வைரஸை தாங்கி அழிக்கும் பாதுகாப்பு முறையாவது இருக்கும்.அதன் மூலம் இந்த வைரஸை மேலும் உலகம் சுற்றவிடாமல் பாதுகாக்கும் கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.

அதை உலக நாடுகள் அனைத்தும் இணைந்து அமெரிக்காவுக்கு உணர்த்த வேண்டும்.
அமெரிக்கா உருவாக்கிய அல்கோயதா முதல் எய்ட்ஸ்,எபோலா என்று பயங்கரமான   கிருமிகள் வரை மக்களுக்கு கேட்டை விளைவிக்கும்  தயாரிப்புகள்தான் என்று சுற்றும் செய்தியை இந்த மால்வேர் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்த வரை தான் சுகமாக வாழ மற்ற நாடுகள்,மக்கள் அமைதியாக வாழ்ந்து விடக்  கூடாது என்பதுதான் குறிக்கோள்,கொள்கை.

ஏற்கெனவே ஆதார் அட்டையில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜியோ அம்பானி போன்ற  தனியார் நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன என்ற  சர்ச்சைகள் இருக்கிறது. இந்த சைபர் திருடர்களால் ஆதார் தகவல்கள் திருடப்பட்டால் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட விபரங்களும் ஆபத்தை கொண்டு வந்துவிடும். 

============================================================================================
ன்று,
மே-14.
 அன்னையர் தினம்
  • பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்(1796)
  • பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)
  • குவைத் ஐநா.,வில் இணைந்தது(1963)
  • =============================================================================================
  • காலில் முள் குத்தினாலே, வலியில், எல்லா கடவுள்களையும் உதவிக்கு அழைப்போருக்கு மத்தியில், 20 வயதில், மோட்டோர் நியூரான் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வலது கையின் இரு விரல்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டுடன் மட்டுமே வாழ்ந்து வரும் அறிவியலார்  ஸ்டீபன் ஹாக்கிங்.

  • தற்போது இவருக்கு வயது 80.
  • இன்றுவரை கடவுள் இல்லை ,இருப்பதாக கூறுபவர்கள் அறிவியல் பூர்வமாக நிரூபியுங்கள் என்று சவால் விட்டுள்ளார் .

  • ஹாக்போசான் என்ற அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பிரபஞ்ச துகளுக்கு இதுதான் உலகை,பிரபஞ்சத்தை இயக்கம் துகள்.எனவே இதுதான்  கடவுள்.கடவுள்  துகள் என்று பெயரையும் கொடுத்துள்ளார்.
    தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, விஞ்ஞான சிந்தனைகளால், உலகை வியக்க வைக்கும் இவர், ஊனமுற்றவர் என்று, மூலையில் முடங்கி விடவில்லை. 
  • சீனா பெருஞ்சுவரை சுற்றிப் பார்ப்பது, நீர் மூழ்கி கப்பலில், கடலுக்கு கீழே பயணிப்பது என்று, எப்போதும், சுறுசுறுப்பாக இயங்குகிறார்.
    'வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனர்; அவர்கள் பூமிக்கு வருகின்றனர்...' என்று கூறும் இந்த நாத்திக விஞ்ஞானியின், ஆசை என்ன தெரியுமா... விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே!
================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?