விவசாயிகளுக்கு விடிவு காலம் ? ? ?

தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதி, இன்று காய்ந்து கருவாடாக காட்சி அளிக்கிறது. 
அங்குள்ள விவசாயிகள், வெளியடங்களுக்கு பிழைப்புக்காக செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. 
விவசாய சங்கத்தினரோ, சென்னைக்கும், டெல்லிக்கும் படையெடுத்துச் சென்று போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க வில்லை.

டெல்டா மாவட்டங்களில், 6- வது ஆண்டாக குறுவை சாகுபடியும் இந்த ஆண்டு நடக்க வில்லை. காரணம், மேட்டூர் அணையில் 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதுதான்.
 50 அடிக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே, குறுவைக்கு தண்ணீர் திறக்கலாம் என்பது பொதுப்பணித்துறையின் விதியாகும். 
ஆனால், இந்த ஆண்டு இந்த மாத இறுதிக்குள், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்ட வாய்ப்பே இல்லை. 
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பெய்ய தொடங்கி விட்டாலும், பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.
இப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர், கர்நாடகத்திலுள்ள அணைகளுக்கு வர ஆரம்பித்துள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இனி அந்த அணைகள் நிறைந்த பின்தான், கர்நாடக அரசு நமக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். 
இப்படியாக குறுவை பயிரை இந்த ஆண்டும் பயிரிட முடியாததால், பல லட்சம் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தமிழக அரசு ரூ.56 கோடி மட்டுமே நிவாரணம் அளித்துள்ளது. இது யானைப்பசிக்கு சோளப்பொரிதானே?
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விவசாயிகளின் நிலை போல்தான் இப்போது மத்திய பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளது. 
பாரதீய ஜனதாவின் ஆட்சி நடந்து வரும் இந்த  மத்திய பிரதேசத்தில், 2016–17–ம் ஆண்டில் மட்டும் 1982 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடிய போது, அவர்களுக்கு பரிசாக கிடைத்தது, துப்பாக்கி குண்டுகள்தான். குண்டு பாய்ந்து 6 விவசாயிகள் இறந்துள்ளனர். 
முதல் மந்திரி சிவராஜ் சவுகானுக்கு இந்த பிரச்சினை, தலைவலியை கொடுத்துள்ளதால், அவரே விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவர் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் மட்டும் இருந்து பயன் இல்லை. விவசாயிகளின் குறைகளை போக்க வேண்டியவரும் அவரே என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
ம.பி.க்கு அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில், விவசாயிகளின் ரூ.36 ஆயிரம் கோடி கடனை, அம்மாநில முதல்வர் ஆதித்திய நாத் தள்ளுபடி செய்திருக்கிறார். 
இதுபோல தங்களுக்கும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, மத்திய பிரதேச விவசாயிகள் போராடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள விவசாயிகள், ஏற்கனவே வறுமையில் வாடி வருகின்றனர். வெங்காயம் விலை வீழ்ச்சியால், மகாராஷ்டிரம், அரியானா போன்ற மாநில விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் இந்தியா முழுவதுமே விவசாயிகளின் கோரிக்கைகள், பல்வேறு முகங்களில் இருக்கின்றன. இதனை ஒட்டு மொத்தமாக நிறைவேற்ற வேண்டியது, மத்திய அரசின் கடமை. மத்திய அரசு தனது நிதியில் இருந்து பல லட்சம் கோடியை ஒதுக்கி, விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவார்களா?.
                                                                                                                                              -சத்தியம் 
=====================================================================================
குடித்த அறுபது நொடிக்குள்.
 
காலையில் உறங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னெவென்று பார்ப்போம்.
உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

தூங்கி எழுந்து 300 மி.லி அளவு தண்ணீரை குடித்தால், உடலில் வளர்சிதை மாற்றம் ஒன்றரை மணி நேரத்தில் 24% அதிகமாகும்.

தண்ணீர் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கி, உடலில் தேவையின்றி இருக்கும் கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்குகிறது.


தூங்கி எழுந்த 60 நொடிகளில் நீர் குடிப்பதால், பசி குறையும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கிறது.


தினமும் தண்ணீரை அதிகமாக குடித்து வருவதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இதனால் நம் உடலின் நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


சீரான அளவில் தினமும் நீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வந்தால், சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி ஏற்படுவதை தடுத்து, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.


காலை எழுந்ததும் 60 நொடிகளுக்குள் நீர் குடித்து வந்தால், மலம் கழிப்பதில் பிரச்சனைகள் வராது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

===========================================================================================
தமிழ் நாட்டில் அரசு என்று இருக்கிறதா.அல்லது குடியரசுத்தலைவர் ஆடசி நடைபெறுகிறதா?ஆடசி மொழி தமிழா.?இந்தியா ??
ஆளும் அதிமுகவினர்,அதிகாரிகள்  அனைவரும் இந்தியை வெங்கய்ய நாயுடு போல் தாய் மொழியாக மாற்றி விட்டார்களா.
=========================================================================================
ன்று,
ஜூன் -26.

உலக  போதை ஒழிப்பு தினம்
  • ருமேனியா கொடி நாள்
  • மடகாஸ்கர் விடுதலை தினம்
  • உலகின் மிக உயரமான கட்டிடம்  சி.என் கோபுரம் ( கனடா)பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது(1976)
==========================================================================================
  போதை ஒழிப்புத் தினம் படம் 
        இத்தாலியில் உள்ள கஞ்சாத்தோட்டம்.இவை மருத்துவத்துக்காக வளர்க்கப்படுகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?