பாஜக மறைத்த ஜிகா (த்) ? ?

2003-ஆம் ஆண்டில், தங்கள் நாட்டில் நிலவி வந்த சார்ஸ் வைரஸ் தொற்றை முழுமையாக மறைக்க முயன்றதாக சீனா மீது உலக நாடுகள் குற்றம்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம்.அதே வேலையை தற்போது குஜராத் பாஜக அரசு செய்துள்ளது.

2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் நெருக்கமான சுற்றுப்புறம் இருந்த பகுதியில் ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 30 நாடுகளில் நிகழ்ந்த ஏரளாமான பிறப்பு குறைப்பாடுகளுடன் ஜிகா வைரஸ் தொற்றுக்கு தொடர்புள்ளது.
மைக்ரோசிஃபாலி எனப்படும் அசாதாரணமான வகையில் இருக்கக்கூடிய சிறிய தலைகள் மற்றும் தடை செய்யப்பட்ட மூளை வளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு குறைப்பாடுகள் இதில் உள்ளடங்கும்.
பெரும்பாலும், இந்த வைரஸ் கொசுக்களினால் பரவினாலும், பாலியல் உறவு மூலமாகவும் இது பரவக்கூடும்.
இந்தியாவில் ஜிகா வைரஸ் தோற்று பாதிப்பு இருந்த நபர்கள் குறித்து ஐநா சுகாதார முகமை வெளியிட்ட அறிக்கையில், 22 மற்றும் 34 வயதான இரு பெண்கள் மற்றும் 64 வயதான ஒரு ஆண் ஆகிய மூவருக்கு இப்பதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக கூறப்பட்ட 34 வயது பெண், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியன்று மருத்துவ ரீதியாக குறைபாடு இல்லாத குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
இதில் தொடர்புடைய 22 வயது பெண்ணுக்கு, அவரது மகப்பேறின் 37-ஆவது வாரத்தில் ஜிகா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்த இந்த மூவரில் யாரும் நாட்டை விட்டு செய்யவில்லையென கூறப்படுகிறது.
''இவ்விரு கர்ப்பிணி பெண்களும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட 64 வயது மூத்த குடிமகனுக்கு எவ்விதமான மருத்துவ சிக்கல்களும் இல்லவே இல்லை''என வார இறுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் குஜராத்தின் மிக மூத்த அதிகாரியான ஜெ. என். சிங் தெரிவித்தார்.
ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லாததால், இந்த தொற்று பாதிப்பு தகவல்களை பொதுவெளியில் அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ஆனால், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புக்கள் கண்டறியப்பட்டவுடன் இதனை பொது மக்களிடம் தெரிவிக்காதது ஏன் என்ற அதிர்ச்சி மற்றும் திகைப்பு, தனியார் பொது சுகாதார அலுவலர்கள் மற்றும் நிபுணர்களிடம் பரவியுள்ளது.
''இந்திய பொது சுகாதார வரலாற்றில் முன்னேப்போதும் இல்லாத ஒரு நடைமுறை இது. பல நெறிமுறை சிக்கல்களை இது உருவாக்கும். மக்களின் நம்பிக்கையை பெற அரசு முயற்சி செய்ய வேண்டும். மக்களிடையே அச்சம் எதனையும் பரவாமல் இப்பணியை செய்ய வேண்டும். இதுவே ஒரு நல்ல பொது சுகாதார கொள்கையாகும்'' என்று பிபிசியிடம் பேசிய டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் துறை பேராசிரியரான ரஜிப் தாஸ்குப்தா தெரிவித்தார்.
கடந்த மார்ச் 17-ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல், இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனை கூடத்தில் உறுதிசெய்யப்பட்டதாக தெரிவித்ததாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு பொய்யுரைப்பதாக தெரிவித்த விமர்சகர்கள் , மூன்றாவது மற்றும் இறுதி ஜிகா வைரஸ் தொற்று ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டனர்.
ஆனால், இது குறித்து மறுத்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரி, ''ஜனவரி மாதத்தில் பரிசோதனைக்காக இருவர் சோதனை செய்யப்பட்டதாகவும், பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது நபர் சோதனை செய்யப்பட்டார். இது குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்த போது ஒருவருக்கு மட்டுமே ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா ஆகியவை குறித்து தொடர்ந்து பொது மக்களுக்கு தகவல் அளித்து வந்த அரசு, ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து பல மாதங்களாக அமைதியாக இருந்தது வியப்பை ஏற்படுத்தியதாக அரசின் நிலை குறித்த விமர்சகர்கள் தெரிவித்தனர்.
சுகாதார கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பில் அதிகரிப்பு எதுவுமில்லாத காரணத்தால் பொது மக்களுக்கு இதனை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென தனது நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்கிறது.
ஆனால், உள்ளூர் அதிகாரிகளிடம் இதனை தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள் சமூக அமைப்பிலும், ஊடகங்களிடம் இது குறித்து தெரிவித்திருப்பர் என்று பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதை ஏன் அரசு .தாமதித்தது ?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் முதலீடுகளை ஊக்குவிக்க ஜனவரி மாதத்தில் முக்கிய சர்வதேச வணிக மாநாடு நடக்க இருந்ததால், மாநில பாஜக அரசு தங்கள் மாநிலத்தில் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்ததை ரகசியமாக வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், இக்கூற்றை மாநில பாஜக அரசு மறுத்துள்ளது.
அரசின் இந்நிலைப்பாடு பொது சுகாதாரத்தையும், ஊடகங்களையும் அவமானப்படுத்துவதாக உள்ளது. ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உள்ளூர் சமூகத்துக்கு இது குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும்'' என்று தி இந்து நாளிதழின் சுகாதார மற்றும் அறிவியல் பிரிவு ஆசிரியரான வித்யா கிருஷ்னன் பிபிசியிடம் தெரிவித்தார்.
''இது போன்ற தகவல்களை வெளியிடாமலோ அல்லது தாமதப்படுத்துவதன் விளைவுகள் மிகவும் அச்சமளிக்கின்றன. தங்கள் நாட்டில் உள்ள நோய் பாதிப்புகள் மற்றும் நோய் பரவல்கள் குறித்து இந்தியா மறைக்க ஆரம்பித்தால், அதன் நம்பகத்தன்மை சர்வதேச அளவில் பாதிக்கப்படும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
=============================================================================================
ன்று,
ஜூன்-05.
  • உலக சுற்றுச்சூழல் தினம்
  • டென்மார்க் அரசியல் நிர்ணய தினம்
  • முதலாவது மடிக்கணினியான ஆப்பிள் 2 விற்பனைக்கு வந்தது(1977)
  • உலகின் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது(1959)
===============================================================================================

இந்திய பொருளாதார வீழ்ச்சி!
2 % GDP இழப்பு என்பது 56 லட்சம் கோடிகள். இது இந்திய பட்ஜெட் போல கிட்டத்தட்ட 3 மடங்கு. தமிழ்நாடு பட்ஜெட் போல கிட்டத் தட்ட 30 மடங்கு தொகை.
செல்லாக்காசு அறிவித்த உடனேயே மன்மோகன் சொன்னார், ப.சிதம்பரமும் சொன்னார். எவரையும் ஏன் ரிசர்வ் வங்கி கவர்னருக்குக்கூட தெறிவிக்காமல் ,அறிவித்து நாட்டை அதல பாதாளத்துக்கு எடுத்துச்சென்று விட்டார் நம்ம மோடி.
2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சி முடிவ டையும் தருணத்தில் இந்தியா நல்ல பொருளாதார நிலையை எட்டியிருந்தது, அந்நியச் செலவாணி கையிருப்பு. வங்கிகளில் பணக் கையிருப்பு, ஏற்றுமதி வளர்ச்சி என பலவகைகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி செழித்திருந்தது.
அடுத்து வரும் அரசு இதைச் சரியாக பயன்படுத்தினால் 2017 ஆம் ஆண்டு வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்துவிடலாம் என்று உலக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடியினால் இந்திய பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைக்க இயலவில்லை அல்லது விருப்பமில்லை என்பது போல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து ஏற்றுமதியில் தேக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல வளர்ச் சிக்குத் தேவையான பணிகள் அனைத்தும் தோய்வுற்றன.
2016 ஆம் ஆண்டு விலைவாசி உயர்வு, உற்பத்தித் தேக்கம் மற்றும் வேலையின்மை பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கும் போது இதிலிருந்து மக்களை திசைதிருப்ப பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கையிலெடுத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதில் ‘வெற்றி’ கண்டார். ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. தற்போது இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை அடைந் திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒப்பிடுகையில், அப்போது 7.1 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போதைய மூன்று மாதங்களில் 6.1 விழுக்காடாக குறைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினால், எந்த பொருளாதார முன்னேற்றமும் ஏற்படாதது மட்டுமல்ல; வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளது என இப்பொழுது வெளி வந்துள்ள மத்திய அரசின் அறிவிப்பு தெளிவுபடுத்தி உள்ளது.

‘தி டெக்கான் கிரானிக்கல்’ (21.5.2017) ஏடு வெளியிட்டுள்ள தகவல் மோடி அரசின் பொருளாதார பின்னடைவைத் தக்க முறையில் தோலுரித்துக் காட்டியுள்ளது.

எளிதாக வியாபாரம் செய்ய இயன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 130 ஆம் இடத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வியாபாரத்தைத் தொடங்க இயன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 155 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கட்டுமான உரிமங்களை பெறுவதில் 185 ஆம் இடத்தில், ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்துவதில் 166 ஆம் இடத்திலும் இருக்கிறது இந்தியா என்பது மெச்சத்தகுந்ததுதானா?

இரண்டு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப் போம் என்று 56 அங்குல மார்புப் புடைக்கப் பிளந்து தள்ளினாரே நரேந்திர மோடி - நடந்தது என்ன? 2.13 லட்சம் பேர்களுக்கே வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பரிவர்த் தனை நடக்கும் கால்நடைச் சந்தையில் கைவைத்ததால், 2 கோடி பேர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் அவலம்!

ஒட்டுமொத்த முதலீட்டு உருவாக்கத்தில் 75 சதவிகிதம் அளவுள்ள தனியார் துறை முதலீட்டு உருவாக்கம் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2 விழுக்காடு அளவுதான் (2017 இல்) வளர்ச்சி நிலை அடைந்துள்ளது.

மூன்றாண்டு ஆட்சி முடிவுற்ற நிலையில், மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார பின்னடைவை மறைத் திட, மாட்டிறைச்சி சம்மந்தமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு, நாடு முழுவதும், மாடு தொடர்பாக ஓர் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில், சாகரான்பூரில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடைபெற்ற தாக்குதலைப் பற்றி கவலைப் படாமல், அம்மாநில முதல்வர் யோகி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திற்குச் சென்று ராமனை வழிபடுகிறார். 
அதைப்பற்றி பேசுகிறார்.

ராஜஸ்தான் நீதிமன்றம், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது; பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை என அறிவிக்கச் சொல் கிறது. 
இதை தனது ஆத்மா சொல்வதாக நீதிபதி சொல்கிறார்.

இந்துத்துவா தாக்கம் நீதிபதிகளையும் தொற்றிக் கொண்டு விட்டது.

ஆக, வளர்ச்சி என்ற முழக்கம், ஆட்சிக்கு வருவதற்கு மட்டும்தான்; வந்த பின்னோ எந்த வளர்ச்சியும் இல்லை என்பது மட்டுமல்ல; 
இருக்கிற வேலைவாய்ப்பும் பறி போகிற நிலைமையில்தான் மோடியின் ஆட்சி நடைபெறுகிறது.

அடுத்த இரண்டாண்டில் மக்களின் எதிர்ப்புப் புயல் இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பத்தான் போகிறது!
முகநூலில் ஆறுமுகம்  Bhel


பிரம்மசாரி னு சொல்லி குடும்பத்தல குழப்பத்தை உண்டாக்கிட்டாரே இந்த ஆர்..எஸ்.எஸ். மன்னிக்கணும் ராஜஸ்தான் ஜட்ஜ்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?