மூன்றாண்டு ஆட்சியின் சாதனை


ஆசிய கண்டத்தில் ஊழல் மிகவும் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 

டிரான்பரன்சி இன்டர்நேசனல் எனும் சர்வதேச அமைப்பு, ஆசிய கண்டத்தில் அதிக ஊழல் மலிந்துள்ள நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை மக்கள் மற்றும் ஊழல் - ஆசிய பசிபிக் - குளோபல் ஊழல் பாரோமீட்டர் என்ற தலைப்பில் அறிக்கைவெளியிட்டுள்ளது.



2015ம் ஆண்டு ஜூலை முதல் 2017ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் இந்த காலக்கட்டம்  பாஜக கட்சியின் மோடி தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்த ,இருக்கிற காலம்.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பெற லஞ்சம் என்ற கணிப்பில் அடிப்படையில் ஆசிய கண்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்  ஊழல் பட்டியலில் இந்தியா 69 சதவீதம் வாக்குகளை அறுதிப்பெரும்பான்மையில்  முதலிடம் பெற்று மோடி அரசின் மூன்றாண்டு ஆட்சியின் சாதனைகள் மகுடத்தில் மாணிக்க கல்லாக ஒளி வீசுகிறது.


ஜப்பான் ஆட்சியாளர்களின் திறமையின்மையால் ஜப்பான் 0.2 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று  கடைசி இடத்திலும் உள்ளது.

இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாஜக கட்சியினர் முழங்கி வருகின்றனர்.

மோடியின் ஆட்சியில் ஊழலே இல்லை,ஊழல் செய்யவே தங்களுக்கு தெரியாது என்றும் மக்களிடம் வாணவேடிக்கை காட்டி வருகின்றனர்.
ஆனால் பாஜக வின் மோடி தலைமையிலான அரசில் இந்தியா ஆசிய  ஊழல் பட்டியலில் 7 வது இடத்தில் இருந்து முதலாவது இடத்துக்கு வந்துள்ளது.
நிச்சயம் மூன்றாண்டு சாதனைப்பட்டியலில் பெரிய அளவில் விளம்பரம் செய்யலாம்.ஆனால் மோடியின் தன்னடக்கம் காரணமாக விளம்பரங்களில் அது இடம் பெறவில்லை.
                        இன்று பள்ளிக்கு புதிதாக செல்லும் செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிராஜேஷ் லக்கானி  தாக்கல்செய்த அறிக்கையில், 'தற்போது வரை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை' என்று கூறியுள்ளார்.என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வானமே எல்லை அதிகாரம்,மத்திய பாதுகாப்புப்படை,மத்திய அரசு அலுவலர்கள் என்று எத்தனையோ கையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையம் இப்படி கூறுவது வேடிக்கை.

காஷ்மீரிலேயே தேர்தல் நடத்திய ,நக்சல் இயக்கத்தினர் பகுதியிலேயே தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே .நகரை கண்டு அலறுவது அசிங்கம்.

உண்மையிலேயே பாஜக வெல்லும் சூழல் வந்த பின்னர் தேர்தல் நடக்கும் என்று பகிரங்கமாக சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே .

"தினகரன் பணம் கொடுக்கையில் கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு அவர் பணப்பட்டுவாடாவை மட்டும்  குறித்துக் கொண்டு அதன் மூலம் தேர்தலையே ஆணையம் நிறுத்தியது ஒரு திட்டமிட்ட செயல் என்பது மக்கள் அறிந்ததுதான் .

தினகரன் மட்டுமல்ல மற்ற வேட்பாளர்கள் யாரானாலும் பணம் கொடுப்பதை தடுக்கும் சக்தி இல்லாததா தேர்தல் ஆணையம்?தேர்தல் ஆணையம் நினைத்தால் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தையே அழைத்து தேர்தலை நடத்த்த முடியுமே.

ஆக மோடியா,அமித் ஷா வழிகாட்டலில் மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் பேரிலேயே ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது.

திமுக உட் பட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய அதிகாரிகள்,காவல்துறையினர்களை தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே அல்லவா மாற்றியிருக்க வேண்டும்.அப்படி செய்திருந்தால் ஓரளவாவது தேர்தல் முறையாக நடந்திருக்கும்.

ஆனால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு மூன்று நாள் முன்பும்,தேர்தல் பிரசாரம் முடிவு நாளிலும் இந்த மாற்றங்களை செய்வது உள்நோக்கம் இல்லாமல்தான் என்பதை நம்ப முடியவில்லை.

மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு இருக்கையிலும் ,மத்திய அரசு பார்வையாளர்கள் கண்காணிப்பு மத்தியிலும் தினகரன் தடையின்றி 4000 வழங்கினார் .வேடிக்கை மட்டுமே பார்க்கப்பட்டது .போன்றவை தேர்தல் ஆணையம் தேர்தல் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டது என்பதை சாதாரண பொதுமக்களுக்கு கூட இரு நாட்களுக்கு முன்பே அறிய வைத்தது தேர்தல் ஆணையத்தின் பலகீனம்.
=============================================================================================
ன்று,
ஜூன் -07.
  • பெரு கொடி நாள்
  •  ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பம் (1893)
  • நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)
  • சோனி நிறுவனத்தின் பீட்டாமேக்ஸ் வீடியோ கேசட் ரெக்கார்டர் விற்பனைக்கு விடப்பட்டது(1975)
==============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?