கோமாதாவுக்கே வெளிச்சம்.

10000 கோடிகளுக்கு குறைவான மத்திய மாநில அரசு விவாசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் 50 நாட்களாக தமிழக விவசாயிகள் அம்மண போராட்டம் வரை நடத்தி களைத்து போய் வந்து விட்டார்கள்.
வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்றும் கூட நடிகைகளை சந்தித்து இன்பமாக கலந்துரையாடும் இந்திய பிரதமர் மோடிக்கு டெல்லியில் இருந்து கொண்டே போராடும் தமிழ விவசாயிகள் கோரிக்கை மனுவை வாங்கவோ ,அது தொடர்பாக மனு கொடுக்க சென்ற தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்திக்கவோ கூட நேரம் ஒதுக்க முடியவில்லை.
நேரில் சந்திக்காவிட்டாலும் கூட விவசாயிகள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்ற சமாதானம் கூற க்கூட மனமில்லை.
ஆனால் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உழைப்பில் இருந்து கொடுத்த தமிழக வரிவருவாயில் இருந்து உ.பி. விவசாயிகளுக்கு ரூ.36 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வெளியே தெரியால் ரகசியமாக , மறைவாக மோடியின் பாஜக மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது. 

இது உண்மைதானா என்று அதிர்ச்சி  அடைய வேண்டாம். 
நூறு சதவீதம் உண்மை. 
தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், அதன் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் சுட்டெரிக்கும் வெயிலில் டெல்லியில் ஒன்றரை மாதங்களாக போராடியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 

இந்திய தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண நிலை அடைந்த போது கூட அவர்களை சந்திக்க பிரதமர் என்ற பொறுப்பில் இருகிக்கின்ற மோடி அசைந்து கொடுக்கவில்லை.

 அதே சமயம் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியதற்கு பரிசாக உ.பி. விவசாயிகள் 1.5 கோடி பேருக்கு ரூ.36 ஆயிரம் கோடி கடனை மோடியின்  மத்திய அரசு உதவியுடன் தள்ளுபடி செய்து இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.சாமியார் முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக அரசு. 

ஆக பாஜக பாத்திரம் மட்டுமே அறிந்து இரக்கிற அரசு மோடி பாஜக அரசு.
இவர்களுக்கு தமிழர்களின் வாக்குகளும்,ஆட்சியும் மட்டும் வேண்டுமாம்.

100 ஆண்டுகளாக காணாத வறட்சியால் முற்றிலும் தவித்துப்போய் நிற்கிறது தமிழகம். 
ஆனால் உபி விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய தமிழகத்தின் வரி வருவாய் கைகொடுத்துள்ளது என்றால் நம்ப  முடிகிறதா? 

வேதனையான உண்மை இது. 

உ.பி.க்கு சலுகை: உ.பி. அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.50 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளது. இந்த சமயத்தில் கூடுதலாக ரூ.36 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என்றால் எப்படி சமாளிக்க முடியும். இதனால் மத்திய அரசுதான் உதவியுள்ளது.

   எப்படி சாத்தியம் இது. ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு விதமான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு வரிவருவாய் வருகிறது. நான்கு மாநிலங்கள்தான் அதிக வரி வருவாயை ஈட்டி தருகிறது.  மத்திய அரசின் மொத்த வருவாயில் 25 சதவீதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வருகிறது. 

2வது இடம் தமிழகத்துக்கு: 
அதற்கு அடுத்தபடியாக குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிக வரி வருவாய் செலுத்தும் மாநிலங்கள். 
 மொத்த வரிவருவாயில் மத்திய அரசு 58 சதவீதம் தன்னிடம் வைத்துக்கொள்ளும். மீதம் 42 சதவீதத்தைத்தான் மாநில அரசுகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கும். 

 இப்படிதான் உ.பி. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உதவி இருக்கிறது. அதாவது தமிழக வரிவருவாயில் மூன்றில் ஒருபங்கு கூட தன் வரிவருவாயை மத்திய அரசுக்கு தராத  உ.பி.க்குதான் அது அளித்த பங்கை விட பல மடங்கு அதிகம் மத்திய அரசு சலுகையாக தந்துள்ளது. 


ஒவ்வொரு தமிழனுக்கும் மத்திய அரசு கொடுக்கும் நிதி அளவை விட உ.பி.யை சேர்ந்த ஒரு நபருக்கு கொடுக்கும் நிதி அளவு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. ஏழை மாநிலம் என்று கூறி அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக அளவு நிதியை வழங்கி வருகிறது. 


 ஆனால் மொத்த வரி வருவாயில் 75 சதவீதத்தை மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழங்கி வந்தாலும் இந்த மாநிலங்கள் அளித்த வரிவருவாயை விட மிக  குறைவாகவே திரும்ப உதவியாக மத்திய அரசு தருகிறது. 

இப்போது புரிந்திருக்கும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் மத்திய அரசின் கதை. 

ஒட்டுமொத்த பயிர்களையும் வறட்சியில் இழந்து நிற்கும் தமிழக விவசாயிகளின் கூக்குரலுக்கு எந்த பதிலும் இல்லை. ஆனால் இங்கு கிடைக்கும் வரி வருவாய் உ.பி. விவசாயிகளின் துயர்துடைக்க பயன்படுகிறது. மாநிலங்களின் பொருளாதார சமன்பாடு என்ற பெயரில் தமிழக விவசாயிகளின் நலனை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. 
இதை எடுத்துச்சொல்ல, மத்திய அரசிடம் இடித்துக்கேட்க சரியான, உறுதியான அரசு தமிழகத்தில் இல்லை. தமிழ் நாட்டு அதிமுக  தலைவர்கள்,அமைசர்கள் ஊழல் பட்டியலை வைத்து அவர்களை மோடியின் பாஜக அரசு மிரட்டி தனது ஆணைக்கேற்ப ஆடவைக்கிறது.
தட்டிக்கேட்க வேண்டிய அதிமுக அரசின் தலைமைப்பீடத்தில் இருப்பவர்கள் மத்திய அரசிடம் வாதாடி  தமிழக விவசாயிகளின் கடன் தள்ளுபடி  பிரச்னையை யஜீர்த்திருக்க முடியும்.ஆனால் அவர்களுக்கு தங்களின் பதவியையும்,சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும் பாதுகாக்க மோடியுடன் பேசவே நேரம் பத்தவில்லை.இதில் விவசாயியாவது,மக்களாவது.  

1. மகாராஷ்டிரா வழங்கும் வரிவருவாய் எவ்வளவோ, அதில்  பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களும் சேர்த்து வழங்குகின்றன. 

2. மகாராஷ்டிராவை சேர்ந்தவருக்கு ஆண்டுக்கு ரூ.4800 மட்டும் வழங்கும் மத்திய அரசு, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குகிறது.

3. மகாராஷ்டிரா கொடுக்கும் வரி வருவாய் ரூ.100ல் அந்த மாநிலம் திரும்ப பெறுவது ரூ.15. ஆனால் பீகார் மாநிலம்  அளிக்கும் 100 க்கு  ரூ.419 ஆக திரும்ப பெறுகிறது. 

4. அதிகபட்சமாக பீகார், உபி, ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ரூ.100 கொடுத்தால் மத்திய அரசிடம் இருந்து ரூ.200 திரும்ப பெறுகின்றன.


ஆகஅள்ளி  வரி கொடுக்கும் தமிழ் நாடு,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கிள்ளித்தான் தருகிறது.

வறட்சியை முன்னிட்டும், அதிமுக தேர்தல் அறிக்கையின்படியும் தமிழகத்தில் உள்ள சிறுகுறு விவசாயிகள் மாநில கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.5280 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் 12.02 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதே சமயம் பெரிய விவசாயிகள் பெற்ற ரூ.1980 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.  பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வராக்கடன் ரூ.6 ஆயிரம் கோடி உள்பட மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்யும்படி மத்திய அரசிடம் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை பரிசீலனை கூட செய்யாமல் மத்திய அரசு உள்ளது.
தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயத்துறையை நம்பி உள்ளனர். வரிவருவாயில் சேவைத் துறை 45 சதவீதம், தொழில் துறை 34 சதவீதம், விவசாயம் 21 சதவீதம் பங்களிக்கின்றன. 

ஆனால் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. வறட்சி நிவாரணமாக தமிழகம் கேட்ட ரூ.39 ஆயிரத்து 565 கோடி, வார்தா புயல் பாதிப்புக்கான ரூ.22 ஆயிரத்து 573 கோடி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.5 ஆயிரத்து 145 கோடி என மொத்தம் ரூ.67 ஆயிரத்து 283 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. 
இது தவிர, 14வது நிதிக்குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு ஏற்படும் இழப்புக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கவில்லை. மத்திய விற்பனை வரி இழப்பு உள்பட மாநில அரசுக்கான அனைத்து நிலுவைகளையும் வழங்க தாமதம் செய்து வருகிறது மத்திய அரசு.

காங்கிரஸ் கூட்டணி அரசு நாடு முழுவதும் 2008ம் ஆண்டு வேளாண் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

இதன் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 3.69 கோடி சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளும், 60 லட்சம் இதர விவசாயிகளும், 52 ஆயிரத்து 516 கோடி ரூபாய் நிவாரண உதவி பெற்றுள்ளனர்.இவ்வுதவியை இப்போது பாஜக தனது மாநிலங்களுக்கு மட்டும் தருவது போல் அல்லாமல் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகள் கடன் முழுக்க தள்ளுபடி செய்தது.ஆக இதில் பாஜக அரசு அரசியலும்,ஓரவஞ்சனையும் அதிகம்.
இப்படி குறிப்பிட்ட தமிழ் நாட்டை எபபோதும் தொடர்ந்து மாற்றாய்ந்தாய் மனப்பான்மையுடன் ,திராவிட பாரம்பரியம் என்ற தரக்குறைவு எண்ணத்துடன் ஒரவஞ்ச்சனையுடன் துரோகம் செய்து விட்டு இங்கு ஆட்சியிலும் அமரவேண்டும் என்று பாஜக எண்ணுவது எப்படி சாத்தியம்?அது அந்த கோமாதாவுக்கே வெளிச்சம். 
                                                                                                                   -"தினகரன்" செய்தி உதவியுடன்,

==============================================================================================
ன்று,
ஜூன்-08.
  • உலக கடல் நாள்
  • படிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)
  • உலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)
  • அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)
=============================================================================================
                                        கலைஞரை ஈழத்துரோகி என்பானின் உண்மை நிலை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?