தேசத்துரோகி ஆகாதீர்கள்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலை வாசி குறையாது என சில தேசத்துரோகிகள் பேசிக்கொண்டும்,எழுதிக்கொண்டும் இருக்கின்றனர்.
அவர்களின் வாயை அடைக்கிறது இந்த மாபெரும் விலை குறைவு செய்தி.
ஜி.எஸ்.டி. அமலானதை அடுத்து இந்திய ஏழைகள் உபயோகிக்கும் ஆடம்பரக் கார்களின் விலை இரண்டே கால் கோடி ரூபாய் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.
முந்தைய வரிவிதிப்புடன் ஒப்பிடுகையில், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையில், ஆடம்பர ரக கார்களின் விலை சுமார் 20 சதவீதம் குறைகிறது. 
மும்பை எக்ஸ் ஸோ ரூம் நிலவரப்படி, 5 கோடியே 64 லட்சம் ரூபாய் விலை கொண்ட லம்போர்கினி, ஜி.எஸ்.டி.-க்கு முன், 7 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 
அதில் வரிக்கு மட்டும், 1 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருந்தது. 
ஆனால்  ஏழைகள்,பாமரர்கள் இந்த வரியை செலுத்தப் படும் துன்பத்தைக்கண்டு  சிந்திய மோடி,அருணஜெட்லீ உடனடி நடவடிக்கையாக ஆடம்பரப்பொருள் கடலை மிட்டாய்க்கு 18%,ஆடம்பர உணவுப்பொருள் இட்லிக்கு 5%  வரியை  உயர்த்தி ஏழைகளின் அன்றாடத்தேவையான கார்களுக்கு வரி விகிதத்தை குறைத்தனர்.
இதனால் ஜி.எஸ்.டி. நடைமுறைக்குப் பின், வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டும் வரியாக செலுத்தினால் போதும்.
இதேபோல் ஜாக்வார், மெர்சிடஸ் பென்ஸ் ஆகியவற்றில் சில ரக கார்களும் விலை குறைகிறது. 
இதே அளவு புக்காட்டி வெரான் (Buggati veyron) காருக்கு 20 சதவீத வரி குறைந்தால், சுமார் 12 கோடி ரூபாய் விலையில், 2 கோடியே 74 லட்சம் ரூபாய் வரை குறைகிறது.
நாமக்கட்டி,உத்திராட்ச கோட்டை,பன்னிர்,காவித்துணி போன்ற பூசை சாமான்களுக்கு வரியே கிடையாது.ஆனால் மெழுகுவர்த்திக்கு வரி அதிகம்.
அது கிருத்தவர்கள் ஆலயங்களில் உபயோகிக்கப்படும் என்று எடுத்து சொன்னால் வரி குறைக்கபடலாம்.அல்லது ஆடம்பரப்பொருள் என்று இன்னும் அதிகரிக்கப்படலாம்.
இதை எல்லாம் படித்த பின்னுமா நீங்கள் மோடி அரசை திட்டுகிறீர்கள்..நீங்கள் நிச்சயம் தேசவிரோதிதான்.

===========================================================================================
ன்று,
ஜூலை-09.
  • ஆஸ்திரேலிய அரசியலமைப்பு தினம்
  • அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)
  • ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)
  • அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)
============================================================================================
ஜி.எஸ்.டி-யில் ஜவுளித்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குஜராத்தின் சூரத் நகரில் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுவரும் சிறு வியாபாரிகளைக் கலக்கமடையச் செய்துள்ளது. 

சூரத், ஜவுளிகளின் தலைநகராக விளங்குகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சேலைகளில் பெரும்பாலானவை சூரத்தில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். 


அந்தளவு புகழ்பெற்ற சூரத்தில் ஏராளமான சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

 ஜி.எஸ்.டி-யால் ஜவுளி நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் சூரத்தில் நேற்று (சனிக்கிழமை)  ஜவுளி தொழிலாளர்கள் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தியுள்ளனர். 
மேலும் சூரத் மாவட்ட ஆட்சியரிடம் ஜவுளி மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளமை மோடிக்கும்,பாஜகவிற்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி.கார்களுக்கு வரி குறைப்பு,ஆடம்பரப்பொருள் டிராக்டருக்கு வரி அதிகரிப்பு. இது மோடியின் சாதனை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று இயக்குனர் கே.பாலசந்தரின் பிறந்தநாள்.
 அவரின் வுருவச் சிலையை, திருவாரூர் மாவட்டத்தில் அவர் பிறந்த ஊரான நல்லமாங்குடியில்கமல்ஹாசன் திறந்துவைக்கிறார்.பாலசந்தருக்காக வெண்கல சிலையை உருவாக்கி திறப்பு விழா நடத்துபவர் கவிஞர் வைரமுத்து.
கே.பியின் திரையுலகப் பயணத்தை நினைவுகூர்கிறது.அகர முதல எழுத்தெல்லாம்….ஆதி பகவன் முதற்றே உலகு….

எம்ஜிஆர்-சிவாஜி போன்றவர்கள் காலத்தில் அவர்களின் பாணியை விட்டு விலகி, பாலசந்தரின் திரைப்படங்கள் யதார்த்தமான நடுத்தர மக்களின் பிரச்சினைகளைப் பேசின..
கருப்பு வெள்ளை காலத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களை வலுவாகப் படைத்த பாலசந்தரின் படைப்புத்திறன் அஃறிணைகள் மூலம் மனிதனால் பேச முடியாத விஷயங்களை பேசவும் பாடவும் முற்பட்டது
கமல்ஹாசனை  தமிழ்த்திரையுலகிற்கு நடிகராக  புடம் போட்ட பொன்னாக வார்த்து தந்தவர் பாலசந்தர்.
ரஜினிகாந்த்,பிரகாஷ்ராஜ் ,ரகுமான்,சரிதா,கீதா என பலரைதிரையுலகிற்கு  அறிமுகப்படுத்தியர் .
வேலைக்குப் போகும் பெண்கள், இருதாரப் பிரச்சினைகள், முறைதவறும் உறவுகள், சமூக புறக்கணிப்புகள், போராட்டங்கள், அரசியல், உள்பட அனைத்தையும் அலசியவை பாலசந்தரின் திரைக்கதைகள்…
தமிழ்த்திரையுலகிற்கு தனி நிறம் தந்தவர் பாலசந்தர் என்ற வைரமுத்துவின் வரிகள் உண்மையானவை.அந்த நிறம் நடுத்தர மக்களின் நிறைவேறாத ஆசைகளின் வெளிறிய நிறம் தான்.சில சமயம் அது கருப்பு வெள்ளயிலும் சில சமயம் அது வண்ணத்திலும் பிரதிபலித்தது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?