இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

இணைப்பு -அதிர்ச்சி - வேடிக்கை

அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணியும் பன்னீர் அணியும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில்   இணையவுள்ளன. 

அப்போது இனி ஒற்று மையாக இருப்பதாக  உறுதிமொழியும் எடுக்கப்படுகிறது. 

அதிமுக கட்சியை இனி  வழிநடத்த மோடி கூறியபடி நியமிக்கப்பட உள்ள, வழி காட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோரும் பன்னீர்அணியில்  அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமியும், சண்முகநாதனும் இடம்பெறுகின்ற னர்.

முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலாகாக்கள் வழங்கப்பட உள்ளன. 
அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு, முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது. 

பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக்கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவு அமைச்சர்களின் இலாக்காக் களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 

முதலில் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவிஜயபாஸ்கர், சரோஜா,  ராதாகிருஷ்ணன், வளர்மதி ஆகியோர் இலாகாக் களை பிடுங்க  முடிவாகி உள்ளது.

இரு அணிகளிலும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் ,அதிருப்தி அடையும், எம்.எல்.ஏ.,க் களை சமாளிக்க அணிக்கு  10 பேருக்கு, வாரிய தலைவர் பதவிகள்  வழங்கப்டும் . 

இரு அணிகளும் இணையாவிட்டால் ஆட்சி கலைக்கப்படும்,இரட்டை இலை சின்னமும் பறி போகும் ,மீண்டும் தேர்தல் நடந்தால்  அதிமுக கதி அதோகதிதான்.மக்களிடம் இருக்கும் கோபத்தில் இரட்டை இலை இருந்தால் கூட அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியாது.

இருக்கும் வரை ஆட்சி,அதிகாரத்தை அனுபவித்து நாலு காசு அனைவரும் பார்க்கலாம்.மோடி அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது  வேறு வழி கிடையாது என்று கூறியே அனைவரும் ஒத்துக்கொள்ளவைக்கப்பட்டுள்ளனர்.

 நீண்ட இழு பறிக்குப்பின் தனது குழப்படிகளுக்குமிடையே இரு அணிகளின்   இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன்,சசிகலா மற்றும் அவர்கள்  ஆதரவாளர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள்  பழனிசாமி அணிக்கு தாவி விட்டனர்.

இதனால்  தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.
சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். 

இதனால் புளகாங்கிதமடைந்தார் தினகரன்.
"தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம்" என, தினகரன் திட்டமிட்டு ஆட்சியை கலைக்கவும் தயார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேரமும் பேசினார்.

ஆனால் அதன்பின் நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. 


அதில், 12 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.அதில் கொஞ்சம் அதிர்ச்சி.

ஆனால் அடுத்த நாள்  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,எம்.எல்.ஏ.,க் களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது . 

வேலுாரில், அரசுநடத்தும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, நேற்று நடந் தது. 

இதில், தினகரன் அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க் கள் ஆம்பூர் பாலசுப்பிரமணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகிய இருவர்  மட்டுமே பங்கேற்றனர். 

இதனால், தினகரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் தினகரன்.
 ஸ்டாலினிடம்  தினகரன் ஆட்சி கவிழ்ப்பு பேரம் பேசுகையில் டெல்லியே இணைப்பில் ஆர்வம் காட்டுவதை அறிந்ததால் ஸ்டாலின் தினகரனின் பேச்சை அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை.

அமித் ஷா தலையிட்டால் அனைத்து வழி முறைகளையும் உபயோகித்து இணைத்து விடுவார் என்பதையும் பல வழக்குகளை தன்  மீது வைத்திருக்கும் தினகரனால் ஓரளவுக்கு மேல் செயல்பட முடியாது.
டெல்லி அவரை அமுக்கி விடும் என்பதையும்  திமுக தலைமை நன்கு உணர்ந்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு என்று தினகரனை நம்பி இறங்க கூடாது என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது.
ஆளுநர்,பிரதமர்,குடியரசுத்தலைவர் என அனைவரும் அதிமுக காப்பாற்றும் அணியில் இருப்பதால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்யவும் இயலாத நிலைதான் திமுகவுக்கு.
======================================================================================

ன்று,
ஆகஸ்ட்-21.

 • ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை பழங்குடியினரிடமிருந்து கைப்பற்றி, 
 •                                      அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)
 • ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
 • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
 • ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
======================================================================================அம்மாதான் ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கினார்கள் - வெற்றிவேல் அப்ப எம்ஜிஆர் எவனயும் அதிமுகவுல சேத்தவே இல்லையா?

சனி, 19 ஆகஸ்ட், 2017

நரியின் நாட்டாண்மை..

ஒரு திராவிட  கொள்கை கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சி பிளவை கோந்து போட்டு ஓட்டுவது அதற்கு நேர்மாறான கொள்கைகளைக்கொண்ட கட்சி தலைமை என்பது அரசியல் விசித்திரம்.ஆடுகளின் மோதலில் நரியின் நாட்டாண்மை கதை தெரியும்தானே.
அதிமுகவில் வேடிக்கை விநோதங்களுக்கு என்றுமே குறைவில்லை.அது அண்ணாயிசம் .


ஆனால் கட்சியை துவக்கிய போது எம்.ஜி.ஆர். கூறிய அண்ணாயிசம் எடப்பாட்டிக்கே தெரியமா என்பது கேள்விக்குரியது.

அப்படி கட்சி கொள்கையே தெரியாதவர்களுக்கு பெயரில் மட்டும்  அண்ணா,திராவிடம் கொண்டவர்களுக்கு காவித்துவம் கட்டப்பஞ்சாயத்து ஒன்றும் பிரச்சனை இல்லைதான்.

இந்தியா முழுக்க உள்ள தேசிய,மாநிலக் கட்சிகளை கூறு போட்டு ஆட்சியை பிடிக்கும் பாஜக அதிமுக அணிகளை ஒன்றாக சேர்ப்பதில் ஏன் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறது ?


காரணம் வெறும் தேர்தலும்,தேர்தல் ஆணையமும் ,இரட்டை இலையும்தான்.இரட்டை இலை சின்னம்தான் ஜெயலலிதாவையே காப்பாற்றியது.ஆட்சியை அவர் வசம் தக்க வைத்தது.
இந்த உண்மை பாஜக உணர்ந்துள்ளது.

நடிகையாக மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருந்த ஜெயலலிதாவையே காப்பாற்றி, வாக்குகளை ஈர்த்த இரட்டை இலை இல்லாவிட்டால்  மக்கள் மத்தில் செல்வாக்கே இல்லா ஓ.பி.எஸ் சும்,இ.பி.எஸ் சும்  பழைய 1000 தாள்கள் தான்.இதை இன்றைய பவர் இழந்த அதிமுக ஆட்சியின் யு.பி.எஸ் மோடி நன்றாகவே உணர்ந்துள்ளார்.

இணையா அணிகள் இருக்கும்வரை இரட்டை இலை சின்னம் இல்லை.

இணைந்தால் இரட்டை இலை அதிமுகவுக்குத்தான். இதில் சசிகலா,தினகரன் என்னதான் குட்டிக்காரன் போட்டாலும் ஒன்றும் நடக்காது.பாஜக நடக்க விடாது.
தேர்தல் ஆணையம் தினகரனுக்கும் அதிமுகவுக்கும்  ஒரு தொடர்பும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாகவே கூறி விட்டது.
இணைந்த அணிகள் பொது,செயற்குழுக்களை கூட்டி சசிகலா பொதுசசெயலாளர் நியமனத்தை தள்ளுபடி செய்து புது பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும்.


எனவே அவர்கள் ஒரு பொருட்டல்ல.

வரவுள்ள  சட்டமன்ற பொதுத்தேர்தலில்  பழைய திமுக,இ.காங்கிரஸ் முறை யில் 111,111என்றும்  மற்றவை பாமக,வாசன் மற்றும் சில்லறை கூட்டணி கட்சிகளுக்கு என்ற அளவில் தொகுதி பங்கிடு.ஆட்சியிலும் பாதி.இதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளுமா என்று சில தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் கேட்கலாம்.
அவர்களுக்கு இதுவரையிலான அதிமுகவினர் , அமைச்சர்கள் மீதான அமுலாக்கப் பிரிவு,வருமானவரித்துறை ஆய்வுகள் முடிவு மோடி ,அமித் ஷா கையில் என்பததுதான் பதிலாகும் .

இரட்டை இலை  தயவில் மக்கள் வாக்குகளை வாரி வழங்காவிட்டாலும்  வழமையான மோடி,அமித் ஷா,ஜெ பாணியில் காவல்துறை,அதிகாரிகள்,தேர்தல் ஆணையம் கூட்டணியால் வென்று தமிழகத்தில் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்வது  என்பதுதான் அமித் ஷா  அன்  கோ திட்டம்.

காலை பதித்து விட்டால் திமுகவை ஜெ பாணியில் அடக்கி அமித் ஷா பாணியால் ஒதுக்கி விடலாம் என்பதும் அவர்களின் இன்பக்கனவின் பகுதி.

ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் சில தொகுதிகள் வெல்வதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் தனது கணக்கை  "லாபம்" என்று சுழி போட்டு ஆரம்பிக்கலாம் என்பது உள் நோக்கம்.
ஆனால் பாஜக மதவாதம்,கொலை வெறி தமிழக மக்களுக்கு அத்துப்படி.

சில அப்பாவிகள் வாக்குகளில் பாஜக தொகுதிகளைப்பெற்றாலும் அது நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சென்ற மக்கலவைத்தேர்தலில் முக்கிய எதிர் கட்சி திமுக ஒரு இடம் கூட வெல்லா நிலையில் குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வென்றார்.மத்திய அமைச்சருமானார் .

ஆனால் அடுத்த சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு மட்டுமல்ல,ஆளுங்கட்சியாக வந்த அதிமுகவுக்கு கூட குமரி மாவட்டத்தில் ஒரு இடம் கூட கிட்டவில்லை.

அமித் ஷா ,மோடி தலைமையிலான பாஜகவுக்கு இதன் மூலம் தெரியும் நீதி .

காலம்காலமாய் மக்களவைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்,சட்டமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவானவர்கள்.


சென்ற தேர்தலில் இருபது களில்  மட்டுமே இடம் பெற்று எதிர் கட்சியாக கூட வரமுடியாமல் இருந்த திமுகதான் இத்தேர்தலில் ஜெயலலிதா,தேர்தல் ஆணையம்,காவல்துறை,பணபலம்,அதிகாரிகள் மேலாக பாஜக ஆதரவு ஆகியவை கூட்டணியை மீறி தொண்ணுறுகளில் சட்டமன்றத்தில் பலம் பொருந்தி நிற்கிறது.

சென்ற முறை எதிர் கட்சி தேமுதிக வுக்கு ஒரு இடம் கூட இல்லை.என்பதுடன் அனைத்து இடங்களிலும் காப்புத்தொகையை பாஜகவுடன் இணைந்து இழந்திருக்கிறது.இதில் வேடிக்கை ஆளும் அதிமுகவும் சில இடங்களில் காப்புத்தொகையை இழந்துள்ளது.

ஜெ,பாஜக,தேர்தல் ஆணையம் கூட்டணி சாதி இல்லாவிட்டால் இன்றை ஆட்சியாளர்கள் திமுக என்பதைத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தல் நிரூபித்துள்ளது.                                                             அடிமை இந்தியா 
                                      1900 ஆண்டு வெள்ளையனை சுமக்கும் சிக்கிம் பெண்.
எட்டப்பாடியின் ஆட் சியில் " புதிய இந்தியா தமிழ் நாடு."
=======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-20.
 • உலக கொசு ஒழிப்பு தினம்
 • ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
 • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் புழக்கத்தில் விடப்பட்டது (1917)
 • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினம்(1944)
=========================================================================================

 கொசு ஒழிப்பு தினம்

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 20ல், உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார் டாக்டர் ரொனால்டு ரோஸ். 
இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்தினமே, உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் 'அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை. இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.
ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 - 1899 வரை ஈடுபட்டார். 
1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவரே. 
'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது.
எப்படி தடுப்பதுபொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.* சீரான இடைவெளியில் தண்ணீர் சேர்த்து வைக்கும் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும்.

* தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
உலகளவில் 2015 கணக்கின் படி, 21.2 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் தான் ஏற்படுகிறது.
மலேரியாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையினால், 2010 லிருந்து 2015 வரை, உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 29% குறைக்கப்பட்டுள்ளது.

                                                       தொலை நோக்கு பார்வை வேண்டும்.


உத்திர பிரதேசத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் 63 குழந்தைகள் மரணம்.
தொடர்பான கருத்துப்படங்கள்.
பசு எங்கள் அரசியல்

கோல்வால்கர் அளித்த வாக்குமூலம்
இந்தக் கட்டுரை இந்தியாவின் தலைசிறந்த உயிரியல் விஞ்ஞானி பி.எம்.பார்கவா அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் சாராம்சங் களில் ஒன்றாகும். உயிரியல் விஞ்ஞானியும் ஹைதராபாத்தில் உள்ள செல்லியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்தின் பேராசிரிய ருமானசந்தனா சக்ரவர்த்தி இந்த நூலை எழுதியுள்ளார். டாக்டர் வர்கீஸ் குரியனின் சுயசரிதையில் இருந்தும் விபரங்கள் எடுக்கப் பட்டுள்ளன. விஞ்ஞானி பார்கவா, 2017 ஆகஸ்ட் 1 அன்று தனது 89வது வயதில் காலமானார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பால் நடத்தப்பட்ட பசு வதைக்கெதிரான பெரிய அளவிலான போராட்டத்தை 1966ஆம் ஆண்டு நமதுநாடு எதிர்கொண்டது. பசு வதையை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பது இப்போராட்டத்தின் கோரிக்கையாக இருந்தது. 
உச்சகட்டமாக சாமியார்களின் தலைமையில் தில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பூரி சங்கராச்சாரியார் இந்தக் கோரிக்கையைமுன் வைத்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், அங்கே திரண்டிருந்த கும்பல் கலவரத்தில் இறங்கியது.நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர 48 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், 1967ஆம் ஆண்டு பசுவதைத்தடை தொடர்பாக, ஓய்வு பெற்ற இந்தியத் தலைமை நீதிபதி சர்க்கார் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை இந்திய அரசாங்கம் அமைத்தது. ஆர்எஸ்எஸ் தலைவரான கோல்வால்கர், பூரி சங்கராச்சாரியார், வர்கீஸ் குரியன் (இந்தியாவின், உண்மைப்புரட்சிக்கு வித்திட்ட ‘பால் மனிதர்’), பொருளாதார அறிஞர் அசோக் மித்ரா, மத்திய உணவுத்தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின்இயக்குநரான பார்ப்பியா ஆகியோர் இந்தக் குழுவில்உறுப்பினர்களாக இருந்தனர். 
இந்தக் குழுவின் முன்னர்தன்னுடைய கருத்துக்களைச் சொல்ல வருமாறு விஞ்ஞானிபுஷ்ப மித்ர பார்கவா கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பாலும் மாமிசமும்
இந்தக் குழுவின் முன்பாக ஆஜர் ஆவதற்காக தில்லியில் இருக்கும் கிருஷி பவனுக்கு விஞ்ஞானி பி.எம்.பார்கவா வந்த போது, அங்கே காத்திருக்கும் அறையில் அமர்ந்து இருந்த ஒருவர் பசுக்களைக் கொல்வது பற்றி பார்கவாவிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 
அவரது கேள்விகள் முடிவே இல்லாதது போன்றிருந்தன. பார்கவாக்கள் பொதுவாக பிராமணர்களாகக் கருதப்படுவதால் அவர் பிராமணர்தானா, பார்கவா மாமிச உணவு உண்ணுபவரா, மாமிச உணவு உண்ணுபவர் என்றால் பசுவின் இறைச்சியை உண்ணுபவரா, நமது உடல் மாமிசத்தை எவ்வாறுஉருவாக்குகிறது என்பது போன்ற பல கேள்விகளை அவர் அடுக்கிக் கொண்டே சென்றார்.
நாம் உண்ணும்உணவில் புரதம் இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, நமது ஜீரண மண்டலத்தில் இந்தப் புரதங்கள் அமினோஅமிலங்களாகச் செரிக்கப்பட்டு, பின்னர் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் சேர்க்கின்றன; பின்னர் ரத்தத்தின் மூலமாக உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவை மீண்டும் புரதமாக மாற்றப்படுகின்றன என்ற உயிர்வேதியியல் பாடத்தை பார்கவா அவருக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 

அடுத்ததாக அந்த மனிதர், பால் எவ்வாறு உருவாகிறது என்ற கேள்வியினை முன்வைத்தார். மாமிசம் உருவாவதைப் போலவே பாலும் உருவாவதாக பார்கவா பதிலளித்தார். அப்படியென்றால் மாமிசத்திற்குப் பதிலாக பாலை அருந்தலாமே என்று அந்த மனிதர் உடனடியாகக் கேட்டார். 
இரண்டும் ஒரே வழியில் உருவாவதால், பாலை அருந்துவதைப் போலவே நீங்கள்மாமிசத்தையும் சாப்பிடலாமே என்ற கேள்வியினைப் பதிலாக பார்கவா அவரிடம் சொன்னார்.
உயர் நிலைக்குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம்சொல்வதற்கு முன்னதாக நடந்த இந்த நிகழ்வு ஓர் ஒத்திகை போன்று இருந்ததை எண்ணி பார்கவா ஆச்சரியமடைந்தார். அதே கேள்விகளையே அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த கோல்வால்கரும் பார்கவாவிடம் கேட்டார். 
மாமிசத்தைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பாலை ஏன் அருந்தக் கூடாது என்ற கோல்வால்கரின் கேள்விக்கு விடையளித்த பார்கவா, பாலை அருந்துவதற்குப் பதிலாக மாமிசத்தை ஏன் சாப்பிடக் கூடாதுஎன்ற கேள்வியினை அவர் முன்வைத்த போது கோல்வால்கர் கோபத்தின் உச்சிக்கு சென்றார்.குழுவின் தலைவரும், சங்கராச்சாரியாரும் அவரை அமைதிப்படுத்தினர். 

தங்கள் பக்க நியாயத்தைக் கெடுத்துக் கொள்வதாக சங்கராச்சாரியார் கோல்வால்கரிடம் குறைபட்டுக் கொண்டார். பார்கவாஅந்த அறையில் இருந்து வெளியே வந்த போது,நீதிபதி சர்க்காரிடம் இருந்து அவருக்கு துண்டுத் தாளின்மூலமாக, வெளியே செல்வதற்கு முன்னதாக தன்னைவந்து சந்திக்குமாறு தகவல் வந்தது.
அவரைச் சென்றுசந்தித்த போது, பார்கவா மிக நன்றாகப் பதில் அளித்ததாகவும், அவருக்கு முன்னதாக குழுவின் முன்னர் ஆஜராகி விளக்கம் அளித்த சமஸ்கிருதப் பேராசிரியர் ஒருவர் பண்டைய இந்திய இலக்கியங்களில் மாட்டுக்கறி உண்ணுவதின் நன்மைகள் குறித்து கூறப்பட்டிருப்பதை பார்கவாவை விட மிக அழகாக விளக்கியதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்கவாவிடம் நீதிபதி சர்க்கார் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடந்து, முப்பதாண்டுகளுக்குப் பிறகுகுஜராத்தில் உள்ள ஆனந்த் நகருக்கு தனது நண்பரோடு சென்று ‘பால் மனிதர்’ வர்கீஸ் குரியனை விஞ்ஞானி பார்கவா சந்தித்தார். குரியனிடம் அந்த தில்லி நிகழ்வை பார்கவா நினைவு கூர்ந்தார். அப்போதுநானும் கோல்வால்கரும் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டதாக வர்கீஸ் குரியன் சொன்னார்.
 “பசுப்பாதுகாப்பு பற்றிய போராட்டங்கள் எல்லாம் வெறும்அரசியல் போராட்டங்கள், அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காகவே அத்தகைய போராட்டங்களை நான் ஆரம்பித்தேன்” என்று கோல்வால்கர் தன்னிடம் கூறியதாக பார்கவாவிடம் குரியன் தெரிவித்தார்.
அம்பலப்படுத்துகிறார் வர்கீஸ்
இதே விவகாரத்தை பின்னர் வர்கீஸ் குரியன் “எனக்கு ஒரு கனவு இருந்தது” என்ற தலைப்பிலான தன்னுடைய சுயசரிதையிலும் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:‘
‘1967ஆம் ஆண்டு நான் தேசிய கால்நடை அபிவிருத்தி வாரியத்தின் தலைவராக இருந்த போது,இந்திய அரசாங்கத்தால் பசுக்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நம்ப முடியாத வகையில் இந்தக் குழு பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வழக்கமாகக் கூடி வந்தது. பசுவதை தொடர்பாக பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இருந்தவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்து வந்தோம். 
அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக, மிகக்கடினமான பணியாக அது இருந்தது.
எனது கருத்துக்கள் பசுவதை மீதான தடைக்கு எதிராகவே இருந்தன.இந்த கருத்துக்களிலே தான் சங்கராச்சாரியாருக்கும் எனக்கும் பெருத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதன்விளைவாக எங்களுக்கிடையே பலத்த விவாதங்கள் எழுந்தன. ”பயன்பாட்டில் இல்லாத பசுக்களை,எந்தவிதப் பயனும் அளிக்காத பசுக்களை அவை சாகும் வரையில் வைத்திருந்து தீனி போடப் போகிறீர்களா? அது சரிப்பட்டு வராது” என்று அவரிடம்நான் கூறியபோது, அதற்கான பதில் எதுவும் அவரிடம் இருக்கவில்லை.
பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்தக்குழுவின் உறுப்பினர்கள் தில்லிக்கு வந்து கூட்டங்களில் பங்கேற்பதற்கான பணத்தை இந்திய அரசாங்கம்அளித்து வந்தது. 

மொரார்ஜி தேசாய் பிரதமரான பிறகு அவரிடமிருந்து ‘பசுப் பாதுகாப்புக் குழு கலைக்கப்படுகிறது’ என்ற செய்தி, ஒரு துண்டுத் தாளில் எனக்கு வருகின்ற வரையில் எங்களுடைய பணி தொடர்ந்து வந்தது.அந்தக் குழுவின் சார்பில் எந்தவித அறிக்கையும் எங்களிடமிருந்து கோரப்படவில்லை.
ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கூட்டங்களின் விளைவாக யாரும் எதிர்பாராத நிகழ்வு அப்போது நடந்தேறியது. 
நானும் கோல்வால்கரும் மிகச் சிறந்த நண்பர்களாக மாறியிருந்தோம். அறைக்குள் நான் நுழைந்ததுமே என்னை ஆரத் தழுவி கோல்வால்கர் வரவேற்ற விததத்தைப் பார்த்தஅனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 
ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அவர் என்னைத்தனியாக அழைத்து, “சங்கராச்சாரியாரிடம் சண்டையிட்டு உங்களுடைய சக்தியை நீங்கள் ஏன் தேவையில்லாமல் இழக்கிறீர்கள்? 
அவரைப் பற்றிய உங்களது கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன். உங்களை அவர் கோபப்படுத்துகின்ற நிலை வருவதைத் தவிர்த்து விடுங்கள். அவரை உதாசீனப்படுத்தி விடுங்கள்” என்று கூறி அவர் என்னைச் சமாதானப்படுத்துவார்.
ஒரு நாள் பசுவதைத் தடை பற்றி அவரது கருத்துக்களை முன்வைத்து விவாதங்களை மேற்கொண்ட பிறகு,அந்தக் கூட்டத்தின் முடிவில் அவர் என்னருகே வந்துஎன்னிடம் தனியாக, “குரியன், பசுக்களைக் கொல்லுவதை நான் ஏன் பிரச்சனை ஆக்குகிறேன் என்பதை உங்களிடம் சொல்லட்டுமா?” என்றார். ”இந்த விஷயத்தைத் தவிர்த்து நீங்கள் ஒரு அறிவாளி என்பதை நான் அறிவேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்பதைநீங்கள் எனக்கு விளக்க வேண்டும்” என்று நான் அவரிடம் சொன்னேன். என்னிடம் தனியாக அவர் விளக்க ஆரம்பித்தார்:“

அரசாங்கத்தினை அச்சுறுத்தும் விதத்தில் பசுவதைக்கு எதிராக மனு ஒன்றைத் தயார் செய்து,அந்த மனுவில் பல லட்சக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த வேலை எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காண்பதற்காக நாடு முழுவதிலும் நான் பயணம் செய்தேன்.அந்தப் பயணத்தின் போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறு கிராமத்திற்குச் சென்றேன்.
அங்கே ஒருவீட்டில் இருந்த பெண்மணி ஒருவர் அன்றைய உணவைத் தயார் செய்து தனது கணவனை வேலைக்கும், இரண்டு குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பி விட்டு, அந்தக் கோடை வெயிலில் வீடு வீடாகச் சென்றுஅந்த மனுவில் கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்தார். 
இவ்வாறு அவர் ஏன் கஷ்டப்பட வேண்டும்என்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அந்தப் பெண் அதைச் செய்வதில்ஆவலுடன் இருந்ததாகவும் தெரியவில்லை. அவர் தன்னிடமிருந்த பசுவிற்காக மட்டுமே அதைச் செய்துகொண்டு இருந்தார். 
அந்தப் பசுதான் அவருக்கான அன்றாட உணவினை அளித்துக் கொண்டிருந்தது என்பதைப் பார்த்த பிறகு நான் பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். பசு என்பது இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் சக்தியுடன் இருப்பதைக் கண்டேன்.
பாரதக் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாக பசு இருக்கிறது. அதனால்தான், குரியன், நான் உங்களிடம் இப்போது சொல்கிறேன். 
பசுவதைத் தடை குறித்து இந்தக் குழுவின் முன்பு நீங்கள் என்னோடு ஒத்துப் போனால், இன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள்ளாக இந்த நாடு முழுவதையும் நான் ஒருங்கிணைத்து விடுவேன் என்பதை உங்களிடம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று கோல்வால்கர் என்னிடம் கூறினார்.
நான் இதுகுறித்து அவரோடு ஒத்துப் போகவில்லை என்பதோடு, அந்தக் குழுவில் பசுவதைத் தடை குறித்த அவரது வாதங்களை நான் ஆதரிக்கவுமில்லை.
                                                                                                      பேராசிரியர் சந்தனா சக்ரவர்த்தி

நன்றி: தி வயர் இணைய ஏடு,
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு, விருதுநகர்(தீக்கதிரில் )
===================================================================================================================================

ன்று,
ஆகஸ்ட்-19.


 • உலக புகைப்பட தினம்
 • உலக  மனிதநேய தினம்
 • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)
 • கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)
 • முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா (1992 -- 97)  பிறந்த தினம்(1918)
 • ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)
=======================================================================================
உளவாளி @withkaran 
ஓபிஎஸ் ஈபிஎஸ் இனைவதால் தமிழக மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
வியாழன், 17 ஆகஸ்ட், 2017

;பொய்யிலே பிறந்து.....

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு.

முதலில், நரகல் ஆற்றில் நீந்தும் திறமை வேண்டும்

அடுத்து, அக்காமாலாவை அசூயை இன்றிக் குடிக்கும் ஆற்றல் வேண்டும்;
 மேலும், உண்மைகளை அறிந்து வெடித்துப் போகாத இதயம் வேண்டும்.
 மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்;
நாம் மாண்புமிகு பிரதமர் அவர்களின் சுதந்திர தின வாய்ப்போக்கில் ஒரு சில அம்சங்களை மாத்திரம் பிரித்து மேயப் போகிறோம்.

சவடால் 1 : உலகமே வியக்கும் வண்ணம் மிக குறைந்த காலத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வெற்றி பெற்றுள்ளது.

உண்மை : பல்வேறு அரசாங்கங்களின் சுமார் 17 ஆண்டு கால முயற்சியின் பலனாகவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்துள்ளதோடு, குழப்பமான வரிவிதிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மீளமுடியாத சிக்கலில் மாட்டியுள்ளனர். ஜி.எஸ்.டி முறையை முன்பு அறிமுகம் செய்த காங்கிரசின் ப.சிதம்பரமே, மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட வரிவிதிப்பு முறை ஜி.எஸ்.டியின் அடிப்படைக்கே முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சவடால் 2 : புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைகள் இரு மடங்கு வேகத்தோடு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

உண்மை : நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2001 -ம் ஆண்டிலிருந்து பார்த்தால், 2012 – 13 காலப்பகுதியில் தான் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அதிவேகத்துடன் நிர்மாணிக்கப்பட்டன.

சவடால் 3 : இரயில் பாதைகள் இருமடங்கு வேகத்துடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

உண்மை : இதுவும் பொய். 2009 – 10 கால கட்டத்தில் இருந்து இரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு பரிசீலித்தால், 2011 – 12 காலகட்டத்தில் தான் அதிகளவில் புதிய இரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சவடால் 4 : சுதந்திரத்திற்கு பின்னும் பல்லாண்டுகள் இருளில் மூழ்கியிருந்த 14,000 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உண்மை : இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளன. மின் இணைப்பு இல்லாத கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 18,452 கிராமங்களில் 14,834 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது சரி தான். ஆனால், நாடெங்கும் உள்ள வீடுகளில் நான்கில் ஒரு வீட்டுக்கு மின் இணைப்பு கிடையாது.

அதாவது கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது – வீடுகளுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதுவும், மின் வழங்கல் மற்றும் பகிர்மானம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளதால், தனியார் முதலாளிகளுக்குப் புதிய சந்தைகளைத் திறந்து விடும் நோக்கிலேயே புதிய கிராமங்கள் மின் இணைப்பு வலைப்பின்னலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.


சவடால் 5 : 29 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

உண்மை : ஆகஸ்டு 8 வரையிலான காலகட்டத்தில் 29.48 கோடி புதிய ஜன் தன் கணக்குகள் துவங்கப்பட்டது உண்மை தான். ஆனால், இதில் மூன்றில் ஒருபகுதி கணக்குதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு இருந்தது. மேலும், புதிதாக திறக்கப்பட்ட கோடிக்கணக்கான புதிய வங்கிக் கணக்குகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரை பணப்பரிமாற்றம் நடக்கவில்லை.

பெருவாரியான மக்களை வங்கி வலைப்பின்னலுக்குள் இழுத்து அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் நோக்கில் துவங்கப்பட்ட ஜன் தன் யோஜனாவை வளர்ச்சித் திட்டம் என பீற்றிக் கொள்ள ஏதுமில்லை என்பதே உண்மை.

சவடால் 6 : ஒன்பது கோடி விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டை வழங்கப்பட்டுள்ளது.

உண்மை : விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 9.06 கோடி மண் ஆரோக்கிய அட்டையில் சுமார் 2.5 கோடி அட்டைகளில் தான் விவசாய மண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் உள்ளன என்பதே உண்மை.

சவடால் 7 : சுமார் 2 கோடி ஏழைக் குடும்பங்கள் விறகடுப்பிலிருந்து எல்.பி.ஜி அடுப்புக்கு மாற்றப்பட்டுள்ளன.

உண்மை : 2.5 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டுத் தரவுகளின் படி பார்த்தால் புதிதாக இணைப்பு வாங்கியவர்கள் பெரும்பாலும் எரிவாயு உருளைகளை வாங்கிப் பயன்படுத்தவே இல்லை.

சவடால் 8 : பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 3 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

உண்மை : 1.08.2017 அன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படையில் கருப்புப் பணமாக இனங்காணப்பட்ட தொகையின் மதிப்பு 18.5 ஆயிரம் கோடி. இதே 2013 – 14 காலகட்டத்தில் நடந்த மன்மோகன் சிங் அரசில் அறிமுகம் செய்யப்பட்ட நேரடி வரிவிதிப்பின் விளைவாக கருப்புப் பணமாக இனங்காணப்பட்ட தொகையின் அளவு 90.4 ஆயிரம் கோடி.

வழக்கமாக பிரதமர் ஆற்றும் சுதந்திர தின உரையை விட இம்முறை சுருக்கமான உரையாக அமைந்து விட்டதென ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சுருக்கமான உரையிலேயே இத்தனை பொய்கள் என்றால், விரிவாக உரையாற்றியிருந்தால்?
வளர்ச்சி:
வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி சரக்கு மற்றும் சேவை வரி மிகக்குறைந்த நாட்களிலேயே சாதித்துக்காட்டப்பட்டதைப் பார்த்து உலகம் ஆச்சரியப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவில் ஜி.எஸ்.டி கடந்த 17 வருடங்களாக ஆய்வு செய்யப்பட்ட விஷயம். 
பாஜகவி்ற்கு முன்னதாக இருந்த அரசுகள் இதற்காக தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளன.
சாலைகளின் வளர்ச்சி:
பிரதமர் மோடி பேசும்போது இன்றைய காலகட்டத்தில் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு வேகமாக சாலைகள் போடப்படுகின்றன என்று பேசினார்.
ஆனால், இது தவறு. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 2001லிருந்து இன்றுவரையிலான காலகட்டத்தில் 2012-13 காலகட்டத்தில் தான் அதிவேகமாக சாலைகள் போடப்பட்டுள்ளன. 
இதில் தேசிய, மாநில, ஊரக நெடுஞ்சாலைகள் அடக்கம்.

ரயில்வே:
மோடி பேசும்போது இன்று ரயில் வழிப்பாதைகள் இரட்டை வேகத்தில் உருவாக்கப்படுவதாக சொன்னார்.
ஆனால், இது தவறு.
 2009 முதல் இன்றுவரை அதிகமான ரயில் பாதைகள்  உருவாக்கப்பட்டது 2011ம் ஆண்டுதான். 
2011-12 காலகட்டத்தில் 3300 கி.மீ நீளத்திற்கு ரயில்பாதைகள் போடப்பட்டன. 
ஆனால், மோடி ஆட்சிப்பொறுப்பேற்ற 2014-16 வரை ஆண்டுக்கு 2400 கி.மீ ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன.
 2016-17 காலகட்டத்தில் 2800 கி.மீ பாதைகள் போடப்பட்டுள்ளன. 
மேலும் மோடி  சொல்வது போல் இரட்டை வேகத்தில் வேலைகள் நடைபெறவில்லை. 
அப்படி நடைபெற்றிருந்தால் 2014-16 காலகட்டத்தில் 2400 கி.மீ என்று இருந்த ரயில்பாதை பணிகள், 2016-17ல் 4800 ஆக உயர்ந்திருக்க வேண்டும். 
ஆனால், அப்படி நடக்கவில்லை.

சமையல் எரிவாயு:
நாட்டில் கூடுதலாக 2 கோடி பெண்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதாக மோடி குறிப்பிட்டார்.
ஆனால், இது தவறான தகவல். 
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2.5 கோடி புதிய எரிவாயு இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களில் பல லட்சம் பேருக்கு சிலிண்டர் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:
மோடி பேசும்பொழுது, எந்தவிதமான உத்ரவாதமும் இல்லாமல் 8 கோடி வரை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சுயவேலை வாய்ப்புக்காக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
ஆனால், இதுதவறான தகவலாகும். 
முந்த்ரா திட்டத்தின் கீழ், சிறுகுறு தொழில்களுக்காக 7.46 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 
ஆனால், இவர்களில் 40% பேருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதியில் 2.5% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளை விடுவதும் வெளிநாட்டில் போய் பொய்யான வளர்சி  பற்றிய பேசுவதையும் பிரதமர் மோடி வழமையாக்கி கொண்டுள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் இதைப்பற்றி கேள்விகள் எழுப்பினால் மவுனசாமி யாக மாறி தியானத்தில் இருப்பவர் போல் இருந்து விடுகிறார்.
இது கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் 110 போன்ற பொய் வளர்சி .
தெரிந்தேதான் தவறான வளர்சி தகவல்களை தைரியமாக அரசு விழாக்களில் மோடி சொல்லுகிறார்.
பொய்யிலே பிறந்து,பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே பாடல்தான்  மோடி,பாஜகவை பார்க்கையில் நினைவில் 
=========================================================================================

ன்று,
ஆகஸ்ட்-18.
 • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
 • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
 • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
 • இந்திய விடுதலைப்  போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)
=========================================================================================
தமிழ் சினிமாவில் 900 படங்களுக்கு மேல் நடித்த அல்வா வாசு காலமானார்.

பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த அல்வா வாசு, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஓராண்டாக மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். 
அல்வா வாசுவின் உடல்நலம் சில நாள்களுக்கு முன்னர் மிகவும் பாதிக்கப்பட்டது. 
இதையடுத்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட அவர் மதுரையில் இருக்கும் தனது வீட்டில் காலமானார். 
அவருக்கு வயது 57.ஜெயலலிதா சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாரா? 
அட்மிட்டாகும்போதே கடுமையான நுரையீரல் நோய்த் தொற்றும் இருதய கோளாறும் இருந்ததா? 
அவரது உடலில் சர்க்கரையின் அளவு என்ன? 
அப்படிப்பட்டவருருக்கு காய்ச்சல்-நீர்ச்சத்து குறைபாடு என்று மட்டும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது ஏன்? 
சிகிச்சையின்போது ஜெயலலிதா இயல்பு நிலையில் இருந்தாரா? 
இடைத்தேர்தல் மனுவில் சுயமாக கைரேகை வைத்தாரா? 
வாக்காளர்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் கையெழுத்து போட்டாரா? 
இட்லி-சாம்பார், தயிர்சாதம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிட்டாரா? ஐ.சி.யூ.வில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாரா? 
சர்க்கரை அளவின் காரணமாக அவரது கால்கள் பாதிக்கப்பட்டனவா? 
மரணம் நிகழ்ந்த உண்மையான நேரம் எது? 
அதன்பின் எவ்வளவு நேரம் கழித்து அறிவிக்கப்பட்டது? 
சிசிடிவி காமிராக்கள் ஏன் அகற்றப்பட்டன?

அதை எல்லாம் விட  முக்கிய கேள்வி.'திமுக செயல்தலைவர் ஸ்டாலின்  கேட்டபோதே அல்லது அதன் பின் முன்னாள் முதல்வர் பன்னிர்செல்வம் கேட்டபோது விசாரிக்காமல் தினகரன் கூறிய பின்னர் குழ அமைப்பதும் ,அதை அப்போலோ வரவேற்பதும் பழைய தடயங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு,புதியவை தயாரிக்கப்பட்டுள்ளதோ என்று ஐயத்தை கிளப்புகிறது.அந்த 75 நாட்களையும் விசாரிக்குமா.அல்லது மருத்துவ தாட்களை மட்டுமே மேயுமா?
விசாரணைக்குழு தரப்போகும் அறிக்கையை  சாதாரண மனிதர்கள் கூட இப்போதே சொல்லும் அளவு விவரமாக இருக்கிறார்கள்.
காரணம் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு வெளியே ஒன்றும் தெரியாது என்று அளந்து விடுகிறீர்கள்.
பிக்பாஸ் கமல் மட்டும் கண்காணிக்கவில்லை.பொதுமக்களும் வீட்டில் உள்ளோர் அசைவை கவனிக்கிறார்கள்.என்பது உங்களுக்கு தெரியுமா?
=========================================================================================