பசு எங்கள் அரசியல்

கோல்வால்கர் அளித்த வாக்குமூலம்
இந்தக் கட்டுரை இந்தியாவின் தலைசிறந்த உயிரியல் விஞ்ஞானி பி.எம்.பார்கவா அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் சாராம்சங் களில் ஒன்றாகும். உயிரியல் விஞ்ஞானியும் ஹைதராபாத்தில் உள்ள செல்லியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்தின் பேராசிரிய ருமானசந்தனா சக்ரவர்த்தி இந்த நூலை எழுதியுள்ளார். டாக்டர் வர்கீஸ் குரியனின் சுயசரிதையில் இருந்தும் விபரங்கள் எடுக்கப் பட்டுள்ளன. விஞ்ஞானி பார்கவா, 2017 ஆகஸ்ட் 1 அன்று தனது 89வது வயதில் காலமானார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பால் நடத்தப்பட்ட பசு வதைக்கெதிரான பெரிய அளவிலான போராட்டத்தை 1966ஆம் ஆண்டு நமதுநாடு எதிர்கொண்டது. பசு வதையை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பது இப்போராட்டத்தின் கோரிக்கையாக இருந்தது. 
உச்சகட்டமாக சாமியார்களின் தலைமையில் தில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பூரி சங்கராச்சாரியார் இந்தக் கோரிக்கையைமுன் வைத்து உண்ணாவிரதம் இருந்த நிலையில், அங்கே திரண்டிருந்த கும்பல் கலவரத்தில் இறங்கியது.நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர 48 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், 1967ஆம் ஆண்டு பசுவதைத்தடை தொடர்பாக, ஓய்வு பெற்ற இந்தியத் தலைமை நீதிபதி சர்க்கார் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை இந்திய அரசாங்கம் அமைத்தது. ஆர்எஸ்எஸ் தலைவரான கோல்வால்கர், பூரி சங்கராச்சாரியார், வர்கீஸ் குரியன் (இந்தியாவின், உண்மைப்புரட்சிக்கு வித்திட்ட ‘பால் மனிதர்’), பொருளாதார அறிஞர் அசோக் மித்ரா, மத்திய உணவுத்தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின்இயக்குநரான பார்ப்பியா ஆகியோர் இந்தக் குழுவில்உறுப்பினர்களாக இருந்தனர். 
இந்தக் குழுவின் முன்னர்தன்னுடைய கருத்துக்களைச் சொல்ல வருமாறு விஞ்ஞானிபுஷ்ப மித்ர பார்கவா கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பாலும் மாமிசமும்
இந்தக் குழுவின் முன்பாக ஆஜர் ஆவதற்காக தில்லியில் இருக்கும் கிருஷி பவனுக்கு விஞ்ஞானி பி.எம்.பார்கவா வந்த போது, அங்கே காத்திருக்கும் அறையில் அமர்ந்து இருந்த ஒருவர் பசுக்களைக் கொல்வது பற்றி பார்கவாவிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 
அவரது கேள்விகள் முடிவே இல்லாதது போன்றிருந்தன. பார்கவாக்கள் பொதுவாக பிராமணர்களாகக் கருதப்படுவதால் அவர் பிராமணர்தானா, பார்கவா மாமிச உணவு உண்ணுபவரா, மாமிச உணவு உண்ணுபவர் என்றால் பசுவின் இறைச்சியை உண்ணுபவரா, நமது உடல் மாமிசத்தை எவ்வாறுஉருவாக்குகிறது என்பது போன்ற பல கேள்விகளை அவர் அடுக்கிக் கொண்டே சென்றார்.
நாம் உண்ணும்உணவில் புரதம் இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, நமது ஜீரண மண்டலத்தில் இந்தப் புரதங்கள் அமினோஅமிலங்களாகச் செரிக்கப்பட்டு, பின்னர் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் சேர்க்கின்றன; பின்னர் ரத்தத்தின் மூலமாக உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவை மீண்டும் புரதமாக மாற்றப்படுகின்றன என்ற உயிர்வேதியியல் பாடத்தை பார்கவா அவருக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 

அடுத்ததாக அந்த மனிதர், பால் எவ்வாறு உருவாகிறது என்ற கேள்வியினை முன்வைத்தார். மாமிசம் உருவாவதைப் போலவே பாலும் உருவாவதாக பார்கவா பதிலளித்தார். அப்படியென்றால் மாமிசத்திற்குப் பதிலாக பாலை அருந்தலாமே என்று அந்த மனிதர் உடனடியாகக் கேட்டார். 
இரண்டும் ஒரே வழியில் உருவாவதால், பாலை அருந்துவதைப் போலவே நீங்கள்மாமிசத்தையும் சாப்பிடலாமே என்ற கேள்வியினைப் பதிலாக பார்கவா அவரிடம் சொன்னார்.
உயர் நிலைக்குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம்சொல்வதற்கு முன்னதாக நடந்த இந்த நிகழ்வு ஓர் ஒத்திகை போன்று இருந்ததை எண்ணி பார்கவா ஆச்சரியமடைந்தார். அதே கேள்விகளையே அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த கோல்வால்கரும் பார்கவாவிடம் கேட்டார். 
மாமிசத்தைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பாலை ஏன் அருந்தக் கூடாது என்ற கோல்வால்கரின் கேள்விக்கு விடையளித்த பார்கவா, பாலை அருந்துவதற்குப் பதிலாக மாமிசத்தை ஏன் சாப்பிடக் கூடாதுஎன்ற கேள்வியினை அவர் முன்வைத்த போது கோல்வால்கர் கோபத்தின் உச்சிக்கு சென்றார்.குழுவின் தலைவரும், சங்கராச்சாரியாரும் அவரை அமைதிப்படுத்தினர். 

தங்கள் பக்க நியாயத்தைக் கெடுத்துக் கொள்வதாக சங்கராச்சாரியார் கோல்வால்கரிடம் குறைபட்டுக் கொண்டார். பார்கவாஅந்த அறையில் இருந்து வெளியே வந்த போது,நீதிபதி சர்க்காரிடம் இருந்து அவருக்கு துண்டுத் தாளின்மூலமாக, வெளியே செல்வதற்கு முன்னதாக தன்னைவந்து சந்திக்குமாறு தகவல் வந்தது.
அவரைச் சென்றுசந்தித்த போது, பார்கவா மிக நன்றாகப் பதில் அளித்ததாகவும், அவருக்கு முன்னதாக குழுவின் முன்னர் ஆஜராகி விளக்கம் அளித்த சமஸ்கிருதப் பேராசிரியர் ஒருவர் பண்டைய இந்திய இலக்கியங்களில் மாட்டுக்கறி உண்ணுவதின் நன்மைகள் குறித்து கூறப்பட்டிருப்பதை பார்கவாவை விட மிக அழகாக விளக்கியதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்கவாவிடம் நீதிபதி சர்க்கார் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடந்து, முப்பதாண்டுகளுக்குப் பிறகுகுஜராத்தில் உள்ள ஆனந்த் நகருக்கு தனது நண்பரோடு சென்று ‘பால் மனிதர்’ வர்கீஸ் குரியனை விஞ்ஞானி பார்கவா சந்தித்தார். குரியனிடம் அந்த தில்லி நிகழ்வை பார்கவா நினைவு கூர்ந்தார். அப்போதுநானும் கோல்வால்கரும் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டதாக வர்கீஸ் குரியன் சொன்னார்.
 “பசுப்பாதுகாப்பு பற்றிய போராட்டங்கள் எல்லாம் வெறும்அரசியல் போராட்டங்கள், அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காகவே அத்தகைய போராட்டங்களை நான் ஆரம்பித்தேன்” என்று கோல்வால்கர் தன்னிடம் கூறியதாக பார்கவாவிடம் குரியன் தெரிவித்தார்.
அம்பலப்படுத்துகிறார் வர்கீஸ்
இதே விவகாரத்தை பின்னர் வர்கீஸ் குரியன் “எனக்கு ஒரு கனவு இருந்தது” என்ற தலைப்பிலான தன்னுடைய சுயசரிதையிலும் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:‘
‘1967ஆம் ஆண்டு நான் தேசிய கால்நடை அபிவிருத்தி வாரியத்தின் தலைவராக இருந்த போது,இந்திய அரசாங்கத்தால் பசுக்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நம்ப முடியாத வகையில் இந்தக் குழு பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வழக்கமாகக் கூடி வந்தது. பசுவதை தொடர்பாக பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இருந்தவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்து வந்தோம். 
அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக, மிகக்கடினமான பணியாக அது இருந்தது.
எனது கருத்துக்கள் பசுவதை மீதான தடைக்கு எதிராகவே இருந்தன.இந்த கருத்துக்களிலே தான் சங்கராச்சாரியாருக்கும் எனக்கும் பெருத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதன்விளைவாக எங்களுக்கிடையே பலத்த விவாதங்கள் எழுந்தன. ”பயன்பாட்டில் இல்லாத பசுக்களை,எந்தவிதப் பயனும் அளிக்காத பசுக்களை அவை சாகும் வரையில் வைத்திருந்து தீனி போடப் போகிறீர்களா? அது சரிப்பட்டு வராது” என்று அவரிடம்நான் கூறியபோது, அதற்கான பதில் எதுவும் அவரிடம் இருக்கவில்லை.
பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்தக்குழுவின் உறுப்பினர்கள் தில்லிக்கு வந்து கூட்டங்களில் பங்கேற்பதற்கான பணத்தை இந்திய அரசாங்கம்அளித்து வந்தது. 

மொரார்ஜி தேசாய் பிரதமரான பிறகு அவரிடமிருந்து ‘பசுப் பாதுகாப்புக் குழு கலைக்கப்படுகிறது’ என்ற செய்தி, ஒரு துண்டுத் தாளில் எனக்கு வருகின்ற வரையில் எங்களுடைய பணி தொடர்ந்து வந்தது.அந்தக் குழுவின் சார்பில் எந்தவித அறிக்கையும் எங்களிடமிருந்து கோரப்படவில்லை.
ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கூட்டங்களின் விளைவாக யாரும் எதிர்பாராத நிகழ்வு அப்போது நடந்தேறியது. 
நானும் கோல்வால்கரும் மிகச் சிறந்த நண்பர்களாக மாறியிருந்தோம். அறைக்குள் நான் நுழைந்ததுமே என்னை ஆரத் தழுவி கோல்வால்கர் வரவேற்ற விததத்தைப் பார்த்தஅனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 
ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அவர் என்னைத்தனியாக அழைத்து, “சங்கராச்சாரியாரிடம் சண்டையிட்டு உங்களுடைய சக்தியை நீங்கள் ஏன் தேவையில்லாமல் இழக்கிறீர்கள்? 
அவரைப் பற்றிய உங்களது கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன். உங்களை அவர் கோபப்படுத்துகின்ற நிலை வருவதைத் தவிர்த்து விடுங்கள். அவரை உதாசீனப்படுத்தி விடுங்கள்” என்று கூறி அவர் என்னைச் சமாதானப்படுத்துவார்.
ஒரு நாள் பசுவதைத் தடை பற்றி அவரது கருத்துக்களை முன்வைத்து விவாதங்களை மேற்கொண்ட பிறகு,அந்தக் கூட்டத்தின் முடிவில் அவர் என்னருகே வந்துஎன்னிடம் தனியாக, “குரியன், பசுக்களைக் கொல்லுவதை நான் ஏன் பிரச்சனை ஆக்குகிறேன் என்பதை உங்களிடம் சொல்லட்டுமா?” என்றார். ”இந்த விஷயத்தைத் தவிர்த்து நீங்கள் ஒரு அறிவாளி என்பதை நான் அறிவேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்பதைநீங்கள் எனக்கு விளக்க வேண்டும்” என்று நான் அவரிடம் சொன்னேன். என்னிடம் தனியாக அவர் விளக்க ஆரம்பித்தார்:“

அரசாங்கத்தினை அச்சுறுத்தும் விதத்தில் பசுவதைக்கு எதிராக மனு ஒன்றைத் தயார் செய்து,அந்த மனுவில் பல லட்சக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த வேலை எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் காண்பதற்காக நாடு முழுவதிலும் நான் பயணம் செய்தேன்.அந்தப் பயணத்தின் போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறு கிராமத்திற்குச் சென்றேன்.
அங்கே ஒருவீட்டில் இருந்த பெண்மணி ஒருவர் அன்றைய உணவைத் தயார் செய்து தனது கணவனை வேலைக்கும், இரண்டு குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பி விட்டு, அந்தக் கோடை வெயிலில் வீடு வீடாகச் சென்றுஅந்த மனுவில் கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்தார். 
இவ்வாறு அவர் ஏன் கஷ்டப்பட வேண்டும்என்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அந்தப் பெண் அதைச் செய்வதில்ஆவலுடன் இருந்ததாகவும் தெரியவில்லை. அவர் தன்னிடமிருந்த பசுவிற்காக மட்டுமே அதைச் செய்துகொண்டு இருந்தார். 
அந்தப் பசுதான் அவருக்கான அன்றாட உணவினை அளித்துக் கொண்டிருந்தது என்பதைப் பார்த்த பிறகு நான் பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். பசு என்பது இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் சக்தியுடன் இருப்பதைக் கண்டேன்.
பாரதக் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாக பசு இருக்கிறது. அதனால்தான், குரியன், நான் உங்களிடம் இப்போது சொல்கிறேன். 
பசுவதைத் தடை குறித்து இந்தக் குழுவின் முன்பு நீங்கள் என்னோடு ஒத்துப் போனால், இன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள்ளாக இந்த நாடு முழுவதையும் நான் ஒருங்கிணைத்து விடுவேன் என்பதை உங்களிடம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று கோல்வால்கர் என்னிடம் கூறினார்.
நான் இதுகுறித்து அவரோடு ஒத்துப் போகவில்லை என்பதோடு, அந்தக் குழுவில் பசுவதைத் தடை குறித்த அவரது வாதங்களை நான் ஆதரிக்கவுமில்லை.
                                                                                                      பேராசிரியர் சந்தனா சக்ரவர்த்தி

நன்றி: தி வயர் இணைய ஏடு,
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு, விருதுநகர்(தீக்கதிரில் )
===================================================================================================================================

ன்று,
ஆகஸ்ட்-19.


  • உலக புகைப்பட தினம்
  • உலக  மனிதநேய தினம்
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)
  • கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)
  • முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா (1992 -- 97)  பிறந்த தினம்(1918)
  • ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)
=======================================================================================
உளவாளி @withkaran 
ஓபிஎஸ் ஈபிஎஸ் இனைவதால் தமிழக மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?