சர்வாதிகார ஜனநாயகம்...!

நாம் கடந்த சுமார் 3 ஆண்டு காலமாக.‘ஒரே மக்கள், ஒரே சாம்ராஜ்ஜியம், ஒரே மன்னன்’ என்பதைப் போன்ற ஒருசர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்காக சிலர் தீவிரமாக உழைத்துக் கொண்டிருப்பதை நம் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவர்கள் செய்து வரும் அருள் கூர்ந்த ஆட்சி, இனி இந்தியாவை ஜனநாயக நாடாகஇருக்கவிடுமா என்கிற ஐயத்தை கடந்த மே 2ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துவிட்டது. 
ஏ.கே.சிக்ரி மற்றும்அசோக் பூஷண் நீதிபதிகளாக இருக்கும் உச்சநீதிமன்ற அமர்வில் நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, நாட்டின் குடிமக்கள் யாருக்கும் அவர்களது உடலின் மேல்எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்கிற வாதத்தை முன்வைத்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வது, கருக்கலைப்பு செய்வது, குடிப்பது போன்றவை எப்படி சட்டத்தின் சில விதிகளின்படி தவறானதோ அதைப் போலத்தான் இதுவும் எனத் தேனொழுகும் வார்த்தைகளால் பேசி மொழுகி உச்சநீதிமன்றத்தையே குழப்பத்திற்கு உள்ளாக்கி விட்டார். 


இது ஜனநாயகத்தின் ஒரு பகுதியைதனது கோரைப்பற்களால் தின்று உமிழும் கொடூரத்திற்கு வழி செய்கிறது. ரோத்தகியின் வாதம் முன்வைப்பது என்னவென்றால், இந்தியாவின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு வாழ்கிற குடிமக்கள் அனைவரும் தியாகஉள்ளத்தோடு இந்த அரசு உங்களை பலியிடப்போகும் பலிபீடத்தை இன்முகத்தோடு உவப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இவையெல்லாம் முசோலினி அறிவித்த சர்வாதிகாரக் கொள்கைகளின் நீட்சியே. 

அது அரசின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, தனிநபரின் விருப்பங்களும் அரசின் கொள்கைகளோடு ஒத்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. நாம் சுதந்திரமான ஜனநாயக முறையை சார்ந்திருக்கிறோம்; எனவே நாட்டில் வாழும் குடிமக்களின் உரிமைகளை அரசு புறக்கணிக்க முடியாத வகையில் அது நம்மை காத்துக் கொண்டிருக்கிறது. 

ஆனால் சர்வாதிகாரம் சுதந்திரமான கருத்தமைவையும், அரசு அதற்கேற்ப தன் போக்குகளை மாற்றிக் கொள்வதையும் தீவிரமாக மறுக்கிறது.சுதந்திரத்தின் கோட்பாடு கட்டுக்கடங்காத ஒன்றல்ல;

ஏனெனில் அது வாழ்வின்ஒரு பகுதியே. சுதந்திரம் மறுக்க முடியாத உரிமையல்ல, அது ஒரு கடமை. ஒரு போராடிபெற்ற பலன் அல்ல, அது ஒரு வெற்றி அவ்வளவே. அது ஒரு வெற்றியின் விளைச்சல் அல்ல சாதாரண சலுகை’ என சமீப நாட்களாக நமது ஜெட்லிகளாலும், ராஜ்நாத் சிங்குகளாலும் பயன்படுத்தப்படும் வாக்கியங்கள் சர்வாதிகாரத்தின் கூறுகளே. 

இவர்கள் பின்பற்றச் சொல்லும் செயல்கள் அனைத்தும் நமது இந்திய நாடும்அதே சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகருவதை உறுதிப்படுத்துகிறது.

நாம் இப்போதும் அரசியலமைப்புச் சட்டம்வகுத்துத்தந்துள்ள பல்வேறு அடிப்படை உரிமைகளை பெற்றிருப்பதாக சொல்லிக் கொள்கிறோம். அதன்படி அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு ஆறு உரிமைகளைப் பற்றி பேசுகிறது.

சுதந்திரமாக தனது கருத்துக்களை பேசும் - வெளிப்படுத்தும் உரிமை, ஆயுதங்களின்றி ஓரிடத்தில் அமைதியாக கூடும் உரிமை,தங்களின் உரிமைகளுக்காக அமைப்புகளையோ, சங்கங்களையோ உருவாக்கிக் கொள்ளும் உரிமை, எந்தத்தடையுமின்றி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சென்று வரும் உரிமை, இந்தியாவின் எந்தப் பகுதியிலும்குடியேறி வாழ்வதற்கான உரிமை மற்றும் எந்த ஒரு தொழிலையும் கற்றுக் கொண்டு வர்த்தகத்தையோ, வியாபாரத்தையோ செய்யும் உரிமை.

ஆனால் நமக்குத் தெரியும். இந்த உரிமைகள் எல்லாம் அரசியலைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி நமது ஆட்சிமன்றங்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உதாரணமாக நமது அரசியலைப்புச் சட்டத்தின் பகுதி 19இல் 2ஆம் பிரிவு கொடுத்துள்ள உரிமையான பேச்சுரிமை பின்வரும்விஷயங்களைக் கொண்டது;

நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகளுக்கு இடையிலான நட்புறவு,பொது அமைதி, ஒழுக்கநெறி, நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக, ஒரு குற்றத்தை தூண்டாத வகையில் மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் இறையாண்மை ஆகியவற்றை பாதிக்காத வண்ணம் இருத்தல் வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் தெளிவில்லாதவையாக இருப்பது ஆட்சியாளர்கள் இதனுள்நுழைந்து முறைகேடாய் பயன்படுத்துவதற்கு போதுமானதாக ஒழுக்க நெறி இருக்கிறது. இந்த விதிகளை அவர்கள் மக்களை ஒடுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தும் சீர்கெட்ட நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். ஒருவேளை நீங்கள் இந்த அரசாங்கத்தைப் போற்றித் துதீ பாடவில்லையெனில், உங்கள் வாழ்வை நீங்கள் அபாயத்தை நோக்கி அழைத்துச் செல்கிறீர்கள்என அர்த்தம். 

உங்கள் மீது எளிமையாகதேசத்துரோக வழக்கோ அல்லது பல கடுமையான சட்டங்களோ புனையப்படலாம்; மற்றும் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் சிறைத் தண்டனை பெற வேண்டியிருக்கும். ஏன் நீங்கள் தூக்கில் கூட போடப்படலாம்.


கல்விக்கட்டண உயர்வை எதிர்த்துப் போராடியதால் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள் 66 பேர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. 
ஒரு வேளை நீங்கள் அப்சல் குரு அல்லதுயாகூப் மேமனை தூக்கிலிட்டது குறித்துப் பேசினாலோ அல்லது ஏபிவிபி குண்டர்களின் செயல்களைக் கண்டித்து ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களும், இடதுசாரி மாணவர் அமைப்புகளும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் போராடியதைப் போல் செய்தால் நீங்களும் ரோகித் வெமுலாவின் நிலைக்குத் தள்ளப்படலாம் அல்லது கன்னய்ய குமார், அனிர்பென் பட்டார்சார்யா மற்றும் உமர்காலித் ஆகியோரைப் போல் நீங்கள் பழிவாங்கப்படலாம்.

ஒருவேளை நீங்கள் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினாலோ, நிர்வாகத்தினை எதிர்த்து விமர்சித்தாலோ மாருதி சுசுகி தொழிலாளர்களைப் போல் நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஆயுள் தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம். ஒரு வேளை நீங்கள் அரசு நிலங்களை கையகப்படுத்துவதைப் பற்றி விமர்சித்தால் நீங்கள் மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படலாம்.

இஸ்லாமியர்களோ அல்லது இந்தஆட்சியின் கீழ்வாழும் மற்ற மதத்தவராகவோ இருந்தால் தேசவிரோதிகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் விளிக்கப்படுவார்கள்.

பஸ்தார் அல்லது நியாம்கிரி பழங்குடி மக்கள்வாழும் காடுகளை சட்டத்திற்கு விரோதமாக பெருமுதலாளிகள் ஆக்கிரமிப்பை எதிர்த்துப்போராடினால் அரசின் ரணம் மிகுந்த இரக்கமற்ற போர் அவர்கள் மீது தொடுக்கப்படும். 

அரசின் பாகாப்புப் படைகள் மனிதநேயமற்ற முறையில் அங்கு இருக்கும் பெண்களைபாலியல் வன்புணர்வு செய்து இளைஞர்களை இரக்கமேதுமில்லாமல் கொன்று தண்டனை கொடுப்பார்கள்.
ஒரு வேளை நீங்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட விரும்பினால், உங்களுக்கும் பேராசிரியர்கள் டாக்டர் பினாய்க் சென், சோனிசோரி, ஜி.என்.சாய்பாபா ஆகியோரின் நிலை ஏற்படலாம். 
பினாயக் சென்

பஸ்தார் கிராமத்தில் அரங்கேறிய மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரகடந்த டிசம்பர் மாதம் தெலுங்கானா ஜனநாயகமுன்னணி சார்பில் அனுப்பப்பட்ட ஏழுபேர் கொண்ட உண்மை அறியும் குழு, வழியிலேயே கைது செய்யப்பட்டது.

அவர்களுக்கு இன்னும் ஜாமீன் மறுக்கப்பட்டு சுக்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் காவல்துறையிடம் ஒரு சிறு கந்தைத்துணி அளவிற்கான ஆதாரங்கள் கூட இல்லை. இவையெல்லாம் தனித்த உதாரணங்கள் அல்ல, நம் நாட்டின் எல்லை முழுவதும் 

வியாபித்திருப்பவை.உண்மையில் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது என்றால், மக்கள் யாரிடம் பேச வேண்டும். எதைப் பேச வேண்டும்; எதை எங்கே சாப்பிட வேண்டும்; எங்கே நிற்க வேண்டும்; எங்கே உட்கார வேண்டும்; யாரிடம் அன்போடு இருக்கவேண்டும்; யாரை வெறுக்கவேண்டும் என கேடுகெட்ட ஒழுங்குமுறைச் சேவையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. 

இவ்வாறாக இந்துத்துவ கும்பல்கள் மக்கள் மீது போலிதேசியவெறியை கட்டவிழ்த்துக் குளிர்காய்வது முசோலியின் கருப்புச் சட்டைகளையும், ஹிட்லரின் பழுப்புச் சட்டைகளையும் மிகச்சரியாய் நினைவில் நிறுத்துகின்றன.

தற்போது இவர்கள் அளவுகடந்த உறவுகொண்டிருக்கும் இவர்களது மூதாதையர்களான விநாயக் தாமோதர் சர்வார்க்கர், பாலகிருஷ்ண சிவ்ராம் மூஞ்சே, மாதவ் சதாசிவ்கோல்வாக்கர் ஆகியோர் முசோலினி மற்றும் ஹிட்லரின் வழிவந்தவர்களே. 

இவர்களின் மூல அமைப்பான ஆர்எஸ்எஸ் 1923இல் இத்தாலி சாம்ராஜ்ஜியத்தில் தேசிய பாசிசக்கட்சியினால் உருவாக்கப்பட்ட துணை இராணுவப் படையினுடன் ஒத்துப் போவதைநம்மால் காண முடியும். 
ஆனந்த் டெல்டும்டே


இவர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு சர்வாதிகார ஆட்சியைப் போன்ற முன்மாதிரி உருவாக்குவதற்காகத்தான் இவ்வளவு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நிச்சயம் ‘‘ஒரே மக்கள்;ஒரே சாம்ராஜ்ஜியம்; ஒரே மன்னன்’’ என்பதாகத்தான் இருக்கும்.இந்தியா இன்னும் தனது ஜனநாயகத் தன்மையை விடாமல் உலகின் மிகப்பெரிய நடைமுறையில் இருக்கும் ஜனநாயக நாடாகஇருப்பதற்குக் காரணம் இன்னும் இடைவிடாமல் தேர்தல்களை நடத்திக் கொண்டிருப்பதுதான்.

இருப்பினும் சடங்கு முறைகளும்பணபலமும், ஆள்பலமும், மக்கள் உணர்வுகளுக்கு குறைந்த அளவில் மதிப்பளிக்கும் நிலையும் போன்ற அம்சங்கள் தான் நிலைத்துநிற்பதற்கான மாயை ஜனநாயகத்தில் இருக்கிறது. 

ஒட்டுமொத்த கட்டமைப்பையும் கட்டிக்காக்காமல் ஆளுக்கின்ற வர்க்கத்தினர் தங்களின் சதிகளாலும், துரோகங்களாலும் அதை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். 
இந்த மாயைகளை எல்லாம் பலவீனப்படுத்திட டாக்டர் அம்பேத்கரை நசுக்கப்பட்ட மக்களின் தேவதூதனாக, தலைமைச் சிற்பியாக வெளிப்படுத்திட வேண்டும். இரண்டாண்டுகளுக்குள் அவரால்உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டத்தை தெளிவாய் உணராமல், ஏற்கமறுக்கும் வெற்று நம்பிக்கை வார்த்தைகளால் உளறிக் கொண்டிருப்பதை எதையும் செய்யாது.

அம்பேத்கர் எச்சரிப்பதெல்லாம் இந்தியஅரசியலமைப்புச் சட்டம் வெறுமனே அரசியல் ஜனநாயகத்தை மட்டுமல்லாமல் சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகத்தையும் உள்ளடக்கியுள்ளது. 
முன்னது இல்லாமல் பின்னது இல்லை என்பதே.வெறும் தார்மீக ஜனநாயகம் என்பது பணமூட்டைகளைக் கொண்டோருக்கு மட்டுமே உண்மையானதாக இருக்கும். 

எனவே இதுவே இதை மாற்றுவதற்கு மிகச்சரியான நேரம்.
இல்லையெனில் இது திரட்டி மையப்படுத்தப்பட்டு, கேட்க ஆளில்லா ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும், அதுவே சர்வாதிகாரம்.

இந்தக் கட்டுரையின் தலைப்பில் காணப்படும் சொல்முரண்பாடே இன்றைய இந்தியாவின் நிலையை குறிப்பிடுகிறது என்பது வருத்தமான விஷயம்.
                                                                                                                                                                                          -ஆனந்த் டெல்டும்டே
நன்றி: இந்திய கலாச்சார மையம்
 தமிழில் : எஸ்.கார்த்திக்,
தீக்கதிர்,
=================================================================================================================================

ன்று,
ஆகஸ்ட்-05.
  • உலக  நண்பர்கள் தினம்
  • சுதந்திர தேவி சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)
  • புர்கினா பாசோ விடுதலை தினம்(1960)

  • ====================================================================================
முகநூல்  

ட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தருவோம் என்று சொன்னார்கள் வாக்கு #சாவடியை நோக்கி ஓடினேன்....
ஆதார் கட்டாயம் என்றார்கள் ஆதார் #மையத்தை நோக்கி ஓடினேன்.....
ஆதாரை #ரேசன் கார்டோடு இணைக்க சொன்னார்கள் 
அதற்காக ஓடினேன்.....
#வங்கி கணக்கோடு ஆதாரை இணைக்க சொன்னார்கள் அதற்காக ஓடினேன்...
#பான்கார்டோடு ஆதாரை இணைக்க சொன்னார்கள் அதற்காக ஓடினேன்...

#எரிவாயு இணைப்போடு ஆதாரை இணைக்க சொன்னார்கள் அதற்காக ஓடினேன்...
#உழைத்து கையில் வைத்திருந்த பணம் செல்லாது என்றார்கள் அதை மாற்ற வங்கிக்கு ஓடினேன்....
இப்படி... ஓடினேன் ஓடினேன்..... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..... கடைசியில், கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது, ரேஷன் கடை மூடப்படும் என்கிறது அரசு..

வாக்கு கேட்டு வந்த போது கூறிய எதையுமே அவர்கள் செய்யாமல், அதோடு இதை இணை, இதோடு அதை இணை என மக்களை பாடாய் படுத்துகிறது மத்திய பிஜேபி அரசு..

#சாமானிய மக்களின் வாழ்வாதரத்தை ஒழித்து பண #முதலைகளை காக்கும் இந்த அரசை ஒழித்துகட்ட வேண்டும்......

நாட்டின் #முதுகெலும்பான விவசாயத்தை காக்க தவறி, விவசாயிகளை #நாலாந்தரகுடிமக்களாக பாவிக்கும் இந்த #காவி கூட்டமும் அவர்களுக்கு விளக்கு பிடிக்கும்#அடிமை கூட்டமும் அடித்து விரட்டப்பட வேண்டும்........


                                                                                                                                அய்யாபிள்ளை முத்து

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?