கலவரம் செய்ய கூலி ரூ. 5 கோடிகள்.

உயர்கல்வி வாய்ப்பு  தடுக்கப்படுகிறது,

சாதியக் கட்டமைப்பில் குறிப்பிட்ட சமூகங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகத் தள்ளப்பட்டதில் ஒரு முக்கிய ஏற்பாடு கல்விப் பாதையை அடைத்ததுதான். 

வரலாற்றுப் போராட்டங்களின் ஒரு வெற்றியாக சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு சட்டப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்டது. 

அதன் பிறகு, அவர்களது பொருளாதார நிலையால் இந்தப் பாதை அடைபடக்கூடாது என்பதற்காக அரசாங்கமே கல்விஉதவித்தொகை வழங்குவதும் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.


இன்று தலித் சமூகங்களையும், பழங்குடிகளையும் சேர்ந்தோரில் ஒரு பகுதியினரேனும் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெற்று பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு இட ஒதுக்கீடும் உதவித்தொகை வழங்கலும்தான் காரணம். 

இந்நிலையில், சமூக நீதிப் போராட்டக் களமான தமிழகத்தில், தலித், பழங்குடிமாணவர்களுக்கான உயர் கல்வி உதவித்தொகை வெட்டப்பட்டுள்ள செய்தி வந்துள்ளது.
பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்டஉயர்கல்வி வாய்ப்புகள் கிடைத்த தலித்/பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை மூன்றிலொரு பங்காக வெட்டப்பட்டிருக்கிறது.

மருத்துவப்படிப்பில் ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட ரூ.12,50,000 வரையில் உதவித்தொகை கிடைத்து வந்தது. இவ்வாண்டுமுதல் ரூ.4,00,000 வரைதான் கிடைக்கும். பொறியியலில் 19,239 பேருக்கு ரூ.85,000 வரையில்கிடைத்தது, இனி ரூ.70,000 வரைதான்கிடைக்கும். 

இதர பிரிவுகளிலும் இப்படித்தான். 
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.கலந்தாய்வு அடிப்படையில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 
அரசுக் கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணமும் பிற கட்டணங்களும் பலமடங்கு அதிகம் என்பது யாவரும் அறிந்ததே.


ஏற்கெனவே, உதவித்தொகை அனுப்பப்படுவதில் காலதாமதமாவதால் பல மாணவர்கள் நிர்வாகங்களின் நெருக்கடிகளைத் தாங்க முடியாதவர்களாகக் கல்லூரிகளிலிருந்து வெளியேறுகிற துயரம் நடக்கிறது. 

முன்பு 10,000 வரை இருந்த தொழில்சார் உயர்படிப்புகளில் சேரும் தலித்/பழங்குடி மாணவர்கள் எண்ணிக்கை, இத்திட்டம் கொண்டவரப்பட்ட பிறகு 40,000 வரை அதிகரித்தது. 

நடப்புக் கல்வியாண்டில் உதவித் தொகை விரைவாக வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அண்மையில்தான் அறிவிக்கப்பட்டது. 
ஆனால், உதவித் தொகையை வெட்டுகிற ஆணைதான் விரைவாக வந்திருக்கிறது. 

தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவின் பின்னணியில், கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசு தனது பங்காகத் தரவேண்டிய ரூ.1,546 கோடியை வழங்காத அலட்சியமும் இருக்கிறது.

மோடி அரசுடன் மோதி அந்த நிதியை முழுமையாகப் பெறுவதற்கும், அது வரையில் சுமையை மாநில அரசே ஏற்பதற்கும் மாறாக, மாணவர்களை வஞ்சிப்பதா? 

முன்பு இம்மக்களின் கல்வி வாய்ப்பு நேரடியாக தடுக்கப்பட்டது. 

இப்போது உயர்கல்வி வாய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது என்றே காலம் பதிவுசெய்யும்.

 நீட் உள்ளிட்ட விளிம்பு நிலை மாணவர்களை வெளியேற்றுகிற தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவோர் கையாள வேண்டிய இன்னொரு தாக்குதல் இது.
===========================================================================================

கலவரம் செய்ய  ரூ. 5 கோடி கூலி

லாத்கார சாமியார் கைதையொட்டி அரியானா மாநிலத்தில் நடந்த கலவரங்களை நிகழ்த்த ஆசிரம நிர்வாகி ரூ. 5 கோடி கூலி கொடுத்ததாக எழுந்த புகாரின் மேல் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானா மாநிலத்தில் பெரும் கலவரம் நடந்தது. 
 அந்த கலவரத்தில் 38 பேர் கொல்லப் பட்டனர்.  
ஆசிரமம்.செயற்கை கோள் படம் 

சுமார் 260க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இது குறித்து  அரியானா மாநில காவல்துறை இயக்குனர் பி. எஸ். சந்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது :”கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்து காவல்துறை விசாரித்தது. 
 இந்த விசாரணையில்
 "கலவரத்தை நிகழ்த்த ஆசிரம நிர்வாகிகள் சம்கவுர் சிங் மற்றும் நயின் ஆகியோர் ரூ. 5 கோடி கலவரக்காரர்களுக்கு செலவுக்கு கொடுத்ததாக" 
அதிகாரப்பூர்வமாக குறிப்புகள்,கணக்குகள் கிடைத்துள்ளது.  
அம்பாலா நகரத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் இருந்து ரூ. 38 லட்சம் ரொக்க்கம் கிடைத்துள்ளது.  அவர்களிடம் இருந்து மொத்தப் பணமும் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என விசாரித்து வருகிறோம்.

புதன்கிழமை முதல்  ஆசிரம வளாகத்தை சுற்றி காவல் போடப்பட்டுள்ளது.  வெளியே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  இதற்கான அனுமதியை நாங்கள் அரசிடமும் நீதிமன்றத்திடமும் பெற்றுள்ளோம்.  வெள்ளிக்கிழமை அன்று நாங்கள் ஆசிரமத்துக்குள் சோதனை நடத்தப் போகிறோம்.  
இந்த சோதனைக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே எஸ் பவாரும் இருக்கிறார்.  
அவர் ஏற்கனவே செவ்வாய் அன்று ஆசிரமத்தின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டுள்ளார்.  ராணுவம், மற்றும் வெடிகுண்டு சோதனையாளர்களும் ஆசிரமத்தை சுற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தற்போது முழுமையான அமைதி நிலவுகிறது.  மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரமம் உள்ள சிர்சா நகர் முழுவதும் போலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது“ என தெரிவித்தார்.
ஆசிரமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான விபாசனா, “நாங்கள் அரசின் எந்த சோதனைக்கும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.  எங்களின் தற்காப்புக்காக வைத்திருந்த ஒன்றிரண்டு ஆயுதங்களையும் நாங்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம்.  
இந்த ஆசிரமத்தில் ஏதும் ஒளிவு மறைவு இல்லை” என கூறி உள்ளார்.
சண்டிகரில் இருந்து 260 கி மீ தூரத்தில் சிர்சா நகரில் அமைந்துள்ள தேரா சச்சா சவுதாவின் ஆசிரமம் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 
 சுமார் 100 ஏக்கர் பரப்பில் இரு அலுவலகக் கட்டிடங்கள் உள்ளே உள்ளன.  அது தவிர உள்ளே விளையாட்டு அரங்கம், மருத்துவமனை, ஒரு உல்லாச விடுதி, கடைகள், மற்றும் ராம் ரஹீம் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கும் பங்களாக்கள் ஆகியவையும் உள்ளன.  வெளியேற மறுத்து இன்னும் நூற்றுக்கணக்கான சீடர்கள் உள்ளே உள்ளனர்.
=========================================================================================
ன்று,
செப்டம்பர்-08.

  • உலக எழுத்தறிவு தினம்
  • உலக நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)
  • ஆசிய தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)
  • ==========================================================================================



     மத்திய பாதுகாப்புத்துறை அமைசசருக்கு இந்திய ராஜ ரிஷி பட்டம் சூட்டும் பொது எடுத்த படம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?