"நிதி"த் தீண்டாமை?

2014ஆம் ஆண்டின் இறுதியில், பிரதம மந்திரி நரேந்திர மோடிஅவர்கள் தன்னுடைய அரசாங்கத்தின் முதன்மை திட்டங்களில் ஒன்றாக அறிமுகப்படுத்திய பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை நாம் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. 

செங்கோட்டையில் இருந்துஅவர் ஆற்றிய உரையில், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளஇந்த ஒன்றரை கோடி மக்களின் கணக்குகள் அவர்களைஇந்திய நாட்டின் பொருளாதார நீரோடையில் இணைத்துவிடுவதற்கான முதல் படி என்றும், இந்திய பொருளாதார வரலாற்றில் மிகப் பெரிய குறிப்பிடத்தகுந்த வெற்றி இதுஎன்றும் குறிப்பிட்டார்.

 மேலும், அன்று அவர் ஆற்றிய உரையில் பொருளாதாரம் என்பது வறுமையை எதிர்த்துபோராடக்கூடிய போர்க்களத்தில் மிக முக்கியமான அலகு என்பதை நினைவுகூர்ந்து, கூடவே மகாத்மா காந்திதனது ஆயுள் காலத்தில் சமூகத்தில் நிலவிய தீண்டாமையை எதிர்த்துப் போராடியது போல், தன்னுடைய அரசாங்கம் இன்றைக்கு இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கும் ‘‘நிதித் தீண்டாமை”யை எதிர்த்துப் போராடுவதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் இத்தனை ஜன் தன் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன என்றும் மிகுந்த பெருமிதத்துடன் கூறினார். 

உலக கின்னஸ் புத்தகத்தில் கூட, இந்தியாவில் பிரதம மந்திரியின் ஜன் தன் பீம யோஜனா திட்டத்தின் கீழ் “நிதி உள்ளடக்கல்” திட்டத்தின் பிரச்சாரத்தின் கீழ், 23-29, ஆகஸ்ட்,2014 என்ற ஒரு வார காலக்கட்டத்திற்குள் 18,096,130 கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. 
கோர் பேங்கிங் சிஸ்டம் மூலமாக இதற்கான புள்ளி விவரங்கள் பெறப்பட்டன என்று குறிப்பிடப்பட்டது. இவற்றையெல்லாம் நாம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது.


நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘இதன் மூலம் ருபேடெபிட் கார்டு, கடன் வசதி, இன்சூரன்ஸ், பென்சன் போன்ற அனைத்து வசதிகளும் இதுகாறும் இந்திய பொருளாதார பாதையில் இணைக்கப்படாத பகுதியினர்க்கு வழங்கப்படும். 
அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கான மானியத் தொகையை எந்தவிதமான லீக்கேஜும் இல்லாமல், நேரடியாக அவர்களது கணக்குகளில் அரசாங்கம் சேர்த்துவிடும்.ஜன்தன்-ஆதார்-மொபைல்- ஜாம் (JAM - JanDhan-Aadhaar-Mobile) திட்டம்இதற்கு பெரிதும் உதவும்” என்று தங்கள் அரசாங்கத்தின்நோக்கம் குறித்துகுறிப்பிட்டிருந்தார். 

அதே நிதியமைச்சர்2015 துவக்கத்தில் பேசும்போது, “இந்திய நாட்டில் இதுவரைசென்று சேராத 25 கோடி குடும்பங்களில் 21 கோடிகுடும்பங்களை வங்கி ஊழியர்கள் சென்றடைந்துவிட்டனர். பாக்கியுள்ள 4 கோடி குடும்பங்களை ஏன் சென்றடையமுடியவில்லையென்றால், அவை அனைத்தும் இடதுசாரிஅல்லது தீவிரவாதப் பிடியின் கீழுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். 

ஆயினும் இந்தியாவின் பெரும்பகுதி இன்று வங்கிஅமைப்பின் கீழ் வந்துவிட்டது” என்று மிகப் பெருமையாக குறிப்பிட்டார். ஆனாலும், அவர் இந்த கணக்குகளில் 28 சதவீதமானவை மட்டுமே இயங்கும் கணக்குகளாக, ஏதோ சிறிது பணமுடைய கணக்குகளாக உள்ளனஎன்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது என்பதும் நமக்கு நினைவில் இல்லாமல் இல்லை. 

மற்றவற்றை இயங்குபவையாக மாற்ற அரசாங்கம் கூடிய விரைவில் நலப்பயன்களை இந்த கணக்குகளுக்கு மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

டிசம்பர் 2016அரசாங்க புள்ளி விவரம் ”ஜீரோ பேலன்ஸ்” அக்கவுண்டுகள் 24 சதவீதம் மட்டுமே என்று கூறியது. 
ஆனால், அதன்பிறகு, இதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த கணக்குகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் தரப்படவில்லை.


கடந்த வருடம் தி ஹிந்து பிசினஸ் லைன் ஏட்டுக்கு பேட்டியளித்த முன்னாள் கிராமப்புற அபிவிருத்தி அமைச்சர்ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் ஜன் தன் அக்கவுண்டுகளில் 40 சதவீதமானவை இரண்டாவது கணக்குகள் (டூப்ளிகேட் அக்கவுண்டுகள் என்பது ஜன் தன் அக்கவுண்ட் உள்ள ஒரு நபருக்கு இன்னொரு கணக்கிருக்கும்) என்று குறிப்பிட்டது நினைவிருக்கலாம். 

இன்னொரு முக்கிய விவாதப் பொருளாக அந்த நேரம் இருந்த இன்னொரு விஷயம், இந்த கணக்குகளை இயங்கு கணக்குகளாக மாற்ற வங்கிகளே அந்த கணக்குகளில் ரூ.1-ஐ போடுகின்றன என்பது. 2016 செப்டம்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஏடு இது குறித்து முதலில் செய்தியை வெளிக் கொணர்ந்தது. 

இரண்டு பொதுத்துறை வங்கிகள், இப்படிவங்கி அதிகாரிகள் செய்கின்றனர் என்பதை ஒப்புக் கொண்டன. 

அதன் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம், 18 பொதுத் துறை வங்கிகளில் உள்ள 1.05 கோடிகணக்குகளில் ரூ.1 டெப்பாசிட் செய்யப்பட்டது என்பதைசெய்தித் துறையின் ஆய்வு கண்டறிந்தது.

சமீபத்தில் செப்டம்பர் மாதம் எக்கனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி - ஏட்டில் ரிசர்வ் வங்கி ஊழியர் கல்லூரி மற்றும் ஐஐடி, கோரக்பூர்- ஐ சேர்ந்த 4 ஆய்வாளர்களின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 


இவர்கள் இந்தியாவின் தலைநகர் அருகில் 9 மாவட்டங்களில் 25 குடிசைப்பகுதிகளில் உள்ள 600 குடிசைவாசிகளிடம் ஆய்வு நடத்தினர். 
இந்த ஆய்வில், ஏழை எளிய மக்கள்வங்கி சேவையில் விருப்பமின்றி விலகி இருப்பதற்கு சில தடைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை அவர்களது வருமானம் மற்றும் வேலை தன்மையாகும். 

அரசுமிகப் பெரிய அளவில் ஜன் தன் யோஜனா என்று திட்டமிட்டபோதும், இவை பெரும் தடைகளாக இருக்கின்றன. இந்த தடைகளை நீக்க வேண்டுமென்றால், ஏழை எளியமக்களது வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களது வேலை தன்மைகளுக்கேற்ற வகையில் வங்கி சேவைகள் விதம் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். 

இவை மட்டுமே அவர்களையும் நிதி உள்ளடக்கத்திற்குள் கொண்டு வரும் என்ற உண்மை இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

உண்மை இவ்வாறிருக்க, ஆட்சியாளர்களோ தங்களது பிரதம மந்திரி ஜன் தன் பீம யோஜனா குறித்துபுளங்காகிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர். 

பிரதம மந்திரி ஜன் தன் பீம யோஜனா மூன்றாமாண்டு கொண்டாட்டத்தின் போது, நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலைத்தளத்தில் பிளாக் (க்ஷடடிப)ல், நிதி உள்ளடக்கத்தில் இது ஒரு மெய்யான புரட்சி என்று குறிப்பிடுகிறார். 

மேலும், ஜாம் (JAM) புரட்சியின் கீழ், கிட்டத்தட்ட52.4 கோடி ஆதார் நம்பர்கள் 73.62 கோடி கணக்குளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏழை எளிய மக்களும் மின்னணு பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது.இந்த மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 7 கோடி பணப்பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக ஏழை, எளிய மக்களால் அவர்களுடைய ஆதார் அடையாள அட்டையின் மூலமாக செய்யப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோடு நின்றுவிடவில்லை. 

மேலும் அவர், ”ஜாம் புரட்சியின் காரணமாக, இந்திய அரசாங்கம், இந்திய பொருளாதாரம் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுள்ளனர், ஏழை, எளிய மக்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பெரிய பெரிய அதிர்வுகளில் இருந்து எளிதில் வெளிவர இந்த நிதி உள்ளடக்கம் உதவும், குறைக்கப்பட்டுள்ள மானியச் சுமையால் அரசாங்கத்தின் நிதி நிலைமை உயர்வடையும், அரசாங்கம் தனது நிதியாதாரங்களை தன்னுடைய குடிமக்களுக்கு விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், லீக்கேஜ் இல்லாமலும் மாற்ற முடியும் என்பதால், இந்த அரசாங்கம் நெறிப்படுத்தப்பட்டதாக, பலம் மிக்கதாக இருக்கும். 

1பில்லியன் - 1பில்லியன் - 1பில்லியன் விஷன் விரைவில் எட்டப்படும். 
அதாவது 1பில்லியன் ஆதார் எண்கள் 1பில்லியன்வங்கி கணக்குகளுடனும் 1பில்லியன் மொபைல்போன்களுடனும் இணைக்கப்படும். 

இதை செய்து முடிக்கும்போது ஒட்டு மொத்த இந்தியாவும் நிதி மற்றும் டிஜிட்டல்இந்தியாவின் முக்கிய நீரோடையில் இணைந்துவிடும். 
ஜிஎஸ்டி ஒரு வரி, ஒரு சந்தை, ஒரு இந்தியா என்று உருவாக்கியது போல, பிரதம மந்திரி ஜன் தன் பீம யோஜனாவும்,ஜாம் (JAM) புரட்சியும் அனைத்து இந்தியர்களையும் ஒரு பொதுவான நிதி, பொருளாதார, டிஜிட்டல் வெளியில்இணைத்துவிடும். 

இந்த புரட்சி சமூகப் புரட்சிக்கு சற்றும்குறைந்ததல்ல” என்று அவர் குறிப்பிடுகிறார். 
இந்தியாவின் உண்மை நிலைமை வேறாக இருக்க, இப்படி வேறோர்உலகில் ஆட்சியாளர்கள் சஞ்சரிப்பதற்கு இதைவிட தெளிவான எடுத்துக்காட்டு வேறொன்றும் இருக்க முடியாது.

அக் ஷய் தேஷ்மானேநன்றி : அக்டோபர் 27,2017 ஃப்ரண்ட் லைன் தமிழில் சுருக்கி: ஆர்.எஸ். செண்பகம்
கந்துவட்டியை இப்படித்தான் 
 கட்டுப்படுத்தியது கேரளா...

கந்துவட்டித்  தொல்லை, தமிழகத்தில் பல காலமாக  இருக்கின்றது. அவ்வப்போது அரசு  நடவடிக்கையெடுத்தால் சற்று அடங்கியது போல இருந்தாலும், கண்டுகொள்ளாத அரசுகள்  அமையும்பொழுது, முழுமையாகத் தலையெடுக்கும்.

 கடன் வாங்கியவர்கள்  பணம் செலுத்த  முடியவில்லை என்றால் மிரட்டுவது, துன்புறுத்துவது மற்றும் அவர்களின் உரிமையில் உள்ள  வாகனம், சொத்து, வீடு, நகை போன்றவற்றை அபகரிப்பது என்று ரவுடித்தனம்  செய்துக்கொண்டு இருக்கிறார்கள். 
இதனைத்  தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் தற்கொலை  எனும் முடிவை தேடிக்கொள்கின்றனர்.அவ்வாறுதான் நெல்லையில் கந்து வட்டி தொல்லை  காரணமாக ஒரு குடும்பமே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தனர். 

இந்த செய்தி  தமிழகத்தில் உள்ள அனைவரையும் கந்து வட்டியின் கொடுமைகளை திரும்பி பார்க்க  செய்துள்ளது. அரசும் அதிகாரிகளும் கந்து வட்டியை முழுமையாக ஒழிப்பதாகக்  கூறிவருகின்றனர். 



இதே போன்று  மே மாதம் 2014 ஆம் ஆண்டில் கேரளாவில் கந்து வட்டி கொடுமையால், ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இதனால் கேரள  அரசாங்கம் கந்து வட்டியையும் மற்றும் 'பிளேட் மாஃபியா'வை ஒழிக்க 'ஆப்பரேஷன்  குபேரா'  என்றொரு திட்டத்தை கொண்டு வந்தது. 

பிறகு மக்களுக்கு கந்து வட்டி விடுபவர்கள்,தொல்லை  கொடுப்பவர்கள் என்று அனைவரையும் கைது செய்தது. நம்மூர்களில் 'இன்கம் டாக்ஸ்' ரெய்டு  அடிக்கடி நடப்பது போன்று, குபேரா குழு ரெய்டு நடத்தியுள்ளது. 

கந்து வட்டிக் கொடுமைகள்  குறித்து மக்கள் புகார் தெரிவிக்க அவசர உதவி தொலைபேசி எண்ணும் அறிவித்தது. 
அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா இதனை செயல்படுத்தினார். 


  2014  ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு  வரை இந்த 'ஆப்பரேஷன்  குபேரா' குழு 14160 ரெய்டுகள்,  3200 கேஸ்கள் அதில் 2594 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 

2459 நபர்களுக்கு 'சார்ஜ் ஷீட்'  போடப்பட்டுள்ளது, 1373 ரிமான்ட்கள் மற்றும் 7 காவல்துறையினர்  மீது  ஒழுங்கு நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 4.5 கோடி பணம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 


'ஆப்பரேஷன்  ஷைலாக்' 



'கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம்' போன்ற மாவட்டங்களில், இந்த 'ஆப்பரேஷன்  குபேரா'  குழுவால் மட்டும்  சமாளிக்க முடியாமல்  மேற்கொண்டு 'ஆப்பரேஷன்  ஷைலாக்' மற்றும் 'ஆப்பரேஷன்  ஆக்டொபஸ்' என்று மேலும் இரண்டு நடவடிக்கைகளைக்  கொண்டு வந்து கந்துவட்டிக்காரர்கள் கடன் வாங்கியவர்களிடம் சட்டவிரோதமாக வாங்கி வைத்த நகைகள், பிராமிஸரி நோட்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
 இதன் மூலம்  கந்து  வட்டியை முன்பை விட பல மடங்கு குறைத்தனர். ஒரு கட்டத்தில் கேரளாவில் மாதம் சுமார் 2000 கோடி அளவுக்கு கந்து வட்டிக்காரர்கள் சாதாரண பொதுமக்களிடம் வட்டியாக சம்பாரித்ததாக கூறப்படுகிறது.
 2016 ஆண்டு மே மாதம் கேரள முதல்வராக  பொறுப்பேற்ற  'பினராயி விஜயன்  ஆப்பரேஷன்  குபேராவை சில மாற்றங்களுடன்  செயல்படுத்தி  வருகிறார்.
 அங்கு  கந்துவட்டி முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று  கூறமுடியாவிட்டாலும், வெளிப்படையாக இல்லாமல் ஒரு பயத்துக்குள் , கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. 
                                                                                                                                              நன்றி:நக்கீரன் ,
======================================================================================
ன்று,
நவம்பர்-01.
  • அல்ஜீரியா தேசிய தினம்
  • கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது ( 1956)
  • இந்தியாவில் மதராஸ்,கேரளம்,மைசூர் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
  • நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது(1956)
  • மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?