தற்போது முதலிடத்தில் இந்தியா

 உலகிலேயே இந்தியா தற்போது காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு  தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் காற்று மாசுபாடு தொடர்பான ஆய்வை நடத்தியது. 
அதில், காற்று மாசுபாட்டில் உலக நாடுகளில்  இந்தியாதான்  முதலிடத்தில் உள்ளது என்று  கண்டறியப்பட்டுள்ளது.

 கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலகிலேயே இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்த கந்தக வாயு 
சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும், பெரும் கேடு விளைவிக்கக் கூடிய நச்சு வாயு.

கடந்த 2007-ம் ஆண்டு முதல், அதிகளவில் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றுவதில், முதலிடத்தில் இருந்த சீனா, தற்போது அதை 75 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 

ஆனால், அதே நேரத்தில் இந்தியாவின் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றம், 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, தற்போது உலகளவில் முதலிடத்தில் உள்ளது.ஸ்டெர்லைட் போன்ற உருக்காலைகள் இந்த கந்தக அமிலத்தைத்தான் தாமிரத் தாது மணலை உருக்கி தாமிரத்தை பிரிக்க பயன்படுத்துகிறது.
வளர்ந்த நாடுகள் இது போன்ற மனிதர்களுக்கு ஆபத்தான ரசாயன ஆலைகளை வளர் நாடுகளில் ஆரம்பித்து லாபத்தை மட்டும் தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்று விட்டு,ஆபத்தை இந்தியா போன்ற நாடுகளுக்கு விட்டு விடுகின்றன.

இப்போது டெல்லியில் உண்டாக்குகின்ற காற்று மாசுக்கு பக்கத்து மாநிலங்களில் விவசாய கழிவுகளை  எரிப்பதால் மட்டும் உண்டாகவில்லை.மேற்காசிய நாடுகளின் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையும் முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. 
நிலக்கரியின் எடையில் சுமார் 3 சதவீதம் அளவுக்கு கந்தகம் உள்ள நிலையில், அதை அதிகம் பயன்படுத்துவதால், காற்று கடுமையாக மாசடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தக டை-ஆக்சைடு நச்சு காரணமாக, இந்தியாவிலும் சீனாவிலும் பொதுமக்களின் ஆயுட்காலம் வெகுவாக குறைவதாகவும், ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 3 கோடியே 30 லட்சம் பேரும், சீனாவில் சுமார் 9 கோடியே 90 லட்சம் பேரும் கந்தக டை-ஆக்சைடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

மேரிலேண்ட் பல்கலைக்கழக வெளியிட்ட காற்று மாசுபாட்டின் ஆய்வின் முடிவுகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி கடும் வீழ்ச்சி

மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு
 வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகமோசமான முறையில் 14 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசத்தின் அடிப்படையில் வர்த்தகப் பற்றாக்குறை அளவிடப்படுகிறது. 

அந்த வகையில் கடந்தசெப்டம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக் குறை 8.98 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
 ஆனால், கடந்த அக்டோபரில் ஒரே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 14 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இறக்குமதியில் பெரிதாக வித்தியாசம் இல்லையானாலும், ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவே வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது.

இந்தியாவின் இறக்குமதி 7.6 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், ஏற்றுமதி 1.2 சதவிகிதம் சரிந்துள்ளது.‘2016-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 23,360.61 மில்லியன் டாலராக இருந்தது. 

ஆனால், 2017 அக்டோபரில் அதன் மதிப்பு 23,098.18 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. 
அதாவது ஏற்றுமதியில் 1.12 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் பிளாஸ்டிக் மற்றும் லினோலியம் பொருட்கள் அதிகபட்சமாக 24.5 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளன. 
அதைத் தொடர்ந்து ரசாயனம் (22.3 சதவிகிதம்), பெட்ரோலியப் பொருட்கள் (14.7 சதவிகிதம்), பொறியியல் சாதனங்கள் (11.7 சதவிகிதம்), கடல் உணவுகள் (8.52 சதவிகிதம்) அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

ஆனால், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 39.2 சதவிகிதம் அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய ஏற்றுமதியில் எப்போதுமே ஜவுளிக்கு முக்கிய இடம் உண்டு.
ஆனால், அதில் தற்போது இந்தியா சரிவை சந்தித்துள்ளது. 

இதற்கு அடுத்ததாக நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி 24.5 சதவிகிதமும், மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி 8.8 சதவிகிதமும் சரிவைக் கண்டுள்ளன.இறக்குமதியைப் பொறுத்தவரை, முந்தைய 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு மந்தமான வளர்ச்சியே பதிவாகி இருந்தாலும், இறக்குமதி அதிகரிப்பு பொதுவாக வரவேற்கத்தக்கது அல்ல. 

அந்த வகையில், 2016 அக்டோபரில் 34,495.09 மில்லியன் டாலராக இருந்த நாட்டின் இறக்குமதி, 2017 அக்டோபரில் 37,117.01 மில்லியன் டாலராக 7.6 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக நிலக்கரி இறக்குமதி, கடந்த ஆண்டை விட 66.3 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. 
அதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் 27.9 சத விகிதமும், ரசாயனம் 30.5 சதவிகிதமும், எந்திரங்கள் 17.4 சதவிகிதமும், மின்னணுசாதனங்கள் 7 சதவிகிதமும் அதிகரித் துள்ளது.

இதன் அடிப்படையிலேயே, ஏற்று மதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை, செப்டம்பர் மாதத்தில் 8.98 பில்லியன் டாலராக இருந்தது, அக்டோபர் மாதத்தில் 14 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
========================================================================================
ன்று,
நவம்பர்-18.

  • ஓமன் தேசிய தினம்
  • புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறக்கப்பட்டது(1626)
  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம்(1936)
  • அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைப்பேசி விற்பனைக்கு வந்தது(1963)
  • தென்னாப்பிரிக்காவில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது(1993)
=========================================================================================

இதயமே ,இதயமே ,
தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, புகைபிடித்தல், மது அருந்துவது , நீரிழிவு நோய் உள்ளிட்ட பல காரணங்களால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் கட்டுப்படுத்தப்படுவதால் இதயநோய் பாதிப்பு ஏற்படுகிறது. 
இந்நிலையில் கடந்த 2016ம்ஆண்டு மட்டும் இதய நோயால் 17.8 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். 1900ம் ஆண்டு முதல் தற்போதுவரையான காலகட்டத்தில் 104 சதவிகிதம் அதிகரித்துள்ளது   என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து லாண்செட் என்ற மருத்துவ இதழில் நாட்டில் மாநில அளவிலான நோய்களில் அதிக சவால் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக இதயநோய் உள்ளது என்று சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீடு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், இந்திய பொது சுகாதார மையம் மற்றும் சுகாதார மதிப்பீட்டு மையம் ஆகியமை இணைந்து நடத்திய ஆய்வில் தெரயவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக  ஒரு லட்சம் பேரில் 3062 பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பஞ்சாப்பில் 5 ஆயிரத்து 756 பேரும் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து  788 பேரும் அரியானாவில் 4 ஆயிரத்து 244 பேரும் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் 4023 பேரும், மகாராஷ்டிராவில் 3658 பேரும், கர்நாடகாவில் 3892 பேரும் . குஜராத்தில் 3736 பேரும் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒரு லட்சம் பேரில் 1592 பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டள்ளனர். 
மேலும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றம் சட்டிஸ்கர் போன் மாநிலங்களில் சராசரியாக 2383பேர் இதயநோய் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?