வெண்மணியின் உண்மைகளை மூடி மறைத்த பத்திரிகைகள்!

கீழத்தஞ்சை என்று அழைக்கப்பட்ட நாகை,திருவாரூர் மாவட்டங்கள் வர்க்கப்போராட்டத்தையும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்து நடத்திய மண். 
இதன் மூலம் பல்வேறு வெற்றிகளைச் செங்கொடி இயக்கத்தின் கீழ் நிகழ்த்திக் காட்டிய மண்.

கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தது. நாகை பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கும், மிட்டா மிராசுகளுக்கும் மைனர் என்கிற பட்டம் உண்டு. 

கீழப்பிடாகை மைனர், ஆய்மழைமைனர், ஆவராணி மைனர், கருங்கண்ணி மைனர் - இப்படி மைனர் என்று அழைக்கிற நிலப்பிரபுக்கள் ஏராளம். 

இதே போல் பெரும் பண்ணைகளும் உண்டு. 


வலிவலம் தேசிகர் பண்ணை, அய்வநல்லூர், செல்லூர் போன்ற பகுதிகளில் சிக்கல் கோவிலுக்குச் சொந்தமான பண்ணை, பெருங்கடம்பனூரில் சூரியமூர்த்தி செட்டியார் பண்ணை, மஞ்சக் கொல்லையில் சம்பந்தமூர்த்தி முதலியார் பண்ணை, ராஜகோபால் முதலியார் பண்ணை, திருநாவுக்கரசு முதலியார் பண்ணை, ஆய்மழை எஸ்.எஸ்.ஆர். ராமநாத தேவர் பண்ணை, வடவூர் மற்றும் தலையாமழை கிராமங்களில் ஏ.எம்.பி. செட்டியார் பண்ணை, புதுச்சேரியில் வீரப்ப செட்டி பண்ணை - இப்படி எண்ணற்ற பண்ணைகள் இருந்தன. 

விவசாயத் தொழிலாளர்களை இவர்கள் கொடுமைப்படுத்தினர், நெருக்கடிக்குள்ளாக்கினர்.

இத்தகைய நிலப்பிரபுக்களின் கொடுமைகளி லிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் தங்களைத் தற்காத்துக்கொள்ள தங்களுக்கு ஒரு வலுவான அமைப்பு தேவை என்பதை உணர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் நாகை மாவட்டத்தில் அனேகமாக எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியின்கீழ் வலுமிக்க இயக்கமாக ஒன்று திரண்டனர். 

செங்கொடியின் கீழ் திரண்ட விவசாயத் தொழிலாளர்களது இயக்கத்தின் வேகத்தைக் கண்ட நிலப்பிரபுக்கள், பழையபடியே விவசாயத் தொழிலாளர்களை அடக்கி ஆளவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும், தாங்களும் ஓர் அமைப்பை உருவாக்கினர். 

ஆய்மழை மைனர் எஸ்.எஸ்.ஆர். ராமநாத தேவரைத் தலைவராகக்கொண்டு “ நெல் உற்பத்தியாளர் சங்கம் ” என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கினர். 

இதன் தொடக்க விழாவை நாகையில் நடத்தினர். அந்த விழாவில் ஆய்மழை மைனருக்கு ஒரு ஜீப் வழங்க நடிகர் சிவாஜி கணேசனை அந்த விழாவுக்கு அழைத்தனர். அதன் சாவியை ஆய்மழை மைனரிடம் சிவாஜி கணேசன் அளித்தார்.

 நெல் உற்பத்தியாளர்களின் ஒட்டுமொத்த திட்டமும், கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் கீழ் திரண்டிருக்கிற விவசாயத் தொழிலாளர்களையும் ஒடுக்குவதுதான். 
நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆய்மழை மைனர் ஒரு குட்டி சாம்ராஜியத்தையே நடத்தி வந்தார். போலீஸ் கூட அவரைக் கேட்காமல் அந்த ஊருக்குள் நுழைய முடியாது. அவர் வைத்ததுதான் சட்டம். 
இப்படிப்பட்டவரின் தலைமையில்தான் நிலப்பிரபுக்கள் சங்கம் துவக்கினர்.

1968 ஆம் ஆண்டு வாக்கில்தான் கீழத்தஞ்சை முழுவதும் விவசாயத் தொழிலாளர்களின் அறுவடைக் கூலி உயர்வுக்கான போராட்டம் காட்டுத் தீ போல பரவியது. 

விவசாயத் தொழிலாளர் இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. செங்கொடியின் கீழ் வலுவாகத் திரண்டனர். நிலப்பிரபுக்களும் தங்களின் பலம் முழுவதையும் ஒருங்கிணைத்து ஒன்று திரண்டனர். 
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், காவல்துறையும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பூசலாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்என்ற ஒரு நிலப்பிரபு இருந்தார். 


மிகவும் கிராதகமான ஆள். ஒரு முறை அவர் என்ன செய்தார்என்றால் “செங்கொடி சங்கத்துக்காரனுக்கு வேலை கொடுக்காதே; வெளியூர் ஆட்களை இறக்குமதி செய்துவிவசாய வேலைகளைச் செய்” என்று ஊரில் உள்ள மற்ற நிலப்பிரபுக்களுக்கு தானே தப்பு அடித்துக்கொண்டு போய் அறிவித்தார். 

இவ்வாறு நிலப்பிரபுக்கள் களத்தில் நேரடியாக இறங்கி விவசாயத்தொழிலாளர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டனர். இச்சூழலில்தான் பூந்தாழங்குடி என்கிற கிராமத்தில் கூலி உயர்வுக்கான போராட்டத்தில் பக்கிரிசாமி என்ற விவசாயத் தொழிலாளி காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதைத்தான் “கூலி கேட்டான்அத்தான் குண்டடிப்பட்டு செத்தான்” என்று கலைஞர் கருணாநிதி தனக்கே உரிய எதுகை மோனையோடு பேசிவந்தார்.

வெண்மணி பயங்கரத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக பார்க்கக் கூடாது. 

1963 ஆம் ஆண்டுக்குப் பின் நாகப்பட்டினம் பகுதியிலே வளர்ந்து வந்த போராட்டச் சூழலின் உச்சக்கட்டந்தான் வெண்மணி நிகழ்வு. அந்த காலக்கட்டத்தின் போராட்டக்களத்தில் நிலப்பிரபுக்களின் திட்டமிட்ட தாக்குதலும், அதை முறியடிக்க விவசாயத் தொழிலாளர்களின் தற்காப்பு நடவடிக்கை களும் என்கிற பதற்றமான சூழல் கீழத்தஞ்சையிலே நிலவியது. 

ஆய்மழை தங்கவேல், சிக்கல் பக்கிரிசாமி,இரிஞ்சியூர் சின்னப்பிள்ளை, கேக்கரை இராமச்சந்திரன் - இப்படிப் பலரும் நிலப்பிரபுக்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

விவசாயத் தொழிலாளர்களின் குடிசைகள் கொளுத்தப்பட்டன. நிலப்பிரபுக்கள் விவசாயத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட காலித்தனங்களும், கொடுமைகளும் எண்ணிலடங்கா.

இப்படிப்பட்ட காலக்கட்டத்தில்தான் ஆய்மழை தேவரின் கையிலிருந்த நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பதவி நிலப்பிரபுத்துவ ஒடுக்கு முறைகளைக் கற்றுத் தேர்ந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின்கைக்கு வருகிறது. 

எங்கெல்லாம் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் நேரடியாக அடியாட்களுடன் சென்று கோபாலகிருஷ்ண நாயுடு கலவரம் செய்வான். அவனே தாக்குதலில் ஈடுபட்டு ரௌடித்தனம் செய்வான். 

இவன்தலைமை தாங்கி நிகழ்த்தியதுதான் 1968 டிசம்பர்25 ல் 44 தலித் விவசாயத்தொழிலாளிகள் உயிரோடு ஒரு சிறிய குடிசையில் வைத்துக்கொளுத்தப்பட்ட கொடிய சம்பவம். 

வெண்மணி கோர நிகழ்வுக்கு பின் அங்கே பத்திரிகையாளராக சென்ற நமது முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் மாதர் சங்க முன்னோடியுமான தோழர் மைதிலி சிவராமன் எழுதுகிறார்:“அது ஒரு மயான பூமியைப் போல காட்சியளித்தது. 


இறந்துபோன உடல்கள் வலி தெரியாமல் தாங்கள் எரிக்கப்படும் முடிவை எதிர்பார்க்கும் சாதாரண மயான பூமி அல்ல; பச்சிளமும், பால்யமும், அரவணைக்கும் தாய்மையும், கூச்சப்படும் இளமையும், மரண வேதனையில், நம்பிக்கைச் சோர்வில், கொடூரமான முடிவை எட்டிய மரண பூமி அது. 

மிகப்பல மண்வீடுகள் தரைமட்டமாகி இருந்தன. மற்றவை அழிக்கப்பட்டிருந்தன. 
உடைந்த மண்பாண்டங்களும், தூளான கண்ணாடி வளையல்களும் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. எரிந்து கிடந்த ஒரு குடிசையின் முன் வாடி வதங்கிப்போன ஒரு நாய் மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தது. 

இன்னொரு நாய் தரையைமுகர்ந்து முகர்ந்து பார்த்து அழுது கொண்டே இருந்தது.
பலவீனமான முனகல்கள் ஆங்காங்கே காதில் விழுந்தன. ஒரு சில தாய்மார்களும், குழந்தைகளும் ஏதோ காணாமல் போய்விட்டவர்கள் போல் காட்சியளித்தனர். 

யாருமே அறிந்திராத ஒரு அரிஜன கிராமமாக இதுவரை இருந்தது. திடீரென்று அது நாட்டின் கவனத்தின் மையத்திற்கு வந்துவிட்டது. 

கூலி உயர்வுக்காகவும், செங்கொடியைக் காப்பாற்றுவதற்காகவும் 44 பேர் வெந்தனலில் வெந்து சாம்பலானார்கள்”- வெண்மணி சம்பவத்திற்கு பின் நமது நாட்டின் மிகப்பெரிய எழுத்து ஊடகங்கள் எப்படி எழுதின தெரியுமா? 

1968 டிசம்பர் 27 மெயில் பத்திரிகை தனது தலையங்கத்தில் எழுதியது: “ குடிசைகளுக்கு தீ வைத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாயிகள்.

                        வெண்மணியில் நேரடியாக ஆய்வு செய்யச்சென்ற பத்திரிகையாளரும், மாதர் சங்க முன்னோடியுமான தோழர் மைதிலி சிவராமன். 
                                                                                                                                  கட்டுரையாளர்  நாகை மாலி
இந்த தீ வைப்பில் மாண்ட இடது கம்யூனிஸ்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், பதிலுக்கு தாக்கப்படுவோம் என்று பயந்து ஒரு சிறிய குடிசைக்குள் தஞ்சம் புகுந்தனர்.

” என்று கையும் மனதும் நடுக்கமின்றி எழுதியது.தாக்கியவர் யார்? 
தாக்கப்பட்டவர் யார்? என புரிந்துகொள்ளாமல் தனது வர்க்கப் பாசத்தைக் காட்டியது மெயில் பத்திரிகை.

வெண்மணி கோர சம்பவத்திற்கும், நிலப்பிரபுக் களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், மார்க்சிஸ்ட் தொழிலாளர்களுக்கும், குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய வந்த தொழிலாளர்களுக்கும் இடையேநடந்த ஒரு சண்டையைப் போலவும், இதை அப்பாவி களான நிலப்பிரபுக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர் எனவும் சில பத்திரிகைகள் எழுதின.

1968 டிசம்பர் 28 ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒன்று மட்டுமே போலீஸ் ஐ.ஜி கூறியதாகஒரு செய்தியை வெளியிட்டது.
“அதாவது இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளின் சங்கத்திலிருந்து விவசாயிகளைப் பிரித்தெடுத்து அவர்களை விசுவாசமான தொழிலாளர்களாக மாற்று வதற்காக நாகப்பட்டினம் நெல் உற்பத்தியாளர் சங்கம்மேற்கொண்ட முயற்சியினால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும், கூலிப் பிரச்சனையால் இது நிகழ வில்லை என்றும் ஐ.ஜி தெரிவித்தார்” என எழுதியது. 

ஆனால் இந்த செய்தியை வேறு எந்த பத்திரிகைகளும் எழுதவில்லை. 

சில பத்திரிகைகள் வேறுவகையான கட்டுக் கதைகளையும் எழுதின: “ஏற்கெனவே ஒப்புக்கொண்ட விவசாயக் கூலி ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் தொழி லாளிகள் சீர்குலைக்க முயன்றதால்தான் இந்த இரத்தம் சிந்தல் ஏற்பட்டது” என உண்மை நிகழ்வைமூடி மறைத்தன.

 படிப்பவர்களை வேண்டுமென்றே திசை திருப்பும் முயற்சியில் பத்திரிகைகள் ஈடுபட்டன.கூலி உயர்வுக்கான ஒப்பந்தங்களை மீறியவர்கள் நிலப்பிரபுக்களே என்பதுதான் உண்மை வரலாறு.1968 ஜனவரியில் மாவட்ட ஆட்சியர் முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி கூலி அளவை சிறிது உயர்த்தி அறிவித்தார். 


நெல் உற்பத்தியாளர் சங்கம் இதைஏற்றுக்கொள்ளாமல் என்ன சொன்னார்கள் தெரியுமா? 
“கலெக்டர் ஒருதலைபட்சமாக கூலி உயர்வை நிர்ணயித்தால் அதை எதிர்த்து நாங்கள் சம்பா அறுவடை செய்ய மாட்டோம் ” என்றனர்.


ஒப்பந்தங்களை எல்லாம் மீறியவர்கள் நிலப்பிரபுக்களே என்பதை வரலாற்றை ஆய்வு செய்தால் புரிந்துகொள்ள முடியும். நிலச்சுவான்தார்கள் இப்படி நடந்துகொண்டதை ஒரு பத்திரிகை கூட எழுதாமல் மௌனம் காத்தது ஏன்? புரிந்துகொள்வது கடினமல்ல. 

வெண்மணி கோர நிகழ்வுக்குப் பின்னரும்கூட கீழத்தஞ்சையின் நிலவுடைமையாளர்களுக்கும், நெல்மணியை உற்பத்தி செய்ய பாடுபடும் தொழி லாளர்களுக்கும் இடையே உள்ள உறவுகளையும், முரண்பாடுகளையும் எழுதிய பத்திரிகைகள் எத்தனை?

காலமெல்லாம் பண்ணையார்களின் நிலத்தில்உழைத்து ஓட்டாண்டியாகிப் போன அந்த பண்ணை யடிமைக்கு, தான் குடியிருக்கும் குடிசை நிலம்கூட தனக்குச் சொந்தமில்லை; அது பண்ணையாருக்குச் சொந்தமானது என்பதை எத்தனை பத்திரிகைகள் புரிந்துகொண்டன? 

தொழிலாளிகளையும், சிறுவிவசாயிகளையும் ஒன்றுதிரட்டி ஓர் அமைப்பாகக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியைத் தங்கள் பிரதான எதிரிகளாக நிலப்பிரபுக்கள் பார்த்தார்கள். 

தொழிலாளிகளை, அவனவனை அவனவன் இடத்தில்வைக்க வேண்டுமானால் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியை அடக்கியாக வேண்டும் என நிலப்பிரபுக்கள் கனவு கண்டார்கள். இதனுடைய ஓர் உச்சக்கட்ட செயல்தான் வெண்மணியில் நிலப்பிரபுக்கள் நிகழ்த்திய கோரப் படுகொலை. 

அடிப்படை உண்மைகளைத் தொட்டுப்பார்க்காமல், பல செய்தி ஏடுகள், மணலில் தலை புதைந்திருக்கும் நெருப்புக் கோழிகளைப் போலவே வெண்மணி நிகழ்வை மனம் போன போக்கில் கற்பனைவளத்தோடு உண்மையைத் சிதைத்து சித்தரித்தன. 

அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவா வெண்மணிகோர கொலை நடந்தது? இல்லை! 
நிலவுடைமை யாளர்கள் மிக அபாயகரமாக பார்த்தது செங்கொடிசங்கத்தையும், அது நேற்றுவரை அடிமையாயிருந்தவர் களை இன்று தலை நிமிர்த்தி, கரம் உயர்த்தி, உரிமைக் குரல் கொடுக்கும் மனிதனாக மாற்றியதையும்தான்.

வீரத்தின், தியாகத்தின், வர்க்க உணர்வின் உச்சக்கட்டம் வெண்மணித் தியாகம். அத்தியாகிகள் நம் உணர்வுகளை இன்னும் உரத்து முழங்குகிறார்கள்:‘வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டும் வருகிறோம்;வெங்கொடுமைத் தீயைக் கையில் ஏந்தி வருகிறோம்
                                                                                                                  கட்டுரையாளர்  நாகை மாலி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்                                                              
====================================================================================
ன்று,
டிசம்பர்-25.

  • ஆன்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார்(1741)
  • பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னா பிறந்த தினம்(1876)
  • இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம்(1924)
  • சீன குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது(1947)
  • ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இறந்த தினம்(1977)
====================================================================================
தேர்தல்(ஆணையத்தின்) படு தோல்வி.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதெல்லாம் ஓடி மறைந்து விட்ட காலம் இது.
வாக்குக்கு பணம் மறைமுகமாக கொடுத்த காலம் போய்.
இன்று வாக்குக்கு பணம் வாங்குவது வாக்காளர் உரிமை என மாறி விட்டது.

வெளியில் வாக்குக்கு பணம் வாங்குவதை அசிங்கம் என்று நாணயமாக பேசுபவர்கள் கூட வாக்குக்கு நிர்ணயிக்கும் தொகை 5000,1000 என்று தெரிந்த உடன் மனம் அலைபாய்கிறது.
அவர் வீட்டில் 3 வாக்குகள் இருந்தால் 30,000/-ஆயிற்றே.
ஆர்.கே,நகர் இடைத்தேர்தல் அசிங்கம் இந்திய அளவில் அவமானம்.


அவமானம்  யாருக்கு என்பதில் யாருக்குமே ஐயம் வேண்டாம்.
அனைத்துப்புகழுமே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே.
ஒரு தேர்தலில் பணம் பட்டுவாடா நடக்கிறது என்றால் அதை தடுப்பது யார்?

எதிர் தரப்பினர் பணம் கொடுப்பவர்களை பிடித்துக்கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.இதில் எ மக்கள் வரிப்பணத்தில் குளிர் வாகனங்களில் தேர்தல் பார்வையாளர்கள்,கணக்கு அதிகாரிகள் என ஒரு கூட்டம்.
துணை ராணுவம் வரை ஆயிரக்கணக்கில் வைத்தும் பணம் பட்டுவாடா தடுக்க முடியவில்லை என்றால் அது யாரின் கையாலாகத் தனம்.?

உள்ளூர் அதிகாரிகளும் ,காவல்துறையினரும் ஒத்துழைக்கவில்லை என்பது சர்வாதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் சொல்வது சரியான காரணமாக அமையாது.
காரணம் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடனே தேர்தல் நடைமுறையில் அனைத்து அதிகாரவர்க்கமும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது.அவர்களை மாற்றுவது,நடவடிக்கைகள் எடுப்பது என  முதல் எல்லா அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம்தான்.

ஆர்.கே.நகரில் நடந்தது இந்தியா முழுக்க அறிந்ததுதான்.
சென்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஒரு அணியின் வேட்பாளர் தினகரன் 89 கோடிகள் வரை வாக்கு வாங்க அள்ளிவிட்டார் அதை தடுக்க முடியவில்லை என்பதால்தான் தேர்தலே ஒத்தி வாய்ப்பு.
சரி.அதுவரை தேர்தல் ஆணையம் பல கோடிகள் செலவிட்டும் தேர்தலையே ஒத்திவைக்க செய்த குற்றவாளியின் மீது இன்றுவரை தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

அவர் மீதும் அவருக்காக பணம் பட்டுவாடா செய்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி,விஜய பாஸ்கர் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்க சொன்னதாம்.தமிழக தேர்தல் ஆணையம் ராஜேஷ் லக்கானி தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி விட்டாராம்.
இதுதான் தினகரன் பழைய பணப்பட்டுவாடா மீது எடுத்த நடவடிக்கை.அவ்வளவுதான்.


இந்த பணப்பட்டுவாடா குற்றவாளிகள் மீது என்ன நவடிக்கை எடுத்தார்கள் என்பதை கவனிப்பது யார்?
அதைவிட மோசமான இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கை,சென்ற இடைத்தேர்தலையே ஒத்திவைக்க களமிறங்கி பணம் கொடுத்து மாட்டிக்கொண்ட தினகரனை இந்த இடைத்தேர்தலில் நிற்க  எப்படி அனுமதித்தது.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியும் கூட நிற்க அனுமதித்தது என்ன நியாயம்.

கையெழுத்து போட்டுவிட்டு அது என் கையெழுத்தில் என்றும் அதன் பின் மதுஸுதனன் மிரட்டலில் அப்படி சொன்னேன் என்றும் அதன் பின்பும்  தான் கையெழுத்திடவில்லை என்ற திலீப்பின் வாக்குமூலத்தை வைத்து நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்த ஆணையம் அதை விட  மிகப்பெரிய தவறை,சென்ற தேர்தலையே ஒத்தி வைக்க காரணியான தினகரனை போட்டியிட அனுமதித்தது ஏன்?
ஆக தினகரன் அதன் பின்னராவது நாணயமாக நடந்தாரா ?என்றால் இல்லைதான் .
குக்கரில் பணம் கொடுக்கிறார் என்ற குற்ற சாட்டு.

அவர் சார்பாக ,அதிமுக சார்பாக பணம் கொடுத்தவர்களை திமுகவினர் ,தேர்தல் பார்வையாளர்கள் பிடித்து கொடுத்தால் அவர்களுடன் வாக்குவாதம் செய்து பொதுமக்களே விடுவிக்க வைக்கிறார்கள்.சாலை மறியல் முதல் காவல் நிலையம் முற்றுகை வரை.

காரணம் அடுத்தவீடு வரை வாக்குக்கு 6000 கொடுத்து விட்டு 4 வாக்குகள் இருக்கும் தன வீட்டுக்கு கொடுக்கவிடாமல் செய்வது சரியா?24000 என்றால் சும்மாவா?என்ற வயிற்றெரிச்சல்தான்.

மக்களை இந்திய வாக்காளர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?தேர்தல் ஆணையம்தான்.
ஏழைகள் நிறைந்த இந்தியாவில்,அதுவும் அன்றாட வேலைக்காரர்கள் வாழும் தொகுதியில் இது போன்று நடக்கத்தான் செய்யும்.காரணம் இது அவர்களின் இரு மாத சம்பளத்தை விட அதிகம்.

அதிலும் தினகரன் இன்றைய தேர்தலில் வாக்குக்கு  பணம் கொடுத்தலில் புதிய வழிகாட்டலை காட்டியுள்ளார்.அதற்கு ஹவாலா முறை என்று பெயர். இதுவரை கடைபிடித்த அழகிரியின் திருமங்கல முறையை விட இது கொஞ்சம் பாதுகாப்பு.

தேர்தலுக்கு முன்னர் வரிசை எண் உள்ள இருபது ரூபாய் தாள்களை வீடுகளுக்கு கொடுப்பது என்ன வெறும் இருப்பதா என்றவர்களை "குக்கருக்கு வாக்களித்து விட்டு அதை அலைபேசியில் சத்தியத்துடன் 20 ரூ தாளின் எண்களை  சொல்லி விட்டு  (ஹவாலா முறையில்) வந்து அந்த எண் 20ரூபாயை கொடுத்து விட்டு6000த்தை  வாங்கி செல்லாம் என்ற எளிய உத்திரவாதம்தான்,உதய சூரியன்,இரட்டை இலையை விட்டுவிட்டு குக்கரை நோக்கி பலர் கைகளை திருப்பி உள்ளது.


வாக்களிப்பு அன்றே பணம் பட்டுவாடா ?இப்போ என்ன செய்வீங்க என்பதுதான் தினகரனின் ஹவாலா பாணி .
இதற்கு அவரின் அந்நிய செலவாணி மோசடி பணம் அந்நிய நாடுகளுக்கு மாற்றிய அனுபவம்தான் காரணமாக இருந்திருக்கும்.
100ரூபாய் பிரியாணி பொட்டலுத்துக்காக மட்டுமே  வெயிலில் ஜெயலலிதா வருகைக்காக காத்து தங்கள் உயிரை இழக்கும் அளவு இருந்த  மக்களுக்கு இது எவ்வளவு எளிமையான பணவரவு.

வாக்காளர்களை   வாங்காதே கைது என்று தடுக்கும் ஆணையம் கொடுப்பவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பார்த்தால் பெரு வட்டம்தான்.

தேர்தல் அறிவித்ததுடன் தேர்தல் ஆணையம் தனது பணியை எந்த சமரசமும் இல்லாமல் செய்தாலே போதும்.
தீவிரவாதம் தலைதூக்கியுள்ள காஷ்மீர் ,நக்சல்பாரிகள் கைவசமுள்ள பகுதிகளில் எல்லாம் கூட தேர்தலை நடத்திக்காட்டியதுதான் இந்த தேர்தல் ஆணையம் அதற்கு ஆர்.கே.நகர் எல்லாம் சும்மாதான்.
அங்கு தேர்தலை நடத்த ஏன் இவ்வளவு திணறல்.?
ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிடுகையில் ஆளுங்கட்சிக்கு  அனுமதித்த விதி மீறல்கள் அனுமதித்தான் தொடர்கிறது.

இனி தேர்தல்களை ஒழுங்காக நடத்த முடியாதா?
கண்டிப்பாக முடியும்.அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தேவை சேஷன் போன்ற முதுகெழும்பு.

தேர்தல் அறிவிக்கும்போதே எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்,காவலர்கள் பட்டியலை கொடுக்கிறது.
ஆனால் அந்த பட்டியலை ஆணையம் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறது.காரணம் சிலருக்கு ஆதரவான அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் இருப்பதுதான்.

தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்தாலும் அதே நிலைதான்.காரணம் மோடியின் நண்பர்,அவர் குஜராத் முதல்வராக இருக்கையில் உதவியாளர் என்பது  போன்ற காரணத்தால் தலைமைக்கு வந்த ஜோதி போன்றோரால் தான்.

தேர்தல் நடைமுறை வந்தவுடனே எதிர்க்கட்சிகள் இலக்கண அதிகாரிகளை மாற்றினால் போதுமே.மற்றவர்களுக்கு ஒரு ஒழுக்க உணர்வு வந்துவிடுமே.

அதைவிட்டு,விட்டு  இப்போதைய ஆர்.கே .நகர் தேர்தலில்  தேர்தல் நடக்க ஒருநாள் இருக்கையில் துணைக்காவல் ஆணையரை மாற்றியதுபோல் பெயரளவில் மாற்றுவது என்ன பயன்.
எல்லா சட்டவிரோதங்களும் நடந்து முடிந்திருக்கும்.
குதிரை திருட்டு போன பின் லாயத்தை மூடி பூட்டு போடுவதால் என்ன பயன்.
 சென்ற முறை தேர்தலை நடத்தமுடியாமல்  ஒத்திவைக்க அறிக்கை விடுத்த பிரவின் நாயரையே கொண்டுவந்து என்ன சாதித்தது ஆணையம்?

 நாலாயிரம்,12000 வரை அதிகரித்ததுதான் லாபம்.

இந்த முறை அதிகம் பணம் பட்டுவாடா என்று பார்வையாளர்கள் அறிக்கை தந்த பின்னரும்.தேர்தலை ஒத்திவைக்காமல் "சவாலாக ஏற்று தேர்தலை நடத்துவோம் "என்பது எவ்வளவு பெரிய மக்காளாட்சி ஏமாற்று வேலை.

இந்திய தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால் மக்களாட்சி,வாக்குப்பதிவுகள் எல்லாமே ஊழல் கறைபடிந்து மறைந்து போகும்.
இதே நிலை தொடர்ந்தால் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக நடந்து கொண்டால் இனி மக்கள் வரிப்பணத்தை கொட்டி நடக்கும் தேர்தலே வேண்டாம்.தொகுதிகளை ஐந்தாண்டுகள்  குத்தகைக்கு சீலிட்ட உறை யில் கேட்பு முறை வைத்து விடலாம்.
அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தொகுதி.அரசுக்கு வருமானம்.

இவ்வளவு நோகலுக்கும் காரணம் சமீபகால இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்தான்.

இமாசல பிரதேச தேர்தலுடன் நடக்க வேண்டிய குஜராத் தேர்தல் தேதியை பிரதமர் மோடி குஜராத்துக்கு பல சலுகைகள் அறிவித்தப் பின்னர் அறிவித்தது.

பரப்புரை முடிவில் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டது.
ஆனால் அதே போல் பேட்டி கொடுத்த பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லீ ,ராஜ்நாத் சிங்குக்கும் விளக்கம் கேட்காதது.


தேர்தலில் வாக்களித்து விட்டு கையை காட்டிக்கொண்டு ஊர்வலமாகப் போன பிரதமர் மோடியை எந்த கேள்வியும் கேட்காமல்,நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
என்று பல.
ஆனால் தேர்தல் ஆணைய ஒருபக்க சார்பை மக்களிடம் வெட்டவெளிச்சமாக்கியது "மோடி,அருண் ஜெட்லீ,ராஜ்நாத் சிங் மீது ராகுல்காந்தி போன்று நடவடிக்கை எங்கே" என்று காங்கிரஸ் கேட்டவுடன்
அவசரமாக ராகுல்காந்தி மீதான விளக்கம் கேட்பை திரும்ப பெற்ற இந்திய தேர்தல் ஆணைய செயல் தான்.

ஆனால் வாக்குக்கு காசு கொடுப்பவர்களை தடுக்க முடியாமல்,அப்படி கொடுத்து தினகரன் போல் மாட்டிக்கொண்டவர்கள் மீதும் கூட  நடவடிக்கையே எடாமல் "வாக்களிக்க காசு வாங்குபவர்களை கைது செய்ய ஆலோசிக்கிறோம்" என்ற ஆணைய அறிவிப்புதான் ஆணையத்தின் கையாலாகத் தனத்தை காட்டுகிறது.

காசு கொடுக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்தை மதித்து சொல்லும் கட்சிகளுக்கு "திமுக காசு தராது" என்று பகிரங்கமாக அறிக்கை விட்ட ஸ்டாலினை பாராட்டி ஆர்.கே .நகர் மக்கள் கொடுத்தது போல் அதிகம் கொடுத்த சுயேச்சைக்கு முதலிடமும் பரவாயில்லாமல் கொடுத்த அதிமுகவுக்கு இரண்டாம் இடமும், கையை விரித்து மட்டுமே காட்டிய திமுகவுக்கு மூன்றாம் இடமும் என்ற நிலைதான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவசங்கர் எஸ்.எஸ்

"அண்ணே மனசு கஷ்டமா இருக்கு, ஆர்.கே.நகர்...."
"சாப்ட்டுட்டு பேஸ்புக்க மூடி வச்சுட்டு நிம்மதியா தூங்கு"
"அதில்லண்ணே, கட்சி ஆத்ம பரிசோதனை பண்ணிக்கனும்"
"பண்ணிக்கிட்டு...?"
"கொள்கை ரீதியா..."
"நிம்மதியா தூங்க சொன்னன்ல. அத செய் முதல்ல. குஜராத் பி.ஜே.பி ஜெயிச்சிடிச்சி அவ்ளோ தான்னு புலம்புன இல்ல. இங்க பி.ஜே.பி என்னாச்சி?"
"ஹி, ஹி. இங்க பி.ஜே.பி நோட்டாவ விட கம்மி"
"குஜராத்ல ஜெயிச்சதுன்னால பி.ஜே.பி இங்க ஜெயிச்சிதா , இல்லல்ல. அதே தான் தினகரன் கதை"
"சும்மா சமாளிக்காதண்ணே"
"சமாளிச்சா மட்டும் என்னா நடக்கப் போவுது. நடந்தது தான். நான் சொல்றத கொஞ்சம் காது குடுத்து கேளு"
"சரி சொல்லுண்ணே"
"2010 மார்ச்ல பெண்ணாகரம் இடைத்தேர்தல். ஆளும்கட்சி நாம. நாம தான் ஜெயிச்சோம். அதிமுக மூனாவது இடம், டெப்பாசிட் போயிடுச்சி. 2011 ஏப்ரல்ல பொதுத்தேர்தல். நாம தோத்து, அதிமுக ஆதரவுல கம்யூனிஸ்ட் ஜெயிச்சிது. அதனால இடைத்தேர்தலுக்கும் பொதுத்தேர்தலுக்கும் தொடர்பில்லை"
"இதெல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு. தோத்துட்டத நினைச்சா மனசு கஷ்டமா இருக்கே"
"ஒரு தோல்விக்காக புலம்பி திரியாத. ஆத்ம பரிசோதனைன்னு புரளாத. கடைசியா ஒன்னு சொல்றன் கேட்டுக்க"
"சொல்லுண்ண"
" எல்லாத் தேர்தலும் இடைத்தேர்தல் அல்ல. எல்லாத் தொகுதியிலும் தினகரனே நிக்க முடியாது"
# குக்கரில் வேக எல்லா ஊரும் ஆர்.கே.நகர் அல்ல !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?