மூன்றாவது இடத்தில் இந்தியா.

மதவெறி தூண்டும் ட்ரம்ப் .
“பாசிச சிந்தனை கொண்ட ஒரு பிரிட்டிஷ்காரர், முஸ்லிம்களுக்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்ட மிக மோசமான வீடியோக்களை மறு டுவீட் செய்கிற அதே விரல்களால், இந்த உலகத்திற்கு எதிராக அணுஆயுதங்களை ஏவுகிற பொத்தானை யும் நொடிப்பொழுதில் அழுத்த முடியும்”.
-இப்படி கடுமையான வார்த்தைகளால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை விளாசித் தள்ளியிருக்கிறார்கள் டுவீட்டர் சமூக வலைத்தளத்தில் செயல்படுகிற இளைஞர்கள்.

“ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பகைமையையும் வெறுப்பையும் விதைப்ப தும் பரப்புவதும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் ஒரு ஜனாதிபதி இருப்பாரானால் அது எத்தனை அவமானத் திற்குரியது” என்று சாடுகிறது ஒரு இளைஞனின் டுவீட். 


வியாழக்கிழமை உலகம்முழுவதும் இப்படி கடுமையானவிமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் வருத்தெடுப்புக்கு ஆளாகி யிருக்கிறார் ஜனாதிபதி டிரம்ப். 
சமூக வலைத்தள பயன்பாட்டாளர் மட்டுமல்ல; பிரிட்டிஷ் பிரதமர் தெரசாமே உள்ளிட்ட பல நாடுகளின் தலை வர்களது கண்டனத்திற்கும் அவர் ஆளாகியிருக்கிறார். ஆனாலும் கூட அந்த கண்டனங்களை அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. 

பிரிட்டிஷ் பிரதமர்தெரசா மேயின் விமர்சனத்திற்கு கடும்எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார் டிரம்ப்.
இஸ்லாமிய பயங்கர வாதத்தை குறை சொல்லுங்கள்; அதை சுட்டிக்காட்டிய என்னை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரசாவுக்கு பதில் கொடுத்திருக்கிறார் டிரம்ப்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
பிரிட்டனைச் சேர்ந்த வலது அதிதீவிர அரசியல் குழு ஒன்றின் நிர்வாகியான ஜெய்தா பிரான்சென் என்பவர்,முஸ்லிம்களுக்கு எதிரான மூன்று வீடியோக்களை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோக்களில் ஒன்று, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் - வெளிநாட்டிலிருந்து குடியேறியவர் - உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிறுவனை அடித்து உதைப்பது போன்ற காட்சிகளைக் கொண்டது. 

மற்றொரு வீடியோ, பிரிட்டனில் ஏதோ ஒரு இடத்தில் அமைந்துள்ள கன்னிமேரி சிலையை சில முஸ்லிம்கள் அடித்து நொறுக்குவது போன்ற காட்சியைக் கொண்டது.

இந்த வீடியோக்களை, முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் நோக்கத்துடன் மேற்படி ஜெய்தா பிரான்சென் பதிவிட்டிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இவர் பிரிட்டனில் தீவிர வலதுசாரி சிந்தனையோடு செயல்படுகிற “பிரிட்டன் பர்ஸ்ட்” (பிரிட்டனே முதலில்) என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர்தொடர்ந்து மத ரீதியாக சிறு பான்மையினருக்கு எதிராக - குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவதும் இழிவான முறையில் பேசுவதுமான அராஜகங்களில் ஈடுபட்டு வரு கிறார். 


இதன்பேரில் இவர் மீதுலண்டனிலும் வேறு சில நகரங்களிலும் பல வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இத்தகைய நபரை டுவிட்டரில் பின்பற்றுபவர்களில் ஒருவராக அமெரிக்க ஜனாதி பதி டொனால்டு டிரம்ப் இருக்கிறார். மேற்படி நபரது வீடியோக்களையே டிரம்ப், தான் ஒரு ஜனாதிபதி என்பதையும் கணக்கில்கொள்ளாமல், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதி ராக புனையப்பட்ட வீடியோக்களை மறு டுவீட் செய்கிறோம் என்பதை உணராமல் டுவீட் செய்துள்ளார்.

இதுதான் இப்போது கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, “ஒரு ஜனாதிபதியாக இருப்பவர்இத்தகைய செயலில் ஈடுபடுவது தவறு” என்று விமர்சித்தார். 
அதையும்டிரம்ப் கடுமையாக ஆட்சேபித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தை யும் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் டிரம்ப் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 

முஸ்லிம்கள் என்றாலே பயங்கர வாதிகள் தான் என்று முத்திரை குத்தி அவர்களை எதிரிகளாக சித்தரிக்கிற அமெரிக்காவின் கொள்கையை டிரம்ப் இன்னும் தீவிரமாக பின்பற்று கிறார் என்பதையே இந்தச் சம்பவம்உணர்த்துகிறது என சர்வதேச அரசியல் நோக்கர்களும் கண்டித்துள்ள னர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாவது இடத்தில் இந்தியா?
உயிர்க்கொல்லி நோய் எனப்படும் எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், சுமார் 4 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
உயிர்க்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. சுமார் 4 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
குறிப்பாக, இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 12 எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போதிய தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது வருத்தத்துக்குரிய விஷயம். 
மேலும், போதிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளாததாலேயே 60 சதவிகித எய்ட்ஸ் நோயாளிகள் பலியாகும் அவலம் நேர்கிறது.
======================================================================================================================================







ன்று,
டிசம்பர் -04.
  • இந்திய கடற்படை தினம்
  • தாய்லாந்து தேசிய சுற்றுசூழல் தினம்
  • உலகின் முதலாவது ஞாயிறு இதழான தி அப்சர்வர்-ன் முதலாவது இதழ் வெளிவந்தது(1791)
  • இந்தியாவில் சதி முறையை ஒழிக்க கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1829)
=========================================================================================

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 09 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன. 
காங்கிரஸ் பாஜகவிடையே நேரடி போட்டி இருந்து வரும் நிலையில் இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் குஜராத் பாருச் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியாக இருந்துள்ளது. 
22 வருடங்களாக ஆட்சி பீடத்தில் இருக்கும் பாஜகவுக்கு இந்த முறை கடும் நெருக்கடி காத்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை குஜராத் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

                                              உ.பி, தேர்தலில் பாஜக வெற்றியின் மர்மம். 


======================================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?