ஒரு கூட்டு கிளிகள் ?



நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன.

 சமீபத்தில் அவ்வாறு அடுத்தடுத்து உலுக்கிய ஊழல்கள் நீரவ் மோடியின் ரூ 11,700 கோடி வங்கி மோசடியும் ரோடோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் 800 கோடி ஊழலும் ஆகும்.இது வெளிப்பட்ட ஊழல்தான் இன்னும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ரோடோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, நீரவ் மோடிக்கு சளைத்தவர் அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.கோத்தாரி அடித்த கொள்ளை ரூ.800 கோடியல்ல; ரூ.3695 கோடி என்பதும் அம்பலமாகி இருக்கிறது.
இந்த இரு ‘கனவான்களும்’ வங்கிகளை எவ்வாறு “ஆட்டையை” போட்டார்கள் என்பது குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் வெளிவராத செய்தி ஒன்று உண்டு. 
வங்கிகளின் பணத்தை அதாவது மக்களின் பணத்தை “ஆட்டையை” போட்ட இவர்களின் குடும்பங்களுக்கும் அம்பானி மற்றும் அதானி குடும்பங்களுக்கும் உள்ள “உறவு” குறித்து பல ஊடகங்கள் கண்களை மூடிக்கொண்டன.

காரணம் ஊடகங்கள் அச்சு,தொலைக்காட்சி   ,இணையம் அனைத்தும் இந்த பணக்கார மாபியா கும்பல் வசம்.

முதலில் நீரவ் மோடிக்கும் அம்பானிக்கும் என்ன உறவு என்பதை காண்போம். நீரவ் மோடியின் முதன்மை நிதி அதிகாரி விபுல் அம்பானி. இவர் அனில் மற்றும் முகேஷ் அம்பானிக்களின் சிற்றப்பாவான நாதுபாய் அம்பானியின் மகன்; அதாவது அனில் மற்றும் முகேஷ் அம்பானிகளின் ஒன்றுவிட்ட சகோதரர்! இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விபுல் அம்பானி தனது பணியை அம்பானிகளின் ரிலையன்ஸில்தான் தொடங்கினார். 
நீண்டகாலம் அங்கு பணியாற்றிய பிறகு நீரவ் மோடியின் நிறுவனங்களுக்கு முதன்மை நிதி அதிகாரியாக செயல்பட்டார். 
தற்பொழுது சிபிஐ விபுல் அம்பானியை கைது செய்துள்ளது.நீரவ் மோடியின் இளைய சகோதரர் நீஷல் மோடி. இவரது மனைவி இஷாட்டா சல்கோகர். 
இவர் அம்பானிகளின் சொந்த சகோதரி மகள். அதாவது நீஷல் மோடி அம்பானிகளுக்கு மருமகன் உறவு! 

இவர்களின் திருமணத்தை அம்பானிக்கள்தான் நடத்திவைத்தனர். 
செலவு மிக அதிகம் இல்லை ! 
சில நூறு கோடிகள்தான்! 
நீஷல் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஒரு பக்கத்தில் அம்பானிகளின் சகோதரர் விபுல் அம்பானி நீரவ்மோடிக்கு நிதி அதிகாரி. 
மறுபுறத்தில் அம்பானி நீஷல் மோடிக்கு மாமனார் முறை! நீரவ் மோடிக்கும் அம்பானிக்களுக்கும் எத்தகைய “உறவுகள்” இருந்தன என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்!

அடுத்து ரூ800 கோடி “ஆட்டையை” போட்ட விக்ரம் கோத்தாரிக்கும் நரேந்திர மோடியின் நிழல் மனிதரான அதானிக்கும் என்ன உறவு என்பதை காண்போம்.விக்ரம் கோத்தாரியின் மகள் நர்மதா! இந்த நர்மதாவின் கணவர் பிரணவ் அதானி! இவர் கவுதம் அதானியின் சகோதரர் மகன். 
அதாவது ரூ.800 கோடி “ஆட்டையை” போட்ட விக்ரம் கோத்தாரியும் அதானியும் “சம்பந்தி”களாக “பரிணமிக்கின்றனர்.
”அதோடு இந்த உறவுச் சங்கிலி முடியவில்லை.
அதானிக்கு கிருபா அதானி என்றொரு சகோதரி மகள்.
இவரது கணவர் சூரஜ் மேத்தா! சூரஜ் மேத்தாவின் தந்தை ஜத்தின் மேத்தா. அதாவது அதானியின் இன்னொரு சம்பந்தி.
 ஜத்தின் மேத்தாவின் சாதனை என்ன?
 “வராக் கடன்” எனும் பெயரில் வங்கிகளிடமிருந்து 7000 கோடியை சுருட்டிக்கொண்டார். 
ஆக, அதானியின் ஒரு சம்பந்தி 800 கோடி “ஆட்டையை” போட இன்னொரு சம்பந்தி 7000 கோடி “ஆட்டையை” போட இதைவிட மோடியின் நண்பர் என்பதற்கு அதானிக்கு வேறு ஏதாவது “தகுதி” வேண்டுமா?

 இந்தியாவே இந்த மோசடிகள் குறித்து அலறிக்கொண்டிருக்க பிரதமர் “மவுன விரதம்” இருப்பது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?
கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது வள்ளுவன் வாக்கு. 

ஆனால் மோசடியில் ஈடுபடும் குடும்பங்கள் மோசடி செய்பவர்களுடன்தான் “திருமண உறவுகளை” உருவாக்குகின்றனர் என்பது இவர்கள் உருவாக்கியுள்ள புதிய இலக்கணம். 
இந்த மோசடிகள் ஏதோ ஒரு சில வங்கி ஊழியர்கள் செய்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். 
வங்கி நிர்வாகங்கள் மீதும் தணிக்கையாளர்கள் மீதும் அருண்ஜெட்லி கோபத்தை கொட்டுகிறார். அல்லது அவ்வாறு தோற்றத்தை உருவாக்குகிறார். 
வங்கிகளில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த மோசடிகளுக்கு அடிப்படை காரணம் காங்கிரஸ் அரசாங்கங்கள் தொடங்கிவைத்து தற்பொழுது மோடி அரசாங்கம் வெறித்தனமாக அமலாக்கிவரும்  கொள்கைகள்தான்.

““Crony Capitalism”” எனும் சலுகை சார் முதலாளித்துவம் கொள்ளையடிக்கவும் மோசடிகள் செய்யவும் இந்த மோசமான பொருளாதார கொள்கைகள்தான் தகுந்த புறச்சூழலை உருவாக்குகின்றன. இத்தகைய கொள்கைகள் தொடரும்வரை மோசடிகளும் தொடரவே செய்யும். 
மோடியின்  நவீன தாராளமய கொள்கைகள் இந்தியாவுக்கு தேவையற்றது.இந்தியாவின் பொருளாதாரம் சில கும்பலிடம் குவியவும்.
ஏழை- பணக்காரர் இடையேயான வித்தியாசம் அதிகரிக்கவுமே செய்கிறது.இதைத்தான் உலக பொருளாதார ஆய்வு மய்யமும் கூட சுட்டிக்காட்டியுள்ளது.
பாஜக  மோடி & அமித்ஷாகும்பல்களின் பணம் காய்ச்சி மரங்களாக உள்ள அம்பானி, அதானி மற்றும் வங்கி ஊழலில் மாட்டியுள்ள நீரவ் மோடி & ரோட்டோமேக் கோத்தாரி கும்பலின் உறவு வலைப்பின்னல் இதுதான் ..
மக்களின் ஆயிரங்களிலான வைப்புத்தொகையில் இருந்து அபராதம் எடுத்து கொள்ளையர்களுக்கு ஆயிரங்கோடிகளில் வங்கிகள் கொடுத்ததன் பின்னணி விளங்குகிறதா?

 அதானி & அம்பானிகளுக்கு ஓடி ஓடி பிரதமர் மோடி உழைப்பதும், கார்ப்பரேட்கள் பாஜகவுக்கு மட்டுமே 87% நிதியை வாரிவழங்கியுள்ளதும்  எதற்காக என புரிகிறதா??
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-24.
தமிழ் நாட்காட்டி 

  • கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)
  • எஸ்தோனியா விடுதலை அறிவிப்பு (1918)
  • ஹிட்லரின் நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)
  • தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினம்(1948)
கிரெகோரியன் நாட்காட்டி:
(Gregorian calendar)
கிரெகோரியன் நாட்காட்டியானது  துல்லியம் கொண்டுள்ளது.
தற்போது உலக அளவில்  மிகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைஒயில் உள்ளது.
இது மேற்கத்திய நாட்காட்டி என்றும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்படுகிறது.இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கிரெகோரியன் நாட்காட்டியான இது கி.மு.45இல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் ஜீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின்(Julian Calendar) திருத்தப்பட்ட வடிவமாகும்.இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்(Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன் வைக்கப்பட்டது.இது 24,பிப்ரவரி 1582 ஆம் ஆண்டில் அப்போதைய திருத்தந்தையான பதின்மூன்றாம் கிரகோரியன் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது.இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு”கிரெகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இந்த நாட்காட்டியின்படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன.மேலும் இக்காலப்பகுதி “ஆண்டவரின் ஆண்டு ” எனவும் பெயரிடப்பட்டது.இது கி.பி ஆவது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ்(Dionysius Exiguus) என்னும் கிறித்துவத் துறவியால் ரோமில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
கிரெகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி ,பிப்ரவரி,மார்ச்சுஏப்ரல்மேஜூன்செப்டம்பர்அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும்பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கப்பட்டனஸ்பெயின்,போர்ச்சுக்கல்போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த்,இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரெகோரியின் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன.1582 அக்டோபர்முதல் இவை கிரெகோரியன் நாட்காட்டியை பயன்படுத்தத் தொடங்கின இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரெகோரியின் நாட்காட்டியை அங்கீகரித்தன.ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்ததுகிரெகோரியன் நாட்காட்டியை கடைசியாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும்.1923 பிப்ரவரி 15-இல் தான் இந்நாடு கிரெகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.
======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?