பீத்தல் கதையும் -உண்மை நிலையும்.,

அண்மையில் சென்னை வந்த பிரதமர்மோடி அரசு விழாவில் பேசும் போது, மத்தியில்பாஜக தலைமையிலான ஆட்சியில்தான் தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக பெருமையாக கூறினார். 

காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.81 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதாகவும் பாஜக ஆட்சியில் ரூ.1.80 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் சொல்லியிருந்தார். 
ஆனால் நடைமுறையில் மத்திய அரசின் செயல்பாடுகள் பிரதமர் உரையில் உள்ள கூற்றுகளை பிரதிபலிப்பதாக இல்லை. 


இதற்கு ஒக்கி புயல் நிவாரணத்திற்குமோடி அரசு ஒதுக்கிய தொகையே இதற்குசாட்சி. அந்த புயலால் குமரி மாவட்டம் கடுமையாக சேதமடைந்தது.ஒக்கி புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 9,302 கோடி நிவாரணம் தேவை என பிரதமரிடம் தமிழக முதல்வர்கோரிக்கை விடுத்திருந்தார். 

ஆனால் இரண்டுமாதம் கழித்து அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும்ரூ.133 கோடிதான். சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாதவாறு நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 4,047 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரப்பட்டிருந்தது. 

அதுகுறித்தும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை ஒருபதிலையும் காணோம். இதுமட்டுமல்ல, ரயில்வே திட்டங்களிலும் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கியமான ரயில் திட்டங்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு பெருமளவில் நிதிஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. 
அகலப்பாதை, இரட்டைப்பாதை எனபலதிட்டங்களுக்கு கடந்தாண்டே ரூ.826கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு அது ரூ.463கோடியாக குறைந்துவிட்டது.


 புதிய பாதைத்திட்டங்களுக்கு தேவையோ ரூ.11 ஆயிரம் கோடியாகும். 
அதற்கு கடந்தாண்டு ரூ.188கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் ரூ.49 கோடிதான். 
மதுரை - கன்னியாகுமரி, மணியாச்சி- தூத்துக்குடி,கன்னியாகுமாரி- திருவனந்தபுரம் என மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை பாதை திட்டங்களை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. 

இந்தமூன்று திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 700கோடி என ஐந்தாண்டுக்கு மொத்தம் ரூ.3500 கோடிதேவைப்படும் நிலையில், நடப்பாண்டு ரூ.350 கோடி பட்ஜெட்டுக்கு வெளியில் இருந்து செலவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசு நிர்ணயித்த 5 ஆண்டுகளுக்குள் இந்த திட்டங்கள் நிறைவேற வாய்ப்பில்லை. இப்படி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை தட்டிக்கேட்க வேண்டிய அதிமுகஅரசு, மத்திய அரசின் காலடியில் விழுந்து கிடப்பது வேதனையளிக்கிறது.

 காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளிப்படையாகவே பேசுகிறார். கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் உரிமைகளை பலிகொடுக்கவும் தயங்கமாட்டோம் என்பதைத்தான் அவரது உரை காட்டுகிறது. 
இப்படி தமிழகத்தை அனைத்து வகையிலும் வஞ்சிக்கும் மோடி, நமது மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதாக கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரிபுரா தேர்தல் பாஜக என்னவெல்லாம் செய்துள்ளது ?
திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. 
இதில் மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பா.ஜ.க. வெறித்தனமாக செயல்பட்டுள்ளது. 
இந்த வெறி காரணமாக பாஜக பல முறைகேடுகளை செய்தது மட்டுமல்ல; அரசியல் நஞ்சு கலந்த ஆபத்தான செயல்களிலும் ஈடுபட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சி தோழர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் திரிபுராவில் அமைந்தது. 1983 ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலிலும் இடது முன்னணியே வென்றது. 1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்து மத்தியில் மிருகபலத்துடன் ஆட்சி அமைத்த ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 1988 ஆம் ஆண்டு தேர்தலில் இடது முன்னணி ஆட்சியை வீழ்த்த சதித் திட்டம் தீட்டியது.
இதற்கு காங்கிரஸ் தேர்ந்தெடுத்த வழிகள் மூன்று
திரிபுராவில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையே மோதலை உருவாக்கியது;
திரிபுரா தனி தேசமாக அறிவிக்க வேண்டும் என கோரும் தீவிரவாதி களுடன் கூட்டு வைத்தது.
தேர்தலில் வன்முறையை உருவாக்கி வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது.
இதனை செய்து முடிக்க நியமிக்கப்பட்ட இரு மத்திய அமைச்சர்கள் சந்தோஷ் மோகன் தேவ் மற்றும் ப.சிதம்பரம் ஆவர். இந்த இருவருமே திரிபுராகண்டிராத வன்முறையை அரங்கேற்ற “ஸ்கெட்ச்” போட்டு தந்தனர் எனில் மிகை அல்ல.


1985 முதல் 1988 வரை திரிபுராவில் என்ன நடந்தது?

இந்த மூன்று ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 400 பேர் கொல்லப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி டி.என்.வி./டி.யூ.ஜே.எஸ். எனும் தீவிரவாத அமைப்புடன் கூட்டு சேர்ந்தது.
தீவிரவாதிகள் ஊடுருவ 100 கி.மீ நீளம் உள்ள திரிபுரா- சிட்டகாங் எல்லை திறந்துவிடப்பட்டது.
தேர்தலுக்கு முன்பு இடதுசாரி அரசாங்கம் அகற்றப்படும் எனும் வாக்குறுதி பிரதமரால் தீவிரவாதிகளுக்கு தரப்பட்டது. (இது தொடர்பான கடிதத்தை சில ஊடகங்கள் கசியவிட்டன).
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இடது முன்னணி அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரம் முடக்கப்பட்டு மத்திய அதிகாரம் அமலாக்கப்பட்டது.

2500 இடது முன்னணி தலைவர்களும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
தேர்தலில் பல வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்டு காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குகள் பதியப்பட்டன.
இத்தனை முறைகேடுகள் செய்த பின்னர்தான் 1988 இல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால் இடது முன்னணியின் இடைவிடாத இயக்கங்கள் காரணமாகவும் காங்கிரசின் அராஜகம் காரணமாகவும் 1993 ஆம் ஆண்டு மீண்டும் இடது முன்னணி ஆட்சியை பிடித்தது. கடந்த 25 ஆண்டுகளாக இடது முன்னணி ஆட்சி தொடர்கிறது.

மீண்டும் அதே சதிகள்...
இந்நிலையில், இப்போது இந்திய ஆளும் வர்க்கங்களின் முக்கிய பிரதிநிதியாக காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டுள்ள பாஜக, இருபது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் செய்த அதே சதியை மீண்டும் திரிபுராவில் அரங்கேற்றியுள்ளது. 
பாஜகவின் சதிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து 08.02.2018, 17.02.2018 மற்றும்20.02.2018 ஆகிய மூன்று தேதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மூன்று நீண்டபுகார்கள் தக்க ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்டுள்ளன.1988 இல் காங்கிரஸ் செய்தது போலவே தற்பொழுது பா.ஜ.க. திரிபுரா தீவிரவாதிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. 

திரிபுராவில் பத்திரிகையாளர்களை கொன்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த கொலையாளிகள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்டனர். 
1988 ஆம் ஆண்டு கொலை வெறியை நடத்தி காட்டிய காங்கிரஸ் தலைவர்கள் இன்று பா.ஜ.க.வின் வேட்பாளர்கள். 2013 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை திரிணாமுல் காங்கிரஸ் விழுங்கியது. பின்னர் அவர்களை பா.ஜ.க. விலைக்கு வாங்கியது. 

திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்க அனைத்து முறைகேடுகளும் செய்யப்படும் என பிரதமர் அலுவலகம் தீவிரவாதிகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளன. 
கடந்த 50 ஆண்டுகளாக திரிபுரா கண்டிராத பணமழையை பா.ஜ.க. கொட்டியுள்ளது. இந்த பணமழையுடன் ஒப்பிட்டால் ஆர்.கே. நகரில் கொட்டிய பணமழை தூசுக்குச் சமமானது என கூறப்படுகிறது.

பாஜக... இன்னும் என்னவெல்லாம் செய்தது?

வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் திரிபுரா வாக்காளர்கள் வாக்களிக்க திரிபுரா வருவதற்கு ரயில் மற்றும் பேருந்து பயணம் கட்டணங்களை பா.ஜ.க. தரும் என பகிரங்க அறிவிப்பு.n மாதிரி வாக்கு பதிவில் எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு விழுந்தது.

அசாமிலிருந்து ஆயிரக் கணக்கான சமூக விரோத சக்திகளும் பா.ஜ.க./ ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களும் இறக்குமதி செய்யப்பட்டனர்.
n மாநில அரசாங்க ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய பலன்களை வழங்கியது ஆளுநர்தான் என பா.ஜ.க. ஆதரவான ஆளுநர் புகைபடத்துடன் பிரசுரங்கள் வெளியிட்டது.

தேர்தல் தொடர்பான வானொலி மற்றும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பிரச்சாரம் செய்யும் பொறுப்பு பா.ஜ.க. ஆதராவாளர்களுக்கு வழங்கப்பட்டது.
எந்த அரசியல் கட்சிக்கும் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் மூலமாக இந்தோ- திபெத் எல்லை காவல்படை இயக்குநரை பார்வையாளராக நியமித்தது; அவர் நேரடியாக திரிபுரா பாஜக தலைவருடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

மொத்தமுள்ள 3174 இல் 519 வாக்கு சாவடிகளில் அதாவது 17ரூ வாக்கு சாவடிகளில் வாக்கு எந்திரங்கள் மணிக்கணக்கில் செயல்படாமல்பழுதடைந்தன. இது ஒரு அசாதாரண நிகழ்வு ஆகும். இந்தியாவில் வேறு எங்கும் இப்படி நடந்தது இல்லை.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்க இயலவில்லை.n தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக நூற்றுக்கணக்கான வாக்கு எந்திரங்கள் திறக்கப்பட்டன. அப்பொழுது எந்த அரசியல் கட்சியின் பிரதிநிதியும் அழைக்கப்படவில்லை. அவ்வாறு எந்திரங்களை திறந்தவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது. ஏனெனில் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் பொறியாளர்கள் அல்ல என கூறப்படுகிறது.

இவ்வாறு சட்டவிரோதமாக திறக்கப்பட்ட எந்திரங்களில் கணிசமானவை, முதல்வர் மாணிக் சர்க்கார் போட்டியிடும் தொகுதியின் எந்திரங்களும் அடங்கும்.
சில வாக்கு சாவடிகளில் இடது முன்னணி தேர்தல் ஏஜெண்டுகள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளனர்.


தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி தேர்தல் நாளில் அசாம் பாஜக அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் திரிபுராவின் பல தொகுதிகளில் தங்கியிருந்தனர். அவர்களில் பல்லவ் லோச்சன் தாஸ் எனும் அமைச்சரை மக்கள் கையும் களவாக பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் இவர்களை வெளியேற்றிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசாங்க ஊழியர்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கு ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

 வாக்கு சாவடிகளில் பா.ஜ.க.வினர் தமது கேமராக்களுடன் நாட்டாமை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
இப்படி ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. 

இவற்றை ஆதாரங்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.
முறைகேடுகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள்இந்த விவரங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பா.ஜ.க.வின் நவீன தாராளமய கொள்கைகளையும் இந்துத்துவா மதவெறியையும் ஒரு சேர எதிர்த்து களம் காணும் இயக்கம் இடதுசாரிகள் மட்டும்தான்! 
எனவே பா.ஜ.க.விற்கு இடதுசாரிகள் சாதாரண எதிரிகள் அல்ல; முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய அசாதாரண எதிரிகள். 

அதற்காக என்ன செய்தாலும் தகும் என பா.ஜ.க. எண்ணுகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருப்பதை பயன்படுத்தி அனைத்துவிதமான அராஜகங்களையும் பா.ஜ.க. அரங்கேற்றியுள்ளது.இந்திய தேசியம் பற்றி வாய்க்கிழிய பேசும் பா.ஜ.க. திரிபுராவை தனி தேசமாக அறிவிக்க வேண்டும் என கொள்கை கொண்ட தீவிரவாத அமைப்புடன் கை கோர்க்கத் தயங்கவில்லை. 

வாக்கு எந்திரங்களை தவறாக பயன்படுத்தி “அறிவியல் முறைகேடுகள்” மூலம் வெற்றி பெற கனவு காண்கிறது. 
ஆனால் எந்த ஒரு ஊடகமும் இவ்வளவு பெரிய முறைகேடுகளை கண்டுகொள்ளவில்லை. 

அதே சமயத்தில் “எக்ஸிட் போல்” எனும் கருத்துத் திணிப்பை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
இந்த கருத்து திணிப்பையும் மீறி இடது முன்னணி வெற்றிவாகை சூடும்.
                                                                                                                                                                        தொகுப்பு : அ.அன்வர் உசேன்
=======================================================================================
ன்று,
மார்ச்-02.


  • டெக்சாஸ், குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)

  • மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1956)

  • இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)
=========================================================================================
டிராய்(Trai)  அம்பானி நிறுவனமா?
 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குற்றசாட்டு.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (TRAI)) செயல்படுவதாக ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

புதிதாக வந்துள்ள (ஜியோ) தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விதிமீறல்களை, டிராய் கண்டுகொள்ளாமல் விடுவதாலேயே, ஏர்செல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.


ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு, டெலிகாம் துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் உடனான போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி நிறுவனங்களே திணறி வருகின்றன. 

தற்போது வேறுவழியின்றி, ரீசார்ஜ் பேக்குகள் மீது இந்த நிறுவனங்களும், விலைக்குறைப்பையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. 

ஏர்டெல் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளரான சிங்டெல், சிலமாதங்களுக்கு முன்பு ரூ. 2 ஆயிரத்து 649கோடியை கையிலிருந்து போட்டது. அப்படி யிருந்தும் ஜியோவுக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை.மற்றொரு புறத்தில், போட்டியைச் சமாளிக்க முடியாத ஏர்செல், திவாலாகி விட்டது. 


ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் ஏர்செல்மூடப்படுவதாக டிராய் அமைப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடி வருவதாகவும், அதிலும் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள், விலைக்குறைப்பு, சலுகைகளில் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று இருப்ப தாகவும் கூறியுள்ளார். 

இதனை தொலைத்தொடர்பு ஒழுங் காற்று ஆணையமான ‘டிராய்’ கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் அவர், இதுதொடர்பாக நீதி மன்றத்தில் முறையிடுவதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் புலம்பியுள்ளார்.தங்களின் இந்த முடிவை அறிந்த டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா, “டெலிகாம் நிறுவனங்கள் தாராளமாக நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கி வரட்டும்” என்று கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். 

“சர்மாவின் கருத்து எங்களை (டெலிகாம் நிறுவனங்களை) ஏமாற்றம்கொள்ள வைத்துள்ளது” என்று குறிப்பிட்டு ள்ள மிட்டல், 
“எவ்வளவு காலம்தான் கையில் இருந்து முதலீடு செய்வது? 
என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இனியும் கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் ஆவேசப்பட்டுள்ளார்.
வோடாபோன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விட்டோரியோவும், சுனில் மிட்டலின் கருத்தை ஆதரித்துள்ளார். 
இந்திய தொலைத்தொடர்பு ஆணைய மானது, கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி ரீசார்ஜ் பேக்குகள் மீது கொண்டு வந்துள்ள புதியவிதிகள், டெலிகாம் சந்தையில் 30 சதவிகி தத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது, 

குறிப்பாக,‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது என்பதுதான் பொதுவாக டெலிகாம் நிறுவனங்களின் குற்றச்சாட்டு. ஜியோ நிறுவனத்திற்கு 13 முதல் 14 சதவிகிதம் வரையிலான சந்தை வருவாய் மற்றும் பயனர்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் - ஐடியா நிறுவனங்களுக்கு 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த நிறுவனங்கள் எவ்வளவுதான் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முயன்றாலும் புதிய விதிகள் ஜியோ-விற்குச் சாதகமாகவே உள்ளது என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?