நாளும் புதிதாய்........,

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் கருத்துக்களை கொட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவை புதிது போல தோன்றினாலும் உள்ளடக்கத்தில் மிகப் பழமையாகவும் பிற்போக்காகவும் ஜனநாயக விரோதமாகவுமே இருக்கின்றன. 

இப்போது சமூகநீதிக்கு புதுவிளக்கம் தந்திருக்கிறார்.

சமுதாயத்தில் பின்தங்கியுள்ள, ஒடுக்கப் பட்டுள்ள மக்களின் நலன் காப்பது என்ற அர்த்தத்தில் அதனை அரசியல் கட்சிகள் அணுகுகின்றன. 
அது ஏற்புடையது என்றாலும்சமூகநீதி என்ற சொல்லை பல வகைகளில் வரையறுக்கலாம் என்று கூறிவிட்டு, உரிமைகள் மறுக்கப்படுவது மட்டும் சமூகநீதிக்குப் புறம்பானது அல்ல; மாறாக வசதிகள் கிடைக்காமல் இருப்பதும்தான் என்கிறார் மோடி. 

அடிப்படை வசதிகள் செய்து தருவது அரசுநிர்வாகத்தின் கடமை இல்லையா? 

உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், வேலை,குடிநீர், மின்சாரம் என எல்லா வசதிகளும்எல்லோருக்கும் கிடைத்திடச்செய்வது நாடாளும் கட்சியின் கொள்கையினை நடைமுறைப் படுத்துவதால் கிடைத்திடும் பயன்தானே. அத னால் தானே மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துகிற ஆட்சி என்று மக்களாட்சிக்கு விளக்கம் சொல்லப்படுகிறது.

அறுபதாண்டு காங்கிரஸ் ஆட்சி செய்யாத சாதனையை அறுபதே மாதங்களில் (ஐந்தாண்டில்) செய்து முடிப்போம் என்று வசனம் பேசிய மோடியின் ஆட்சியின் நான்காண்டு நிறையப் போகிறது. 
ஆனால் ஒரு கிராமத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும்போது மற்றொரு கிராமத்தில் எந்தவசதியுமின்றி இருள்சூழ்ந்து இருப்பது இவரது ஆட்சியில் அதி கரிக்கத்தானே செய்கிறது. 

ஒளிரும் இந்தியாவும் இருளும் இந்தியாவும் நீடிப்பது தானே நரேந்திர மோடி அரசின் சாதனையாக உள்ளது.செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களா வதும் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் தானேமத்திய பாஜக அரசின் நான்காண்டு கால சாதனை. 

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வாழ்வில் தகத்தக சூரிய ஒளியும், அன்றாடங்காய்ச்சிகளின் - ஏழை எளிய மக்களின் வாழ்வில் அந்தகார இருளும் சூழ்வ தற்கு காரணமாக இருந்துவிட்டு அனைத்து இடங்களிலும் அனைத்து வசதிகளும் கிடைப்பதுதான் சமூகநீதி என்று பேசுவது யாருடைய வசதிக்காக? 
யாரை ஏமாற்ற?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தீவிரமான அரசியலுக்கென ஒரு வரையறை இருந்தது. 

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது என்று கூறி சாலைகளில் இறங்கிபோராடக் கூடாது; பெருந்திரள் தொண்டர்கள் பேரணி கூடாது; சிறை நிரப்பும் போராட்டம் கூடாது என்று உரிமைக்காகப் போராடும் ஜனநாயகம் தேவையில்லை என மறைமுகமாகச் சொல்கிறார். 

ஜனநாயக மாண்புகளை சிதைக்கவும் அரசியல் சட்ட உரிமைகளை மறுக்கவும்அரசியல் கட்சிகளுக்கு உபதேசம்செய்கிறார். ஆனால் இந்துத்துவ மதவெறிக் கும்பல்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கலாம்; கொலை வெறியாட்டம் நடத்தலாம்; 
அதற்கு மட்டுமே அனுமதி. 
அதுதான் பாஜகவின் பாசிச பாணி ஆட்சி . 

வளர்ச்சி, வசதி, சமூகநீதி என்று பேசி மக்களை மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார் மோடி. வானொலி ,காணொளிகளில் வாய் கிழிய தற்பெருமை அடிப்பார்  மோடி. 

ஆனால் தன் அரசு மீதான ஊழல் குற்ற சாட்டுகளுக்கு ,ஆட்சி அவலங்களுக்கு,முறைகேடுகளுக்கு பாஜகவினர் வன்முறைக்கு வாயை திறக்கவே மாட்டார்.மக்களவையில் பொது மேடையிலும் கூட .

இந்த மோடி வித்தைக்கு தமிழக மக்கள் மயங்காதது போல் இனி இந்திய மக்கள் மயங்கமாட்டார்கள்.
அதைத்தான் இதுவரை பாஜக கோலோட்சிய மாநிலங்களில் பாஜக பெறத்துவங்கியுள்ள தோல்விகள் சுட்டிக்காட்டுகின்றன.
 "புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
         இகழ்வாரை நோவ தெவன்'
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
கிளம்பியது காண் உழவர் படை.

200 கிலோமீட்டர் பயணித்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தலைநகர் மும்பைக்குள் ஞாயிறன்று நுழைந்தனர். 
அவர்களுக்கு மும்பை நகர மக்கள் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து உற்சாக மாக வரவேற்றனர். 
மும்பையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆனந்த் நகரிலிருந்து ஞாயிறன்று ஆறாவது நாள் பயணத்தை விவசாயிகள் துவங்கியபோது பலரது காலணிகள் ஏற்கனவேஅறுந்துவிட்ட நிலையில் வெறும் காலில் நடந்தனர். சுட்டெரிக்கும் வெயிலால் காலில்வெடிப்புகள் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ஆனாலும் தளராத உறுதியோடு நெடும்பய ணத்தில் முழக்கமிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். 
நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 4 லட்சம் விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 76 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. 
மோடி அரசு தீவிரமாக அமல்படுத்திவரும் நவீன தாராளமய கொள்கைகளால் விவசாயிகள் மேலும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். 
இதற்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நடத்திய 11 நாள் பல்வேறு விவசாயஅமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்தின. அப்போது மாநில பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 
இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதை கைவிட வேண்டும். விவசாயிகளின் விருப்ப த்துடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
 விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 
வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
 ஏழைகளுக்கு வழங்கும் ரேசனை தொடர வேண்டும். 
விவசாயிகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை அமல் படுத்தி தற்கொலையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க நூறுநாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் 
உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த நெடும்பயணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விதான் பவன் என்கிற மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மும்பை நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணமாக வந்து கொண்டிருக்கிறார்கள். 

கடந்த செவ்வாயன்று நாக்பூரில் தொடங்கிய இந்த நெடும்பயணம் 200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறது. 
செங்கொடியும், சிவப்பு தொப்பியுமாக வரும் விவசாயிகளுக்கு வழியெங்கும் மக்கள்வரவேற்பு அளிப்பதோடு ஆயிரம் ஆயிரமாக புதிய பகுதி விவசாயிகள் இணைந்து அவர்களுடன் நடக்கிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்தி வரும் இந்த நெடும்பயணத்திற்கு பல்வேறு அமைப்பு களும், அரசியல் கட்சியினரும் பேராதரவு அளித்து வருகின்றனர். 

பெரும் படையாக வந்துகொண்டிருக்கும் நெடும்பயணம் நகருக்குள் நுழையும்போதே தடுத்து நிறுத்த அரசும், காவல்துறையும் தயாராக இருந்தது.
ஞாயிறு மாலை நகருக்குள் நுழைந்த விவசாயிகளை மும்பை மக்கள் உற்சாக மாக வரவேற்றனர். 
திங்களன்று விதான் பவனில் விவசாயி கள் சங்க தலைவர்களான அசோக் தாவ்லே,அம்ராராம், விஜு கிருஷ்ணன், ஹன்னன் முல்லா, ஜிதேந்திர சௌத்திரி எம்.பி, கே.கே. ராகேஷ் எம்பி, பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசய்ய ஆதம், மகேந்திரசிங், மரியம் தாவ்லே உள்ளிட்டோர் விவசாயிகளை வர வேற்று உடன் செல்ல உள்ளனர்.
======================================================================================
ன்று,
மார்ச்-12.
  • உலக சிறுநீரக தினம்
  • மொரீசியஸ் தேசிய தினம்
  • நியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)
  • ஆஸ்திரேலியாவின்  தலைநகர் கான்பரா என  பெயரிடப்பட்டது(1913)
  • சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)
  • உலக சிறுநீரக தினம்
  • ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் எனப்படுகிறது. உலக சிறுநீரக தினம் 2006ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
 சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
======================================================================================
இ-வே பில்.?
மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்லும்போது எந்த விதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்ல இ-வே பில் நடைமுறை உதவும். 
தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் நடைமுறைக்கு வருகிறது.
சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் தற்போது  கட்டாயமாகும்.
 ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்களுக்கு மேற்பட்ட மதிப்புக்கு  பொருட்களை 10 கி.மீ தொலைவுக்கு மேலான தொலைவுக்கோ அல்லது  மற்றொரு மாநிலத்துக்கு அனுப்பினாலோ கண்டிப்பாக இந்த இ-வே பில் வைத்திருக்க வேண்டும்.அதற்காக அவர்  ஜிஎஸ்டி இணையத் தளத்துக்கு சென்று  பதிவு செய்து  அவராகவே இ-வே பில்லை உருவாக்கிக் கொள்ளலாம்.
பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், இ-வே பில் தேவையில்லை.
அதாவது பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், ஜிஎஸ்டி வர்த்தகரின் பெயர், எந்த இடத்துக்கு பொருட்கள் செல்கிறது, இன்வாய்ஸ் எண், தேதி, பொருட்களின் மதிப்பு, எச்எஸ்என் கோட், வாகனத்தின் எண், அல்லது ரயில்வே, விமானம் குறித்த விவரம், காரணம், வாகன எண் ஆகியவற்றை அந்த இ-வே பில்லில் குறிப்பிட வேண்டும். 
ரூ. 50 ஆயிரம் மதிப்புக்கு அதிகமான பொருட்களை 10கி.மீ தொலைவு அனுப்பினால்கூட இந்த பில் கட்டாயம். ஒரு பொருள் பலரிடம் கைமாறி 3 பில்கள் போட்டிருந்து அதன் கூட்டு மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் இ-வே பில் கட்டாயமாகும்.
இ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்பி, அது வருவாய் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், சரக்குகளின் மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு அபராதம் சரக்கின் உரிமையாளருக்கு விதிக்கப்படும்
தமிழகம், ஆந்திரா, பிஹார், கர்நாடகம், புதுச்சேரி, சிக்கிம், தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் அமலாகிறது. 
மாநிலம் விட்டு வேறு  மாநிலத்துக்கு சரக்குகளை வேகமாக கொண்டு செல்லவும், சுங்கச்சாவடிகளில் லாரிகள் காத்திருப்பை தவிர்க்கவும் இந்த நடைமுறை பயன்படும்.
சரக்குகளை கொண்டு செல்லும் தொலைவைப் பொறுத்து இ-வே பில் செல்லுபடியாகும். 100 கி.மீ தொலைவுக்கு உள்ளாக ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு சென்றால், அந்த இ-வே பில்லின் காலக்கெடு பில் போடப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும். 100 கி.மீ மேலாக இருந்தால், ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் கூடுதாலாக ஒருநாள் செல்லுபடியாகும். இ-வே பில் காலக்கெடு முடிந்துவிட்டால், புதிய இ-வே பில் சரக்குகளின் உரிமையாளரால் உருவாக்கப்பட்டு அதன்பின்புதான் சரக்குகள் கொண்டு செல்லப்பட வேண்டும் . இல்லாவிட்டால்,அபராதம் விதிக்கப்படும். இந்த இ-வே பில் லாரிகள் மட்டுமின்றி, விமானம், ரயில் மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கும் கட்டாயமாகும்.
=======================================================================================
ஆன்மிகப் பயணம்.அரசியல் பேச மாட்டேன் என்றவர் செய்த செயல்.பாஜக அரசியல் கட்சி இல்லையோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?