“அதிசயம் ஆனால் உண்மை”




என்று தலைப்பில்  தினமணி நாளேடு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு- 1988-ஆம் ஆண்டு- செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

திரிபுரா முதல்வராக 10 ஆண்டுகாலம் பதவியில் இருந்த- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நிருபன் சக்கரவர்த்தி பற்றிய அந்தச் செய்தியில், “தேர்தல் தோல்வி காரணமாக அரசு வீட்டை காலி செய்கிற போது, இரண்டு பெட்டிகளுடன் சைக்கிள் ரிக்ஷாவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நோக்கி நிருபன் சென்றார்; ஒரு பெட்டியில் அவருடைய உடுப்புகளும் மற்றொரு பெட்டியில் புத்தகங்களும் இருந்தன. வேறு உடைமைகள் எதையும் கொண்டிருக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த அதிசயம் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. 


நிருபன் 10 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து, வெறுங்கையோடு வெளியேறினார். தோழர் மாணிக் சர்க்கார் 25 ஆண்டுகள் முதல்வராக இருந்து அதேபோல வெளியேறி கட்சி அலுவலகத்தில் குடியேறியுள்ளார்.

தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட், தோழர் ஜோதிபாசு, தோழர்கள் நிருபன் சக்கவரத்தி, தசரத் தேவ், இ.கே. நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன், புத்ததேவ் பட்டாச்சார்யா வரிசையில், தானும் ‘கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர்’ என்று மாணிக் சர்க்கார் நிலைநாட்டியுள்ளார்.பதவி போனாலும், அரசாங்கம் கொடுத்த வீட்டை விட்டு வெளியேற மனது வராதவர்கள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். 

ஆனால், தோழர் மாணிக் சர்க்கார், பதவியை ராஜினாமா செய்த கையோடு, ஒரு முதல்வர் என்ற வகையில் அரசாங்கம் அவருக்கு அளித்திருந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இன்னும் புதிய முதல்வர் பதவியேற்கக் கூட இல்லை என்பது முக்கியமானது.

இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முதல்வர் பதவியை விட்டு விலகி விட்டதால் வீட்டை காலி செய்வது தான் சரியான நடைமுறை; எனவே உடனடியாக வீட்டை காலி செய்து விட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை; அகர்தலாவில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கலாம்தான்; உறவினர்களும் எங்களுக்கு அழைப்பு விடுக்கத்தான் செய்தார்கள். 

ஆனால் நான் கட்சி அலுவலகத்திலேயே தங்க முடிவெடுத்தேன்” என மிகுந்த அடக்கத்துடன் பதிலளித்துள்ளார்.மாணிக் சர்க்காரின் மனைவி பஞ்சாலி மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அகர்தலாவில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்ட சில மாதங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்தார். 

ஆனால் வீட்டு கட்டுமானப் பணிகள் இன்னமும் நிறைவு பெறவில்லை. 
அதுவரை மாணிக் சர்க்காரும் அவரது மனைவியும் கட்சி அலுவலகத்தில் தான் தங்கியிருக்கப் போகிறார்கள்.

"கோடிகள்  அதிபதி' 
    கேடி  பிப்ளவ் குமார் தேவ்
பாஜக ஆட்சியைப் பிடித்ததன் மூலம், திரிபுராவின் ‘ஏழை முதல்வர்’ பெருமை தற்போது பறிபோயிருக்கிறது.

பாஜக சார்பில் திரிபுராவின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள பிப்ளவ் குமார் தேப், மாணிக் சர்க்கார் போல எளிமையானவர் அல்ல. 
திரிபுரா மாநிலத்தில் உள்ள எம்எல்ஏ-க்களிலேயே பெரும்கோடீஸ்வரர் அவர்தான். 

பண்ணாமலிபூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள பிப்ளவ் குமார் தேவ்விடம், 2 கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்து 539 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. 
இது அல்லாமல் அவரது மனைவியின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் இருக்கின்றன. 

பிப்ளவ் குமார் தேப்பின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 290 ரூபாய். அவரது மனைவியின் ஆண்டு வருமானம் 9 லட்சத்து ஆயிரத்து 910 ரூபாய். இவர் தில்லி ஸ்டேட் பேங்க் வங்கி கிளையில் மேனேஜராக இருக்கிறார்.பிப்ளவ் குமாரிடம் கையிருப்பாக மட்டும் 90 ஆயிரத்து 500 இருக்கிறது. நான்கு வங்கிக் கணக்குகள் வைத்துள்ளார். 

அவற்றில் 61 லட்சத்து 93 ஆயிரத்து37 ரூபாய் பணம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் 60 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருக்கிறார். இன்சூரன்சில் 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அவரின் ஒரு இரு சக்கர வாகனத்தின் விலை மட்டும் 1 லட்சத்து60 ஆயிரம் ரூபாய். இவைதவிர 3 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு நகை இருக்கின்றன.80 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு சிறு சொத்துக்கள், பொருட்களும் இருக்கின்றன. 
இவையெல்லாம் பிப்ளவ் குமார் தேப், கணக்கில் “காட்டிய” சொத்துக்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ளவ் குமாருக்கு வயது 49.அசாமில் துவங்கி வடகிழக்கு மாநிலங்களில் இளைஞர்களை முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்ததோடு பேய் மழையென பணத்தைக் கொட்டி, பயங்கரவாதிகளோடும் பிரிவினைவாதிகளோடும் பகிரங்க உறவு கொண்டு பாஜக பின்னிய சூழ்ச்சி வலைகளுக்கு - இரையாகிப் போன திரிபுராவின் ஒரு பகுதி வாக்காளர்கள், பிப்ளவ் குமார் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பினார்கள். 

ஆனால் இன்று (மார்ச் 9) பதவி ஏற்பதற்கு முன்பே இவர் கொடியவர் என்பதை ஒட்டுமொத்த திரிபுராவும் உணர்ந்துவிட்டது.வெற்றிபெற்ற அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு அலுவலகத்திற்கு வந்து, அங்கே வைக்கப்பட்டிருந்த - மறைந்த முதுபெரும் தலைவரும் முன்னாள் இடதுமுன்னணி அரசின் அமைச்சருமான தோழர் காகேந்திர ஜமாதியாவின் உடலுக்கு மரியாதை செலுத்திய கையோடு, அங்கே அமர்ந்திருந்த மகத்தான தலைவர் மாணிக் சர்க்காரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டே, அதே நிமிடத்தில் திரிபுரா முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சிஅலுவலகங்களையும் ஊழியர்களது வீடுகளையும் சூறையாடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார் பிப்ளவ் குமார். 

இப்போதும் சொல்லியிருக்கிறார், மாணிக் சர்க்கார் எங்கள் தந்தையைப் போன்றவர் என்று, ரத்தம் படிந்த கைகளோடு.லெனின் சிலையை தகர்த்தபோதிலும், மாணிக் சர்க்காரின் பெயரைச் சொல்லாமல் இருந்தால் மக்களிடையே மரியாதை கிடைக்காது எனத் தெரிந்து கொண்டார் மகா நடிப்புக்கார - கோடீஸ்வர பாஜக முதலமைச்சர்.
======================================================================================
ன்று,
மார்ச்-09.
  • எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது (1919)
  • பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது(1959)
  • சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது(2006)
======================================================================================
உலகுக்கு புது புது சித்தாந்தங்களை தன் அறிவின் மூலம் பேசிய ஒரு பொதுவுடைமை அறிஞர், பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர், அவர்தான் காரல்மார்க்ஸ். முதன்முதலில் தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே  ஆரம்பப்புள்ளி என்றால் யாரால் நம்ப முடியும். 
காரல் மார்க்ஸ், உலகுக்கு கம்யூனிச சித்தாந்தங்களை வெளிக்கொண்டுவந்தவர். இப்படி அனைத்தையும் உலகுக்கு கொண்டுவந்தவருக்கு வாழ்கை முழுவதும் யார் உறுதுணையாக இருந்திருப்பார் என்றால் அது அவரது மனைவி ஜெனியாகத்தான் இருக்கமுடியும். 
"மனைவி அjenny marxமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. 
ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை, வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர்தான் ஜெனி.
இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை, மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதில்லை, அவர்களே சிறுவயதிலிருந்து நண்பர்களாகி பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்டது. இது ஒரு புரிதலால் உண்டான இருவரின் கதை.
பால்யவயதில் அடாவடியாக சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித்தவித்துள்ளார். 
ஆனால்  ஜெனியின் வீடோ பணக்கார குடும்பம். காரல் மார்க்ஸ் தன் உயர்படிப்பிற்காக படிக்கச்செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லை. 
அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜெனி மட்டும்தான். கல்லூரிக்கு சென்றவுடன் ஜெனிக்காக மதுகுடித்துவிட்டு நண்பர்களுடன் காதல் பாட்டு, கவிதை, ஜெனிக்கு காதல் கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜெனியின் பதில் கடிதத்திற்காக காத்திருந்திருந்தார். 
இப்படி போய்க்கொண்டிருந்தவர் வாழ்ககையில்தான் சமூகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை காதலுடன் மட்டும் பயணித்த காரல், அதன்பின் சமுகத்தையும் தன்னுடன் சேர்த்து பயணிக்கத்தொடங்கினார்.
jenny marxமார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. இங்கு ஊரில் அழகியான ஜெனியை திருமணம் செய்ய வரன்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஜெனி அதை எல்லாவற்ரையும் நிராகரிக்கிறார். மார்க்ஸை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்கிறாள். நீங்கள் நினைப்பது போன்று இவர்கள்  குடும்பத்தில் பணக்கார, ஏழை சண்டை எதுவும் இவர்கள் காதல் கதைகளில் இல்லை. 
ஜெனியின் அப்பாவுக்கு மிகவும்பிடித்தமான ஒருவர் காரல்மார்க்ஸ். ஜெனியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடிதான். 
ஆனால், மார்க்ஸின் வீட்டில்தான் பிரச்சனையே. மார்க்ஸின் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியிருந்தாலும் பூர்விகமாக யூதர்கள். அதுதான் இங்கு பிரச்சனையே, மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என சொல்லிவிட்டார்.
 இதனையடுத்து காரல் மார்க்ஸ் ஜெனியை திருமணம் செய்யவேண்டுமென்றால் முதலில் ஒரு வேலை ஒரு சின்ன சம்பாத்தியம் வேண்டும் என நினைக்கிறார். ஆதலால், ஜெனியிடம் எனக்காக காத்திரு நான் உன்னை வேலைகிடைத்தவுடன் அழைத்து செல்கிறேன் என்கிறார்.
 ஜெனியும் காத்துக்கொண்டே இருக்கிறாள் ஏழு வருடங்கள் ஓடிவிடுகிறது. பின்னர் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க ஜெனியை திருமணம் செய்துகொள்கிறார், சில நிபந்தனைகளுடன்.
 "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவுசெய்தால் போதுமென்று" கூறுகிறார். வெறும் ஐந்து பேர் கொண்டு நடக்கிறது அவர்கள் திருமணம். பொதுவாக பெண்கள் தனக்கு திருமணம் ஆடம்பரமாக நடக்கவேண்டும் என நினைப்பார்கள். 
ஆனால் இங்கு ஜெனியோ "எனக்கு நீ கிடைத்தால் போதும், உன்னுடன் நான் வாழ்ந்தால் போதும்" என்று நினைத்திருப்பார் போல அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்.
jenny marx
இவர்களின் தேன்நிலவுக் கதைகளை கேட்டால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். 
அதற்கு ஜெனியும் நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார். எத்தனை காதலிருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும். இயற்கையை ரசிக்க சென்ற மார்க்ஸ் வீட்டை பூட்ட மறந்துவிட திருடன் வீட்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடிவிடுகிறான்.
 இந்த நிகழ்வை ஜெனியிடம் அவர் சொல்ல, ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கிறார். 
சிரித்துக்கொண்டே, " நாமும் இனி உழைக்கும் வர்க்கம் ஆகிவிட்டோம் என்கிறார். காரல் மார்க்ஸுக்கு போக, போக சமூகத்தின் மீது பற்று அதிகமாகிறது. இவர் செய்யும் வேலைகளுக்கு எங்குபார்த்தாலும் எதிர்ப்புகளாக இருக்க நாட்டை விட்டு வெளியனுப்பப்படுகிறார். 
உடன் மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று எந்த யோசனையும் இல்லாதவராக இருக்கிறார் மார்க்ஸ். இவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் எதுவும் சொல்லாமல் ஜெனியும் இருக்கிறார். காதலனை பார்த்து எந்த நேரத்திலும் "வீட்டை மட்டும் கவனித்தால் போதும், நீங்கள் நாட்டுக்கு ஒன்று செய்யவேண்டாம்" என சொல்லியதே இல்லை.
 வறுமையினால் இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகள் இறந்திருக்கிறது. சுற்றிலும் கடன் நண்பர்கள் உதவியுடன்தான் வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார்கள். 
இதுபோன்று நடக்கும்போது கூட மார்க்ஸ் எதோ ஒரு சமூக யோசனையில்தான்  இருந்திருக்கிறார்.
இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜெனி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அmarxறையில் ஜெனியும், மறு அறையில் மார்க்ஸும்  இருவரும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். 
ஜெனி இறந்து கல்லறையில் புதைக்கும் வரை மார்க்ஸை ஜெனியின் உடலை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. அவளின் நோய் தொற்றிவிடும் என அஞ்சினர்.  இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ். காதல் கடிதங்களில் ஆரம்பித்த அவர்களின் காதல் கடிதங்களோடே முடிகிறது. 
அதில் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்.
 அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியுள்ளார். நான்கு நாட்கள் கழித்து கல்லறையில் பூ வைத்திவிட்டு கண்ணில் நீர் வழிய கதறியிருக்கிறார். 
அதன் பின்னரும் சமூகத்துக்காக போராடவேண்டும் என சமூகப்பணிக்கு வந்திருக்கிறார் இருந்தாலும் மார்க்ஸின் நெருங்கிய நண்பரான ஹெங்கல்ஸ் கூறுகிறார்," ஜெனி இறந்த பின்பு, மார்க்ஸ் ஒரு ஆவியாக மட்டும்தான் இருக்கிறார்" என்று. 
ஒருவேளை தன் பாலிய வயதில் ஜெனியிடம் உரையாடிய ஷேக்ஸ் ஸ்பியர் காதல் கதைகளை கேட்டுக்கொண்டிருந்திருப்பாரோ? 
தன்னை விட நான்கு வயது பெரியவரான ஜெனி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், " நான் உன்னை குழந்தையாக இருக்கும்பொழுதிலிருந்து பார்த்து வருகிறேன் மார்க்ஸ்" என்று. 
மார்க்ஸ் என்ற மாமேதையை உலகறிய செய்த பெருமைக்கு அவரது சித்தாந்தங்கள் எப்படி ஒரு காரணமாக  இருந்ததோ, அதேபோல ஜெனியும் ஒரு காரணமே...


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?